Tuesday, August 14, 2012

பேஸ்புக் போட்டோ ஆல்பம் முழுவதையும் ஒரேதடவையில் கணினிக்கு தரவிறக்க இலகு வழி


ஏதாவது ஒரு தேவையின் நிமித்தம், இதுவரை நீங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றிய அனைத்து புகைப்படங்களையும் கணினிக்கு தரவிறக்கவேண்டிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இதன்போது வழமையான முறையில் ஒவ்வொரு புகைப்படமாக தரவிறக்கிக்கொண்டிருப்பது இலகுவான விடயம் அல்லவே. ஒரு சில புகைப்படங்கள் என்றால் பரவாயில்லை. நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் என்றால்.


அதற்கும் இருக்கிறது ஒரு இலகுவான வழி. Facebook Album Downloader எனப்படும் Firefox add - on மூலமாக நீங்கள் விரும்பிய ஆல்பத்தை ஒரே கிளிக்கில் தரவிறக்கி கொள்ளலாம். 

கீழ் உள்ள இணைப்பில் சென்று (Firefox உலாவியில் மாத்திரம்)  Facebook Album Downloader  add - on ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்

தரவிறக்க இணைப்பு : Facebook Album Downloader


தரவிறக்கி நிறுவியதும் உங்கள் பேஸ்புக் கணக்கிற்கு சென்று புகைப்பட ஆல்பம் பகுதிக்கு செல்லுங்கள். அதில் ஏதாவது அல்பத்தின் மீது Right Click செய்து Download this facebook album என்பதை கிளிக் பண்ணுங்கள்

அடுத்து வரும் விண்டோவில் ஆல்பத்தை கணினியில் சேமிக்கவேண்டிய இடத்தை கேட்கும். இதில் சேமிக்கவேண்டிய Folder ஐ தெரிவு செய்யுங்கள்


தெரிவு செய்ததும் புகைப்படங்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்

இது போன்று ஒவ்வொரு ஆல்பத்தையும் தரவிறக்கி கொள்ளலாம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook, Firefox, Firefox Application

Post Comment

1 comments:

திண்டுக்கல் தனபாலன் on August 15, 2012 at 1:20 PM said...

எளிதாக இருக்கிறதே... மிக்க நன்றி...

பயன்தரும் தகவல்... வாழ்த்துக்கள்...(TM 3)