Wednesday, August 15, 2012

iPhone இற்கான பயனுள்ள இலவச அப்ளிகேஷன்ஸ் 8


iPhone இற்கான சில பயனுள்ள மென்பொருட்கள் பற்றியும் அவற்றின் பாவனை தொடர்பான சிறிய விளக்கத்துடன் இங்கே பட்டியலிடுகிறேன். வாரம் ஒரு தடவை இந்த பதிவு தொடராக வெளிவரும். iPhone அப்ளிகேஷன் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இது Top 10 அல்ல. :)


iPhone இல் தமிழில் ரைப் செய்வதற்கான மென்பொருள். இதுவரை iPhone இற்கு தமிழ் கீபோர்ட் வரவில்லை. இந்த மென்பொருள் கூட தமிழ் கீபோர்ட் முறை அல்ல. இதில் ரைப் செய்துவிட்டு தேவையான இடத்தில் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளலாம்.



தரவிறக்க இணைப்பு : செல்லினம்


அடோபி போட்டோஷாப்பின் iPhone இற்கான மென்பொருள். அடிப்படை போட்டோ எடிட்டிங் வசதிகளை கொண்டுள்ளது. யாரும் பயன்படுத்த தக்கவாறு இலகுவான வடிவமைப்பை கொண்டுள்ளது. கூடவே Zoom வசதியுடன் கூடிய காமெரா அப்ளிகேஷனையும் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். பணம் செலுத்தி பெறும் iPhoto அப்ளிகேஷனை விடவும் சிறப்பானது.


தரவிறக்க இணைப்பு : Adobe Photoshop Express


360 இல் Panorama புகைப்படங்களை எடுப்பதற்கான அப்ளிகேஷன். மிகவும் சிறப்பான முறையில் Panorama புகைப்படங்களை எடுக்கக்கூடியது.



தரவிறக்க இணைப்பு : Photosynth 


Online Cloud Storage சேவை பற்றி அறிந்திருப்பீர்கள். சுருக்கமாக கூறின், எமது தரவுகளை இணையத்தில் தரவேற்றி வைத்திருந்து, தேவைப்படும் சமயத்தில் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் வசதி. இந்த சேவையை சிறப்பாக வழங்கி வரும் Dropbox இற்கான iPhone அப்ளிகேஷனே இது. 



தரவிறக்க இணைப்பு : Dropbox

5. Viber

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி இலவச அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். ஆனால் அழைப்பினை பெற்றுக்கொள்பவரும் Viber User ஆக இருக்கவேண்டும். Skype போன்றது. ஆனால் மொபைல் இற்கு Skype ஐ விட பயனுள்ளது. குறைந்தளவு Network இலும் தெளிவாக இருக்கும்.



தரவிறக்க இணைப்பு : Viber 

6. Chrome

அதிவேகமான இணைய உலவியான Google Chrome இன் iPhone இற்கான அப்ளிகேஷன். iPhone இன் இணைய உலாவி Safri யிலும் பார்க்க வேகம் கூடியது. இலகுவான Multi Tap, Book mark போன்ற வசதிகளை கொண்டுள்ளது.



தரவிறக்க இணைப்பு : Chrome 

7. Private Photo Vault

இந்த அப்ளிகேஷன் மூலம் முக்கியமானவை என நீங்கள் கருதும் புகைப்படங்களை யாரும் பார்க்காதவண்ணம் கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து வைக்கலாம்.



தரவிறக்க இணைப்பு : Private Photo Vault

8. Phonto

iPhone இல் புகைப்படங்களை எடிட் பண்ணுவதற்கான அப்ளிகேஷன். ஏராளமான எஃபெக்ட்ஸ் கொண்டுள்ளது. கூடவே புகைப்படத்தின் மேல் Text Typing செய்யும் வசதியும் உள்ளது கூடுதல் சிறப்பு. 200 இற்கும் மேற்பட்ட Fonts களை கொண்டுள்ளது. நீங்கள் விரும்பிய Fonts ஐயும் நிறுவிக்கொள்ளலாம்



தரவிறக்க இணைப்பு : Phonto 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Apple, iOS, iPhone

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் on August 15, 2012 at 8:01 PM said...

பயனுள்ள பகிர்வு... பாராட்டுக்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...(TM 1)

காட்டான் on August 18, 2012 at 12:41 AM said...

Arumai nanri..;-)

காட்டான் on August 18, 2012 at 12:42 AM said...

Bien marici..!! P