Sunday, September 9, 2012

உளவாளியாகும் தொலைபேசிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்


இன்று multi-feature வசதிகளுக்காக Smart Phone பாவனை உலகம் பூராகவும் விரிவடைந்துள்ளது. எளிமை, ஸ்டைல், உபயோகம் என்பனவும் இந்த Smart Phone கள் மக்களால் பெரிதும் விரும்பபடுவதற்கு காரணமாயிற்று. ஆனால் இந்த Smart Phone கள் உங்களை உளவு பார்க்கும் Spy ஆக தொழிற்படுகின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம். உண்மைதான். ஆனால் இந்த Spy அப்ளிகேஷன்ஸ் வெறுமனே உங்கள் இருப்பிடத்தை மாத்திரம்  track பண்ணாது. கூடவே உங்கள் அன்றாட நடவடிக்கைகளையும் track பண்ணுகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.



இந்த Spy அப்ளிகேஷன்களால் என்ன செய்யமுடியும்?

இந்த வகை அப்ளிகேஷன்கள் உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புக்கள், தொலைபேசியில் இருந்து வெளிச்செல்லும் அழைப்புக்கள் பற்றிய தகவல்களை சேமித்து வைக்கிறது. அழைப்பு வந்த நேரம், பேசிய கால அளவு போன்ற விடயங்கள் உள்ளடங்கலாக. மற்றும் அனுப்பிய பெற்றுக்கொண்ட SMS கள் விபரமும் சேமிக்கப்படுகிறது. SMS ஒன்றை படித்துவிட்டு உடனே அழித்தால் கூட அது பற்றிய விபரமும் திரட்டப்படுகிறது. 

இவை மாத்திரமா... மின்னஞ்சல்கள், சமூகத்தளங்களில் உங்களது நடவடிக்கைகள், உங்களது அரட்டைகள், நீங்கள் உலாவரும் இணையத்தளங்கள் விபரம், பார்க்கும் வீடியோக்கள் போன்ற அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றை விட உங்கள் தொலைபேசியில் உள்ள Contact List, To do list, Notes, ஆடியோ, வீடியோ அனைத்துமே Track பண்ணப்படுகின்றன.

யார் இப்படி செய்கிறார்கள்?

கடந்த 2011 ஆம் ஆண்டே infowars என்னும் இணையத்தளம் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி Smart Phone களின் இயங்குதளங்களில் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு Application இத்தகைய Track பண்ணும் வேலைகளை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வல்லுனர்களால் கண்டறியப்பட்ட இந்த இரகசிய Spy அப்ளிகேஷன் பற்றிய விபரம், அதன் பின்னர் San Francisco நகரில் இடம்பெற்ற Web 2.0 மாநாட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த அப்ளிகேஷன்களின் பின்னணியில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதியாக இப்போது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ம் திகதி FinFisher எனப்படும் Spy புரோகிராம் உலகம் பூராகவும் உள்ள Smart Phone களில் கண்டறியப்பட்டுள்ளது. Bloomberg தளத்தின் குறிப்பின் படி  இந்த FinFisher ஆனது iOS (Apple), RIM ( Blackberry) ஆகியவற்றினூடாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FinFisher ஆனது தேவைப்படும் வேளைகளில் உங்கள் Smart Phone ஐ ஒரு Microphone ஆக மாற்றி உங்கள் உரையாடல்களை ஒட்டுக்கேட்கக்கூடியது. இதே வேளை மொத்தமாக 100 மில்லியன் Smartphone கள் தங்கள் உரிமையாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உளவு பார்ப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

வேறு என்ன தேவைகளுக்காக Spy அப்ளிகேஷன்ஸ் உபயோகிக்கப்படுகின்றன?

சில தொலைபேசி நிறுவனங்களே Spy அப்ளிகேஷன் மூலம் உங்களை கண்காணிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேலே குறிப்பிட்டது போல உங்களது தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதில்லை. மாறாக நீங்கள் தொலைபேசியில் அதிகமாக உபயோகிக்கும் வசதி பற்றி கண்காணிக்கிறார்கள். அதன் நோக்கம் அடுத்து வரும் மாடல்களில் ஏற்கனவே உள்ள குறைகளை சரி செய்யவே

அடுத்தது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளது நடவடிக்கைகளை கண்காணிக்கவும் இந்த Spy அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்துகிறார்கள். Smart Phone களை கவனிப்பின்றி சிறுவர்கள் கையில் கொடுத்தால் அவை பெரும்பாலும் அச்சிறுவர்களை தவறான வழியிலேயே கொண்டுசெல்கின்றன. ஆகவே பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க இத்தகைய Spy அப்ளிகேஷன்ஸை உபயோகிக்கிறார்கள்.

Spy புரோகிராம்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள பதிவின் இடையே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களை கிளிக் செய்யுங்கள்

நிலமைய பார்த்தா வெகு விரைவில் நோக்கியா 3310 இற்கான மார்க்கெட் அதிகரிக்கும்போல :P

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Mobile tips, Smart Phones

Post Comment

0 comments: