Saturday, August 4, 2012

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்


கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை பேஸ்புக் பல புதிய, சிறிய சிறிய  வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பேஸ்புக் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் போது அது தொடர்பான அறிவுறுத்தல்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றை தவற விட்டவர்களுக்காக இந்த பதிவில் புதிய வசதிகள் பற்றிய அறிமுகத்தை தொகுப்பாக தருகிறேன்.


நேற்றைய தினம் பேஸ்புக் அறிமுகப்படுத்திய வசதி, ஒரு குழுவில் பதிவு ஒன்றையோ அல்லது புகைப்படம், Status என்பவற்றையோ பகிரும்போது அதை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதை அறியும் வசதி

இந்த வசதி குழுக்களில் தமது பதிவுகளை பகிரும் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். பார்வையாளர்கள் குறைவாக உள்ள குழுக்களில் பகிர்வதை தவிர்க்கலாம் :)

அடுத்த வசதி, இதே போல நீங்கள் ஒரு Page இற்கு admin ஆக இருந்தால், உங்கள் Page இல் பகிர்ந்த ஒரு விடயத்தை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதை அறியும் வசதி. இது  கடந்த மாதமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது


அடுத்த வசதி Comment Edit. இந்த வசதி மூலம் நீங்கள் இட்ட Comment களை எந்த நேரத்திலும் Edit பண்ணிக்கொள்ளலாம். முக்கியமான விடயம், நீங்கள் Edit பண்ணினாலும் ஏற்கனவே இட்ட Original Comment ஐ அனைவரும் பார்க்கக்கூடியதாக இருக்கும் :(


அடுத்த வசதி பேஸ்புக் சாட்டில் emoticons. இது பலரும் அறிந்த வசதிதான். பேஸ்புக் சாட்டில் emoticons ஐ பயன்படுத்த குறியீடுகளை உபயோகிப்போம். ஆனால் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதி மூலம் விரும்பிய emoticon ஐ கிளிக் பண்ணி உபயோகிக்கலாம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook

Post Comment

1 comments:

திண்டுக்கல் தனபாலன் on August 4, 2012 at 9:09 AM said...

விளக்கமான பகிர்வு...

உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்...

Follower ஆகி விட்டேன் நண்பரே...

பகிர்வுக்கு நன்றி...