Monday, December 17, 2012

PDF File களை எடிட் பண்ணுவதற்கான இலவச மென்பொருள்கள்


Document File களை இணையத்தினூடாகவோ அல்லது வேறு ஊடகங்களினூடாகவோ பகிர்ந்துகொள்வதில் பிரபலமான Format தான் இந்த PDF. ஏனைய Format களோடு ஒப்பிடுகையில் குறைந்த கொள்ளளவு (Size) கொண்டிருப்பதுவே இதன் பிரபலத்துக்கு காரணம். அதோடு பெரும்பாலான மென்பொருள், Device களில் படிக்கமுடியுமே அன்றி Original Format இல் மாற்றம் செய்யமுடியாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, December 16, 2012

Samsung Galaxy S3 (GT 19300) தொலைபேசியை ஆன்ரோயிட் 4.1.2 JellyBean இற்கு Upgrade பண்ணுவதற்கான Guide


Samsung Galaxy S3 தொலைபேசிக்குரிய Official JellyBean Firmware ஏற்கனவே வெளிவந்திருந்தது. இப்போது அதை எப்படி உங்கள் S3 யில் Upgrade பண்ணுவது என்று பார்ப்போம்.

Friday, November 16, 2012

வித்தியாசம் காணமுடியாத போலி Samsung Galaxy S3 சந்தையில்


இன்று இரண்டு போலி Samsung Galaxy S3 ஸ்மார்ட்போன்கள் என் கைக்கு கிடைத்தது. பார்த்ததும் அதிர்ந்துபோனேன்.  உடனடியாக பார்த்ததும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஒரிஜினலை அப்படியே காப்பியடித்து செய்திருக்கிறார்கள்.  இயங்குதளம் கூட ஆன்ரோயிட் தான். சிறிது Modify பண்ணியிருக்கிறார்கள். ஒரிஜினலை பார்க்காமல் போலியை பார்த்தால் நிச்சயம் ஏமாந்துபோவீர்கள்.

Saturday, September 29, 2012

System Information Viewer - உங்கள் கணினி பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள்


உங்களுடைய கணினி பற்றிய பூரணமான தகவல்களை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் மென்பொருள்களின் துணையின்றி கணினி பற்றிய தகவல்கள் அனைத்தையும் பார்ப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஒவ்வொரு விடயங்களை பார்ப்பதற்கும் ஒவ்வொரு பகுதிக்கு செல்லவேண்டும். அவ்வாறு அல்லாமல் கணினி பற்றிய அத்தனை விடயங்களையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு பெற்றுக்கொள்வது? 

Wednesday, September 26, 2012

தனிநபர் பாதுகாப்பை உடைத்தெறிந்த பேஸ்புக்+ஆப்பிள் கூட்டணி


அண்மையில் அப்பிளின் புதிய இயங்குதளமான iOS 6 பல புதிய வசதிகளோடு அறிமுகமாகி இருந்தது அனைவரும் அறிந்த விடயமே. அதில் உள்ள புதிய வசதிகள் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தபோதுதான், தனிநபருடைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சில விடயங்கள் கண்ணில் பட்டது. ஒவ்வொரு வசதிகளாக பார்த்து பார்த்து மெருகேற்றியுள்ள ஆப்பிள் இந்த விடயத்தில் கோட்டை விட்டது மிகப்பெரிய மைனஸ் என்றுதான் சொல்லவேண்டும் :(

Friday, September 21, 2012

உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க புதிய வழி


வணக்கம் நண்பர்களே

நீங்கள் வலைப்பதிவு ஒன்றை சொந்தமாக வைத்திருப்பவரா? அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பவரா? கூகிள் ஆட்சென்ஸ் அப்ளை பண்ணி சோர்வடைந்து போயிருப்பவரா? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். எந்தவித சிரமமும் இன்றி பணம் ஈட்டக்கூடிய வழி ஒன்றை சொல்லித்தரப்போகிறேன். இதன் மூலம் நான் பணம் பெற்றுள்ளேன் :)

iOS6 மேம்படுத்தல் + புதிய வசதிகள்


Apple சில நாட்களுக்கு முன்னர்  தனது புதிய இயங்குதளமான iOS6 ஐ வெளியிட்டிருந்தது. அது பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. அதற்கு முன்னர் எப்படி iOS6 இற்கு அப்கிரேட் பண்ணுவது என்பதை பார்ப்போம்.

கணினி மூலம் அப்கிரேட் பண்ணிக்கொள்ளவேண்டுமாயின் உங்கள் Apple Device ஐ கணினியுடன் இணையுங்கள். அதன்பின்னர் iTunes ஐ Open செய்துகொள்ளுங்கள். அதில் உங்கள் Apple Device பகுதிக்கு சென்று Summery இல் Update என்பதை கிளிக் பண்ணுங்கள் ( Update file Size = 887 MB). கிளிக் பண்ணியதும் Update File தரவிறங்கி Apple Device அப்கிரேட் ஆகும்.

Tuesday, September 18, 2012

பிரபலமான Super Mario வீடியோ கேம் தரவிறக்க இணைப்பு


Super Mario கணினி விளையாட்டை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது என்று சொல்லலாம். கணினி மக்களிடையே புழக்கத்தில் வந்த காலப்பகுதிகளில் மிகவும் பிரபல்யமாக இருந்தது இந்த Super Mario வீடியோ கேம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வீடியோ கேம் இற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. 

Sunday, September 9, 2012

உளவாளியாகும் தொலைபேசிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்


இன்று multi-feature வசதிகளுக்காக Smart Phone பாவனை உலகம் பூராகவும் விரிவடைந்துள்ளது. எளிமை, ஸ்டைல், உபயோகம் என்பனவும் இந்த Smart Phone கள் மக்களால் பெரிதும் விரும்பபடுவதற்கு காரணமாயிற்று. ஆனால் இந்த Smart Phone கள் உங்களை உளவு பார்க்கும் Spy ஆக தொழிற்படுகின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம். உண்மைதான். ஆனால் இந்த Spy அப்ளிகேஷன்ஸ் வெறுமனே உங்கள் இருப்பிடத்தை மாத்திரம்  track பண்ணாது. கூடவே உங்கள் அன்றாட நடவடிக்கைகளையும் track பண்ணுகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.

Tuesday, September 4, 2012

App Store விசேட சலுகை - கட்டன அப்ளிகேஷன்கள் இலவசமாக


iPhone பாவனையாளர்களுக்கு Apps Store ஒரு விசேட சலுகையை வழங்கியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில கட்டண மென்பொருட்களை விசேட சலுகை மூலம் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட தினங்களுக்கு மாத்திரமே. கீழே அவ் அப்ளிகேஷன்களுக்கான இணைப்பு, அவற்றின் உண்மையான கட்டணம் என்பவற்றையும் பட்டியல்படுத்தியுள்ளேன். இணைப்பை கிளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

Wednesday, August 15, 2012

iPhone இற்கான பயனுள்ள இலவச அப்ளிகேஷன்ஸ் 8


iPhone இற்கான சில பயனுள்ள மென்பொருட்கள் பற்றியும் அவற்றின் பாவனை தொடர்பான சிறிய விளக்கத்துடன் இங்கே பட்டியலிடுகிறேன். வாரம் ஒரு தடவை இந்த பதிவு தொடராக வெளிவரும். iPhone அப்ளிகேஷன் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இது Top 10 அல்ல. :)

Tuesday, August 14, 2012

பேஸ்புக் போட்டோ ஆல்பம் முழுவதையும் ஒரேதடவையில் கணினிக்கு தரவிறக்க இலகு வழி


ஏதாவது ஒரு தேவையின் நிமித்தம், இதுவரை நீங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றிய அனைத்து புகைப்படங்களையும் கணினிக்கு தரவிறக்கவேண்டிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இதன்போது வழமையான முறையில் ஒவ்வொரு புகைப்படமாக தரவிறக்கிக்கொண்டிருப்பது இலகுவான விடயம் அல்லவே. ஒரு சில புகைப்படங்கள் என்றால் பரவாயில்லை. நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் என்றால்.

Saturday, August 4, 2012

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்


கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை பேஸ்புக் பல புதிய, சிறிய சிறிய  வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பேஸ்புக் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் போது அது தொடர்பான அறிவுறுத்தல்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றை தவற விட்டவர்களுக்காக இந்த பதிவில் புதிய வசதிகள் பற்றிய அறிமுகத்தை தொகுப்பாக தருகிறேன்.

Monday, July 9, 2012

விண்டோஸ் நிறுவுபவர்களுக்கான கைநூல் Windows Installatin complete guide - Ebook தமிழில்


இன்று பெரும்பாலானவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பாவித்துவருகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு விண்டோஸை முழுமையாக கணினியில் நிறுவ தெரிந்திருக்கும் என்பது சந்தேகமேவிண்டோஸ் இயங்குதளத்தை மீள நிறுவவேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கணினி தொழில்நுட்பவியலாளர்களின் உதவியை நாடவேண்டி வரும். உண்மையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது அவ்வளவு கடினமான வேலையல்ல. விண்டோஸை (Windos XP & Windows7) நிறுவுவதற்கான படிமுறைகளை இங்கு தருகிறேன். விண்டோஸ் நிறுவுதலில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்த கைநூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Wednesday, June 20, 2012

Apple Device களில் iOS 6 Beta வெர்சனை நிறுவுவ இலகுவான வழி


Apple மொபைல் தயாரிப்புக்களில் (iPhone, iPad, iPod) பயன்படுத்தப்படும் இயங்குதளமே iOS. அண்மையில் iOS இன் புதிய வெர்சனான iOS 6 Beta வெளியிடப்பட்டிருந்தது. இதனை எமது Apple Device களில் எப்படி நிறுவுவது என்று பார்ப்போம். அதற்கு முன்னர் சில எச்சரிக்கை குறிப்புகள், iOS 6 என்பது ஒரு Beta வெர்சன் ஆகும். Beta வின் ஆரம்ப படிநிலையில் உள்ளது. ஆகவே முன்னைய iOS களில் உள்ள பல வசதிகள் இதில் இயங்காது. பல Applications இதில் இயங்காது. ஆகவே இது சாதாரண பயனாளர்களுக்கு பொருத்தமற்றது.

Thursday, June 14, 2012

ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?


Skype தொலைத்தொடர்பு சேவையில் மிகச்சிறந்த பங்காற்றிவருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டுவரை 663 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டதோடு நாளுக்கு நாள் Skype இன் உபயோகம் அதிகரித்து வருகிறது. வரைமுறையற்ற இலவசமான பாவனையை வழங்குவதோடு தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க மாத்திரம் குறிப்பிட்ட அளவு பணத்தினை அறவிடுகிறது. இவ்வாறு பல வழிகளிலும் உச்சத்தில் இருக்கும் Skype இல் இதுவரை காலமும் இதில் இருந்த ஒரு குறை பல Skype கணக்குகளை ஒரே கணினியில் கையாள முடியாது என்பதே.

Sunday, June 10, 2012

மறக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் ஆசான் அலன் டூரிங்


அலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரியும்?


இன்று கணனித்திரையில் நாம் எமது பணிகளை செய்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த அற்புத மனிதர்தான். இவர் இல்லாவிட்டால் என்னால் கணனித்திரையில் இதை எழுதவும் முடியாது. உங்களால் படிக்கவும் முடியாது. Binary எண்களாக பகுத்தெழுதி கணிப்பு நடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர். சுருக்கமாக கூறினால் நவீன கணனியின் தந்தை.

Friday, June 8, 2012

இணையத்தை அலங்கரிக்கும் தமிழ் எழுத்துருக்கள் - யுனிக்கோட் என்றால் என்ன?


பல நண்பர்களுக்கு யுனிக்கோட் எழுத்துரு பற்றிய போதிய தெளிவு இல்லாமையை அவதானிக்கமுடிந்தது. யுனிக்கோட் என்பதை அறிந்திருக்கிறார்கள். யுனிக்கோட்டை உபயோகிக்கிறார்கள். ஆனால் யுனிக்கோட் என்றால் என்ன என்பதை பற்றி பூரணமாக அறிந்திருக்கவில்லை. ஆகவே இந்த பதிவு அவர்களுக்கு யுனிக்கோட் பற்றிய ஓரளவு தெளிவை ஏற்படுத்த உதவும் என நம்புகிறேன். பழைய விடயம் தான் எனினும் யுனிக்கோட் பற்றி அறியாதவர்களுக்காக இந்த பதிவு :)

Tuesday, June 5, 2012

2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்


Online Market ஆனது பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இணையத்தள நிறுவுனர்களின் நோக்கமும் தமது தளத்தை சிறந்ததொரு இடத்திற்கு முன்னேற்றுவது மாத்திரமல்லாது அதன் மூல குறிப்பிட்டதொரு வருவாயை ஈட்டுவதாகத்தான் இருக்கும். அந்தவகையில் 2012 ஆம் ஆண்டில் அதிக வருவாயை பெற்றுக்கொண்ட 30 இணையத்தளங்களை அவற்றின் வருமானத்திற்கேப வரிசைப்படுத்துகிறேன்.

Sunday, June 3, 2012

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?


எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.

Android தொலைபேசிகளுக்கான Top 5 இணைய உலாவிகள் ( web bowsers)


இன்றைய நாளை பொறுத்தவரை மிக பிரபலமான, அதிகமானவர்களால் விரும்பி உபயோகிக்கப்படும் தொலைபேசி இயங்குதளம் என்றால் அது Android தான். இதனால் பல நிறுவனங்களும் Android இற்கான Application களை அதிகமாக வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் Android இற்கான Top 5 இணைய உலாவிகளை பார்ப்போம்.

Wednesday, May 30, 2012

SkyDrive இல் 25GB இலவச இடவசதியை பெறுவது எப்படி?


SkyDrive என்பது Microsoft இன் Online Cloud Storage சேவையாகும். இது Google இன் google Drive, மற்றும் Dropbox போன்றவற்றினை ஒத்ததே. ஆரம்பத்தில் 5GB இலவச இடவசதியை வழங்கிவந்த SkyDrive பின்னர் அதனை 7GB ஆக உயர்த்தியிருந்தது. google drive 5GB இடவசதியையும் Dropbox 2GB இடவசதியையும் வழங்கிவருகின்றன. ஆனால் Dropbox அண்மையில் சிறப்பு சலுகை ஒன்றின் மூலமாக 16GB இடவசதியினை வழங்கியிருந்தது.

Sunday, May 27, 2012

Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?


தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர Video Sharing தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.

Monday, May 14, 2012

பேஸ்புக்கில் புதிய வசதி - விரைவில் வருகிறது Fecebook App Center


பேஸ்புக் வெகுவிரைவில் Facebook App Center என பெயர் கொண்ட தமது Apps Store ஐ வெளியிடப்போகிறார்கள். பேஸ்புக் அப்ளிகேஷன் பிரியர்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி என்பதில் சந்தேகமில்லை. கேம்ஸ் உட்பட இலட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் பேஸ்புக்கில் உள்ளன. இவற்றில் ஸ்பாம் அப்ளிகேஷன்களும் உள்ளடக்கம். இவற்றை இனி இந்த Facebook App Center மூலம் இலகுவாக கையாளலாம். இதில் ஸ்பாம் அப்ளிகேஷன்களுக்கெதிராக பேஸ்புக் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் என நினைக்கிறேன். பார்போம் :(

விரைவில் வெளிவரும் iPhone 5 - அதிரடியான தகவல்கள்+புகைப்படங்கள்


iPhone இன் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPhone 5. நாளுக்கு நாள் இது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்தமே உள்ளன. iPhone பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பை iPhone 5 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது iPhone 5 பற்றிய சில தகவல்களும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. iPhone 5 விசேடமான LiquidMetal என்னும் உலோமம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. LiquidMetal எனப்படுவது வெவ்வேறு உலோகங்களை கலந்து உருவாக்கப்பட்டது.

Friday, May 11, 2012

பேஸ்புக்கில் அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிக்கலாம்


பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிப்பது என்பது இதுவரை காலமும் முடியாத ஒரு விடயமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது அந்த வசதி ஒரு Extension மூலம் சாத்தியமாகிறது.  பேஸ்புக்கில் Message களை அழிக்கும் வசதியை ஏற்கனவே பேஸ்புக் வழங்கிவந்தது. ஆனால் அதில் எதிர்பார்க்கப்பட்ட வசதிகள் எவையும் இல்லை. முதலில் பேஸ்புக் அளித்த வசதியை பயன்படுத்தி எப்படி Message களை அழிப்பது என்று பார்ப்போம்.

Monday, April 30, 2012

Dropbox இல் 16 GB அளவுவரை இடவசதியை பெறுவதற்கான சிறப்பு சலுகை-விரைந்திடுங்கள்


Dropbox என்றால் என்ன?

Dropbox என்பது ஒரு Online Cloud Storage சேவையினை வழங்கும் தளம். அதாவது உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், Documents போன்றவற்றை Online இலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையினை பல தளங்கள் வழங்கி வந்தாலும் Dropbox சிறப்பானதோடு அவ்வப்போது பல சலுகைகளையும் வழகிவருகிறது.

Thursday, April 26, 2012

அமெரிக்கா, கனடாவிற்கு android ல் இருந்து இலவச அழைப்பை மேற்கொள்வது எப்படி?


உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியில் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு படைப்புகள் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையில் இப்போது யார் பேச்சைக் கேட்டாலும் அன்ரோயிட் பற்றியே பேச்சாக இருக்கிறது. குறுகியதொரு காலப்பகுதியில் அன்ரோயிட் பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி ஆச்சரியமானதே.

Wednesday, April 25, 2012

Spam, வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி


பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது” என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். பேஸ்புக் தொடர்பான எனது கடந்த பதிவுகளில் இதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

Sunday, April 22, 2012

பேஸ்புக்கை இலகுவாக உபயோகிப்பதற்கான ShortCuts


நாம் கணினிகளில் நம் வேலைகளை இலகுபடுத்துவதற்காக Shortcut எனப்படும் குறுக்குவிசைகளை பாவிப்போம். இதனால் கணினியில் எம் வேலைகளை இலகுவாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதே போல் பேஸ்புக்கிற்கென்றும் சில குறுக்குவிசைகள் (Shortcuts) இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதன்மூலம் பேஸ்புக்கில் விரைவாக செயற்படமுடியும்.

அவசியம் தெரிந்திருக்கவேண்டிய இணைய பாதுகாப்பு- Online Security


இப்போது கிராமத்துக்கு கிராமம் மூலை முடுக்கு எங்கும் இணையத்தின் பாவனை பரந்துள்ளது. அனைவருக்கும் எதோ ஒரு வகையில் இணையம் தேவைப்பொருளாகிவிட்டது. அதில் பெரும்பாண்மையான இடத்தை சமூக வலைத்தளங்கள் பிடித்துள்ளன.

இப்படி இணையத்தில் உலாவரும் அநேகருக்கு கணினி மற்றும் இணையம் பற்றிய பூரண தெளிவோ பாதுகாப்போ தெரிந்திருப்பதில்லை. தமது தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டால் போதும் என நினைக்கும் இவர்கள் இணையத்தில் காத்திருக்கும் ஆபத்துகளுக்குள் தங்களை அறியாமலேயே சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே இணையத்தை பாவிக்கும் அனைவரும் இணைய பாதுகாப்பு பற்றி அடிப்படையையேனும் அறிந்திருத்தல் அவசியம்.

Friday, April 20, 2012

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே மின்னஞ்சலில் கையாளுவது எப்படி


எல்லோரும் எமது தனிப்பட்ட, தொழில்ரீதியான தேவைகளை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்போம். இதன்போது Gmail மட்டும் என்றல்லாமல் வேறுபட்ட பல சேவைகளை பாவிப்போம். உதாரணமாக Yahoo, HotMail போன்றவற்றை பாவிப்போம். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கையாளுவது சாத்தியமா? அதில் பெரிய சிரமம் உள்ளது அல்லவா? ஆகவே அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே மின்னஞ்சலில் வைத்து உபயோகிக்கக்கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்.

Monday, April 16, 2012

பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ ஆஃப் செய்வது எப்படி


பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.

Sunday, April 15, 2012

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி


கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.

பேஸ்புக் Chat இல் பயன்படுத்துவதற்கான அழகிய 7 வர்ணப்படங்கள்


Chat வசதியை வழங்கும் தளங்களுள் இப்போது பிரபலமாக இருப்பது பேஸ்புக் Chat. இங்கு வெறும் சாட் மாத்திரமன்றி அவ்வப்போது வேடிக்கையான பல வசதிகளையும் அறிமுகப்படுத்தி பாவனையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் பேஸ்புக்கில் கலர் கலராய் சாட் பண்ணுவது எப்படி?  மற்றும் அட்டகாசமான Facebook Emotion smileys என இரு பதிவுகளை பேஸ்புக் Chat தொடர்பாக எழுதியிருந்தேன்.

Thursday, April 5, 2012

சிறந்த 5 CDMA Android தொலைபேசிகள், இலங்கை, இந்திய விலையுடன்


symbian மற்றும் iOS இயங்குதளங்களை கொண்ட தொலைபேசிகளை விட Android இயங்குதளத்தை கொண்ட தொலைபேசிகளை பாவனையாளர்கள் அதிகம் விரும்பி பாவித்து வருகிறார்கள். காரணம் Android தொலைபேசிகள் ஒப்பீட்டளவில் அதிக வசதிகளை கொண்டிருப்பதும் விலை குறைவாக இருப்பதுமே. Android இயங்குதளத்துடன் WCDMA என்னும் 3G அதிவேக தகவல்பரிமாற்ற வசதியையும் கொண்ட சிறந்த 5 தொலைபேசிகளின் விபரத்தை இலங்கை மற்றும் இந்திய விலைகளுடன் பட்டியல் படுத்துகிறேன்.

Sunday, April 1, 2012

ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடக்கும் விடயங்கள். அதிரவைக்கும் ஆச்சரியம்


இணையத்தில் என்னென்ன விடயங்கள் நடக்கின்றன என்று அறிவதற்கு எப்போதாவது நீங்கள் முயற்சித்து இருக்கிறீர்களா? இணையம் எல்லையற்றது என்ற வாசகத்தை தாண்டி அங்கெ ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பதை அறிந்தால் தலை விறைத்து போவீர்கள். ஒரு நாளில் 60 செக்கன்களுக்குள் என்னென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பதை தொகுத்து தருகிறேன்

Thursday, March 29, 2012

Android தொலைபேசிக்கான Opera Mini இன் புதிய பதிப்பு Opera Mini 7 வெளியிடப்பட்டது


Android தொலைபேசிகளுக்கான Opera Mini யின் புதிய பதிப்பான Opera Mini 7 இன்று வெளியிடப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கான இணைய உலாவிகளில் அதிக வேகமுடையதும், பிரபலமானதும் Opera Mini ஆகும். மாதாந்தம் கிட்டத்தட்ட 160 மில்லியன் பாவனையாளர்களை கொண்டது.

Wednesday, March 28, 2012

கைத்தொலைபேசியில் Youtube வீடியோவை இலகுவாக தரவிறக்க


கைத்தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை பார்க்கும் போது உங்களை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படலாம். அடிக்கடி பார்க்கவேண்டிய வீடியோக்களை தரவிறக்கி வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட Bandwidth ஐ விரயம் செய்யத்தேவையில்லை. கணினியில் என்றால் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் தொலைபேசிகளில் இது சற்று சிரமமானதே.

Monday, March 26, 2012

Gmail இற்கு வரும் Spam மெயில்களை Automatic ஆக அழிப்பது எப்படி


மின்னஞ்சல் பாவிப்பவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய அசௌகரியம் என்று சொன்னால் அது இந்த Spam மெயில்கள்தான். முன்னர் இந்த Spam மெயில்களும் ஏனைய மெயில்களுடன் சோ்ந்து Inbox இல் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது பெரும்பாலான மெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் Spam மெயில்களை Spam Filter மூலம் கண்டறிந்து அவற்றை பிரித்து Spam என்னும் பிரிவினுள்(Folder) போட்டுவிடுகின்றன.

Saturday, March 24, 2012

Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் -2


Windows இயங்குதளத்தை பாவிப்பவர்கள் அடிக்கடி ஏற்படும் Windows Error பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பார்கள்.  ஏற்கனவே Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையும் அதற்கான தீர்வும் என்னும் தலைப்பில் windows இல் ஏற்படும் பிரச்சினை சம்மந்தமாக ஒரு பதிவினை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகிறது.

Tuesday, March 20, 2012

பேஸ்புக்கில் காத்திருக்கும் ஆபத்து - Share பண்ணும் புகைப்படங்களை அகற்றமுடியாது


முதலிடத்தில் இருக்கும் சமூக வலைத்தளம் பேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. பாவனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல முன்னேற்றகரமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது சில குறைபாடுகளையும் விட்டுச்செல்கிறது

பென் ட்றைவின் (Pen Drive) வேகத்தை அதிகரிக்க இலகு வழி


உங்கள் பென் ட்றைவ் மிகவும் Slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய Data களை பரிமாற்றம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.

முதலில் பென் ட்றைவை கணினியில் இணையுங்கள். அதன் பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E)

Monday, March 19, 2012

இணையத்தளம் ஒன்றை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தடை செய்வது எப்படி?


இணையம் என்பது கணக்கற்ற பொழுதுபோக்குகளின் உறைவிடம். இணையத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் இருக்கும். பலருக்கு இணையம் ஒரு போதை போல. வேலைவெட்டி எல்லாம் மறந்து இணையத்தில் மூழ்கி கிடப்பார்கள். அதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?

Friday, March 16, 2012

Mozila Firefox உலவியில் இணையத்தளங்களை தடைசெய்வதற்கான Add-On


Mozila Firefox  உலவியில் தேவையற்ற இணையத்தளங்களை முடக்குவது தற்போது இலகுவான முறையாக காணப்படுகிறது. அதாவது Mozila Firefox  உலவி இதற்காக புதிதான ஒரு Add on ஐ வெளியிட்டுள்ளது. இந்த Add on மூலம் தேவையற்ற இணையத்தளங்களை முடக்க கூடியதாக உள்ளது.உதாரணமாக பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் தடுக்க வேண்டும் எனில் இந்த Add - on சென்று Block List இல் www.facebook.com என்று கொடுத்துவிட்டால் அதன் பின்னர் பேஸ்புக் தளத்தை பார்வையிடமுடியாது.

Tuesday, March 13, 2012

Android தொலைபேசிகளை ஆட்டோமாட்டிக்காக Silent Mode இற்கு மாற்றும் மென்பொருள்- தரவிறக்க


தொலைபேசிகளை எல்லோரும் இரவு வேளைகளில், எம்மை தொந்தரவு செய்யாதிருக்கும்பொருட்டு  Silent Mode இல் வைத்திருப்போம் அல்லவா? இதற்கு தினமும் இரவு வேளைகளில் Manual ஆக Silent Mode இற்கு மாற்றி வைப்போம். ஆனால் Android தொலைபேசிகளில் Automatic ஆக தினமும் இரவுவேளையில் Silent Mode இற்கு மாறிக்கொள்ளும் வகையில் Application ஒன்று வெளிவந்துள்ளது.

கம்பியூட்டர் command prompt ஆச்சரியமான வசதிகள்


command prompt ஐ பயன்படுத்தி கணினி மானிட்டரை தற்காலிகமாக Off செய்வதற்கான இலகு Shotcut பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். கணினியில் சாதாரணமாக செய்யமுடியாத பல விடயங்களை command prompt மூலம் செய்யலாம். இப்போது command prompt ஐ பயன்படுத்தி செய்யக்கூடிய சில வசதிகளை பார்ப்போம்.

கீழ்வரும் 4 கட்டளைகளுக்கும் Nircmd நிறுவியிருக்கவேண்டும். இதுபற்றி இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். Click Here

Monday, March 12, 2012

மார்ச் 16 விற்பனைக்கு வரும் iPad3 பற்றிய அதிரடியான தகவல்கள்


Apple நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPad 3 என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே iPad 3 பற்றிய பல செய்திகள் வெளிவந்தமிருந்தன. iPad 3 யின் வடிவமைப்பு பற்றியும் பாகங்களின் செயல்திறன் பற்றியும் பல தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

கணினி மானிட்டரை தற்காலிகமாக Off செய்வதற்கான இலகு Shotcut


கணினி இயக்கத்தில் இருக்கும்போதே மானிட்டரை off செய்வதற்கு மானிட்டரில் உள்ள Power பட்டனை பாவிப்போம். இதற்கு ஒரு ShortCut இருந்தால் எப்படி இருக்கும். இலகுவாக இருக்கும் அல்லவா? அதோடு சாதாரண மானிட்டர்களுக்கு Power பட்டனை உபயோகிப்பது இலகுவாக இருக்கும். 30 inch மானிட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும் அல்லவா? அதற்கு ஒரு Shortcut இருந்தால் உபயோகமாக இருக்கும். அப்படி ஒரு Shorcut ஐ எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.

Friday, March 9, 2012

Android தொலைபேசிகளுக்கான Top 5 Call, SMS Block மென்பொருட்கள்


தொலை தொடர்பாடலில் பெரும்பங்கு வகிப்பவை கையடக்க தொலைபேசிகளே. அதி உன்னத வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கையடக்க தொலைபேசிகளால் சில எரிச்சலூட்டும் விடயங்களும் இல்லாமலில்லை. பல நேரங்களில் வேண்டத்தகாத Call கள், SMS கள் என அவதிப்படவேண்டி வரும். இப்படியான சந்தர்ப்பங்களில், உங்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை மாத்திரம் Block பண்ணுவதற்கென பல மென்பொருள்கள் உள்ளன. 

அந்த வகையில் Android தொலைபேசிகளுக்கான சிறந்த 5 Call Block மென்பொருட்களின் பட்டியலை இங்கே தருகிறேன்.

Thursday, March 8, 2012

நீங்கள் பார்வையிடும் இணையத்தளம் பாதுகாப்பானதா என அறிய


நீங்கள் பார்வையிடும்/ பார்வையிடப்போகும் இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திவிட்டுத்தான் பார்வையிடுகின்றீர்களா? அந்த தளங்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறீர்கள்? தனிப்பட்ட நபர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு தளத்தை நம்பி பார்வையிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏன் என்றால் இணைய வலைப்பின்னலில் கோடிக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பான  தளங்களை பிரித்தறிவது கடினம்.

Wednesday, March 7, 2012

20$ பெறுமதியான அட்டகாசமான Inpaint மென்பொருள் முற்றிலும் இலவசமாக


புகைப்பட எடிட்டிங் துறையிலே Adobe Photoshop, Photo Impact போன்ற தரம்வாய்ந்த மென்பொருள்கள் இருந்தாலும், அவை சாதாரணமான பாவனையாளர்களால் இலகுவாக பயன்படுத்த முடியாதவை. ஆனால் இப்போது இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் பல சிறிய சிறிய மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. Photoshop போன்ற மென்பொருள்களில் செய்ய கஷ்டமாக இருக்கும் சில செயற்பாடுகளை கூட இதுபோன்ற சிறிய மென்பொருள்களின் உதவியுடன் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது.

Monday, March 5, 2012

இணைய மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த 6 தளங்கள்


நீங்கள் HTML, Java, CSS போன்ற இணைய மொழிகளை கற்கும் மாணவரா? அல்லது இவ் இணைய மொழிகளை ஆன்லைனிலேயே கற்பதற்கு சரியான தளங்களை தேடிக்கொண்டிருப்பவரா? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு நல்ல பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறேன்.

இணைய மொழிகளின் அடிப்படைகளை இலகுவான முறையில் கற்றுத்தரும் சிறந்த 6 தளங்களை இங்கு பட்டியல் படுத்துகிறேன்.

Windows 8 Consumer Preview தரவிறக்க


Windows நிறுவனத்தார் விண்டோஸ் 7 பதிப்புக்கு அடுத்து குறுகிய காலத்தில் தமது அடுத்த பதிப்பையும் வெளியிட்டுள்ளனர். அத தான் Windows 8 பதிப்பு. இவ் பதிப்பு ஏற்கனவே ஒரு தடவை முன்னோட்ட பதிப்பாக வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட பதிப்பில் சில தவறுகள் காணப்பட்டமையால் அந்த பதிப்பை மக்களிடத்தே அறிமுகப்படுத்தவில்லை விண்டோஸ் நிறுவனத்தார்.

Sunday, March 4, 2012

இணைய இணைப்பில்லாமல் iPod ஐ Restore பண்ணுவது எப்படி


iPod இன் பாஸ்வேர்டை மறக்கும் தருணங்களிலோ அல்லது iPod இன் Software Version ஐ Upgrade செய்யவேண்டிய தருணங்களிலோ உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படும். கணினியுடன் iPod ஐ இணைத்தது iTunes மென்பொருளினூடாக Restore என்பதை கொடுத்து Upgrade பண்ணும்பொழுது இணைய இணைப்பினூடாக iPod இற்குரிய Firmware தரவிறக்கப்பட்டு அதன் பின்னர் install ஆகும்.

ஆனால் இணைய இணைப்பில்லாமல் எப்ப்டி iPod ஐ Restore பண்ணுவது? அதற்கான வழிகளை கீழே சொல்கிறேன்.

Thursday, March 1, 2012

Dynamic டெம்ளேட் இற்கான Widgets ஐ வெளியிட்டது ப்ளாக்கர்


அண்மையில் ப்ளாக்கர் Dynamic Views ஐ வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. பலருக்கு இந்த Dynamic Views பிடித்திருந்தாலும் மாற்றிக்கொள்ளாததற்கு காரணம் Dynamic Views இல் எந்தவித விட்ஜெட்டும் இல்லாததே. ப்ளாக்கருக்கு விட்ஜெட் தான் முக்கியமானவை. ஆகவே Dynamic Views இற்கு மாற்ற தயங்கினார்கள்

Wednesday, February 29, 2012

ஜீமெயில் உங்களுக்கு வழங்குகிறது ஆன்லைன் இடவசதி.


உங்களிடம் ஜீ மெயில் கணக்கு உள்ளதா? அப்படியாயின் கூகிள் வழங்கும் அசத்தலான சேவை ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆம் நீங்கள் ஜீமெயில் கணக்கு வைத்திருந்தால் போதும் உங்கள் கணனியில் Drive ஆக பயன்படுத்தும் வசதியை Gmail வழங்கியுள்ளது. இந்த சேவையில் 25Mb அளவுள்ள இடவசதி வழங்கப்படுகிறது.

Monday, February 27, 2012

1 GB File ஒன்றை 10 MB ஆக குறைக்கும் மென்பொருள்


 File களின் அளவுகள் எப்போதுமே எமக்கு பிரச்சினையான ஒரு விடயமாகவே இருக்கிறது. ஒரு கணினியில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதானாலும் சரி, இணையம் மூலம் Share பண்ணுவதானாலும் சரி, கூடிய அளவுள்ள File கள் பெரும் தலையிடியை கொடுக்கும். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு என்ன வழி?. 

இதற்காகவே வந்துள்ளது ஒரு மென்பொருள். KGB Archiver எனப்படும் இம் மென்பொருள்  1 GB அளவுள்ள File ஒன்றை 10 MB அளவிற்கு குறைத்து Compress பண்ணுகிறது. இதனால் அதிக கொள்ளளவுள்ள File களையும் இலகுவாக பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.

Sunday, February 26, 2012

Android தொலைபேசிகளை Wi-Fi மூலம் Sync பண்ணுவது எப்படி


 Smart Phone களை Sync பண்ணுவதற்கு அவற்றை USB கேபிள் மூலம் கணினிகளில் இணைத்து Sync பண்ணுவோம். ஆனால் இப்போது புதிய வசதியாக Wireless முறையில் தொலைபேசிகளை Sync பண்ணும் முறை Android வகை தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மென்பொருளை Android Marketplace இல் இருந்து தரவிறக்கி பயன்படுத்தவேண்டும். AirDroid  எனப்படும் இந்த மென்பொருள் முற்றுமுழுதாக இலவசமானது.

Wi-Fi மூலம் தொலைபேசியை கணினியுடன் இணைத்து Sync பண்ண இந்த மென்பொருள் உதவுகின்றது.

Thursday, February 23, 2012

ஹார்ட் டிஸ்கில் இருக்கும் தரவை முழுவதுமாக அழிப்பது எப்படி


ஹார்ட் டிஸ்க் இல் இருந்து (Recycle bin) நாம் Delete செய்யும் தரவுகள்  நிரந்தரமாக ஹார்ட் டிஸ்கில் இருந்து அழிக்கப்படுகின்றனவா? நிச்சயமாக இல்லை. இவை ஏனைய தரவுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வண்ணம் ஹார்ட் டிஸ்கில் உள்ள இடைவெளியில்  Re-writable முறையில் சேமிக்கப்படுகின்றன. அதாவது நீங்கள் புதிய தரவுகளை சேமிக்கும்போது ஹார்ட் டிஸ்கில் இடம் போதவில்லை என்றால் இவற்றை அழித்துவிட்டு அதில் சேமித்துக்கொள்ளும். 

Tuesday, February 21, 2012

பேஸ்புக்கின் புதிய Timeline ஐ உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைப்பது எப்படி


பேஸ்புக் அண்மையில் தனது வடிவமைப்பை Timeline ஆக மாற்றியிருந்தது. இந்த மாற்றம் சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. பலர் Timeline ஐ பழைய தோற்றத்திற்கு மாற்ற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். Timeline ஐ பழைய தோற்றத்தை மாற்றுவதற்கு Extensions, Add- ons என்பவை வந்திருந்தன. அதை கொண்டு பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

லேப்டாப்பை (laptop) பாதுகாப்பதற்கான இலகு வழிகள் - A Complete Guide- பாகம் 2


பாகம் 1 ஐ படிக்க கிளிக்

சிறந்த பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவி கொள்ளுங்கள்.

கணினி பாதுகாப்பிற்கென ஏராளமான மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் சிறந்த மென்பொருள்களை தெரிவு செய்து பயன்படுத்தலாம். IObit Toolbox என்னும் மென்பொருள் இவற்றுள் சிறப்பானது. Cleaning, Repairing, security என 20 வகையான Categories ஐ கொண்டுள்ளது இந்த மென்பொருள்.

லேப்டாப்பை (laptop) பாதுகாப்பதற்கான இலகு வழிகள் - A Complete Guide


நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக/ நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பாதுகாப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.

Monday, February 20, 2012

BitTorrent இன் புதிய பதிப்பு ஆச்சரியமான பல வசதிகளுடன் வெளியிடப்பட்டது


நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் Bittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் Bittorrent தனது புதிய பதிப்பான Bittorrent 7.6 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது.

Saturday, February 18, 2012

பில்கேட்ஸின் விண்டோஸ் அன்றில் இருந்து இன்றுவரை


ஒருவழியாக விண்டோஸ் 8 இன் logo வடிவமைப்பு முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Windows Xp ஐ வெளியிட்ட Microsoft அதன் மிகப்பெரிய விற்பனை/வெற்றிக்கு பின்னர் 2006 நவம்பர் மாதம் windows Vista எனப்படும் சொதப்பல் இயங்குதளத்தை பல குறைகளுடன் வெளியிட்டு தோல்வி கண்டது. அதற்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் Windows 7 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டது. வெற்றியும் கண்டது.

Wednesday, February 15, 2012

Far cry ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் கேம்


ஆக்‌ஷன் வீடியோ கேம் பிரியர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் அது Far Cry தான். System requirements மிகவும் குறைவாக உள்ள அதேவேளை அதி உச்ச கிராபிக்ஸ் நுட்பத்தையும் கொண்டது இந்த கேம்.

ஜாக் என பெயர் கொண்ட மாலுமி ஒருவன் ஊடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென் பசுபிக் இல் அமைந்துள்ள  Micronesia என்னும் தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த தீவின் அருகே தரித்து நிற்கும்போது அங்குள்ள ஆயுதக்குழுவினரால் அவனது படகு தாக்கி அழிக்கப்படுகிறது. ஊடகத்தை சேர்ந்த பெண் அக்குழுவினரால் கைது செய்யப்படுகிறாள். அதில் இருந்து தப்பும் ஜாக், அந்த தீவினுள் நுழைந்து அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறான்.

Friday, February 10, 2012

பேஸ்புக்கின் புதிய Photo Viewer - அசத்தலான வசதி


பேஸ்புக் தனது போட்டோ viewer ஐ கடந்த 2011 ஆம் ஆண்டு Classic View வில் இருந்து  Light Box view ஆக மாற்றியிருந்தது. அதில் சில கூடுதல் வசதிகள் இருந்தாலும் பலருக்கு அந்த மாற்றம் பிடிக்கவில்லை. காரணம் Light Box view வானது லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டதுதான். அந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக இப்போது வேறு ஓர் வடிவத்திற்கு போட்டோ Viewer ஐ மாற்றியுள்ளது.

முன்னைய போட்டோ Viewer இலும் பார்க்க பல மேம்பட்ட வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விரைவாக லோட் ஆகிறது.

Thursday, February 9, 2012

ஜிமெயிலில் புதிய வசதி - Insert Image


ஜிமெயிலில் இதுவரை காலமும் புகைப்படம் ஒன்றை அனுப்புவதற்கு, அந்த புகைப்படத்தை Attach பண்ணியே அனுப்பவேண்டும். இல்லாவிடில் வேறு தளங்களில் உள்ள புகைப்படங்களை Drag and Drop முறையில் இழுத்து விடவேண்டும். நேரடியாக கணினியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜிமெயில் Body இல் Insert பண்ணமுடியாது.

Wednesday, February 8, 2012

Google Chrome இன் புதியதொரு இணைப்பு. G News


Google Chrome  உலவி தனது சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் பயனாளார்கள் இலகுவான முறையில் செய்திகளை அறியும் பொருட்டும் G News எனும் புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இச் சேவையை Google Chrome  உலவியின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

இச் சேவை பெருமளவான Google Chrome பயனாளர்களின் ஆதரவை பெற்றுள்ளது.  Google Chrome  உலவியினால் இச் சேவையை வழங்குவதன் மூலம் அனேகமானோர் பயனடையக்கூடியாதாக உள்ளது. ஏனெனில் உலகில் அதிகளவானோர் பயன்படுத்தும் உலவியாக Google Chrome காணப்படுவதால் இவ் சேவை அனேகரின் விருப்பத்திற்குரிய சேவையாக காணப்படுகிறது.

Saturday, February 4, 2012

Internet Download Manager ஐ Firefox உலாவியில் பெற்றுக்கொள்வது எப்படி?


தரவிறக்கிகளிலே எப்போதும் No:1 ஆக இருப்பது IDM தான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி கூறலாம். தரவிறக்க வேகம் கூடியது என்பதோடு தரவிறக்க இணைப்புக்கள் இருக்கும் இடங்களில் Automatic ஆக அந்த இணைப்பை எடுத்துக்கொள்ளக்கூடியது. உதாரணமாக நீங்கள் YouTube இல் ஒரு காணொளியை பார்க்கும்போது அந்த காணொளிக்கான தரவிறக்க இணைப்பை தானாகவே தரும்.

ஆனால் Firefox இன் 3 ஆவது பதிப்புக்கு பின் வந்த பதிப்புக்களில் தரவிறக்க இணைப்புக்களை IDM தானாக எடுப்பதில்லை. காரணம் Firefox 4 இற்கு பின்னர் Firefox இற்கான IDM இன்  Ad-on ஐ Firefox இனால் அப்டேட் செய்யமுடியாமல் போனமையே.

Thursday, February 2, 2012

Windows7 இன் மொத்த பாவனையும் ஒரு Box இல்: அட்டகாசமான மென்பொருள்


பெரும்பாண்மையான கணினி பாவனையாளர்கள் உபயோகப்படுத்தும் இயங்குதளம் Windows என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் Windows ஐ உபயோகிக்கும் பலருக்கு அதன் Settings, Functions எல்லாம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும்.

அப்படிப்பட்டவர்களின் பாவனையை இலகுபடுத்தும் பொருட்டு ஒரு இலகுவான, சிறிய மென்பொருள் வெளியாகியுள்ளது.

Wednesday, February 1, 2012

Firefox இன் புதிய பதிப்பு Firefox 10 வெளியாகியது


கடந்த 9 மாத காலப்பகுதிக்குள் Mozilla Firefox இணைய உலாவியானது பதிப்பு 4 இல் இருந்து அடுத்தடுத்து புதிய பதிப்புக்களை வெளியிட்டு இப்போது புதிய பதிப்பாக Firefox 10 உம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் பலர் Firefox 4 ஐ தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது  இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் தொடர்ந்து தனது அடுத்த பதிப்புக்களை வெளியிடுவதற்கு காரணம் அடுத்தடுத்து அசத்தலான வசதிகளை அறிமுகப்படுத்திவரும் Chrome இன் வளர்ச்சி என்பது அறிந்ததே.

Tuesday, January 31, 2012

Twitter இற்கான Firefox இன் 5 அட்டகாசமான அப்ளிக்கேஷன்


சமூக வலைத்தளங்களில் Facebook இற்கு அடுத்தபடியாக, நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துவரும் சமூக வலைத்தளம்தான் Twitter. உலகளாவிய ரீதியில் 9 ஆவது இடத்தையும், அமெரிக்காவில் 8 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த வருட கணிப்பீட்டின்படி Twitter சமூக வலைத்தளமானது 300 மில்லியன் பாவனையாளர்களை கடந்துவிட்டிருந்தது.

இந்த Twitter தளத்தை இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தவென Firfox உலாவியில் ஏராளமான Add-Ons, Plug-Ins, Toolbar போன்றன உள்ளன.

Friday, January 27, 2012

ப்ளாக்கரில் புதிய வசதி; G+ Counter பட்டன் டாஸ்போர்டிலேயே


ப்ளாக்கர் அடுத்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் G+ Counter பட்டன் வலைத்தளத்திலேயே இருந்துவந்தது. ஆனால் இப்போது அந்த வசதிய ப்ளாக்கர் டாஸ்போர்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ளதுபோல் உங்கள் பதிவுகள் G+ இல் சேர் பண்ணப்பட்ட எண்ணிக்கையை டாஸ்போர்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

Wednesday, January 25, 2012

Torrent Files ஐ IDM இல் தரவிறக்க அதிரடி ஐடியா


Bittorent, Utorrent என Torrent File களை தரவிறக்கவென நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் Internet Download Manager உடன் ஒப்பிடுகையில் அவற்றின் தரவிறக்க வேகம் மிகவும் குறைவே. ஆனால் Torrent File களைத்தான் Internet Download Manager இல் தரவிறக்க முடியாதே.

ஆனால் இப்போது அதற்கும் வழி வந்துவிட்டது. Torrent Files ஐ Internet Download Manager இல் தரவிறக்கிக்கொள்ளலாம்

விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?


Windows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. கணனி வன்பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்படப்போவதாயின் அல்லது ஏற்கனவே சில பழுதுகள் ஏற்பட்டிருந்தாலோ அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

Monday, January 23, 2012

75 இற்கும் மேற்பட்ட File களை ஒரே மென்பொருளில் கையாள


கணினியில் அதிகளவான மென்பொருள்களை நிறுவுவதனால் கணினியின் வேகம் குறைவடைய அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு File Format ஐயும் கையாளுவதற்கு ஒவ்வொரு மென்பொருளை நிறுவியிருப்போம். இவ்வாறு அதிக மென்பொருட்களை நிறுவும்போது Hard Disk இல் அதிக இடத்தை பெற்றுக்கொள்வதனாலும், இயங்கும்போது Memory இல் அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதனாலும் கணினியின் வேகம் குறைகிறது. ஆகவே இந்த பிரச்சினைய தீர்த்துக்கொள்வதற்கு உள்ள ஒரே வழி அனைத்து விதமான File Format களையும் ஒரே மென்பொருள்ளில் கையாளுவதுதான்.

Saturday, January 21, 2012

பேஸ்புக்கில் கலர் கலராய் சாட் பண்ணுவது எப்படி?


பேஸ்புக்கில் நாளும்பொழுதும் ஏதாவது ஒரு Trick வந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்போது புதிதாக வந்துள்ள வசதி Facebook Chat இல் வர்ணமயமான எழுத்துக்களை  பயன்படுத்தி Chat பண்ணுவது.

இது ஏற்கனவே வந்த Facebook Chat இல் Profile Picture ஐ அனுப்புவது போன்றதுதான். அடைப்புக்குறிக்குள் சில Code களை இடுவதன் மூலம் இதனை பெறலாம். உதாரணமான [[106596672714242]] என்று இட்டால் என்று சாட்டில் வரும். இப்படி A இல் இருந்து Z வரை அனைத்து எழுத்துக்களுக்கும் Code உள்ளது. அவை கீழ்வருமாறு..

Friday, January 20, 2012

ப்ளாக்கரில் Lable ஐ பயன்படுத்தி Resent Post விட்ஜெட் வைக்கலாம்


ப்ளாக்கரில் Resent Post என்னும் ஒரு விட்ஜெட் உள்ளது. எமது சமீபத்திய பதிவுகளை வரிசைப்படுத்தும் விட்ஜெட். ஆனால் அந்த விட்ஜெட்டின் மூலம் சமீபத்திய பதிவுகளை பதிவுகளின் Leble களுக்கேற்ப பிரிக்கமுடியாது.

இதற்கு சிறிய விட்ஜெட் Code ஒன்றை சேர்ப்பதன் மூலம் இந்த விட்ஜெட்டை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக எனது தளத்தில் Facebook Tips, Blogger Tips என்ற Resent Post விட்ஜெட் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இது Lable ஐ வைத்து Navication Bar வைப்பதுபோன்றதுதான்.  உங்கள் பதிவுகளுக்கு Lable இட்டிருக்கவேண்டியது அவசியம்.

Thursday, January 19, 2012

வீழ்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் பிளேக்பெரி


பிளக்பெரி என்ற பெயரை சாதாரணமாக ஒருவாரால் இலகுவில் மறந்து விடமுடியாது. அந்தளவுக்கு அப்பெயர் மக்களிடையே பிரபல்யம் பெற்று  மதிப்பு மிக்க நாமத்தை கையடக்க தொலைபேசி வரலாற்றில் பெற்றிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2003 ம் ஆண்டில் பிளக்பெரியின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்த நிலையில் இருந்தது. இதனால் பிளக்பெரியின் விற்பனையும் அக்காலத்தில் சூடுபிடித்திருந்தது. அதிலும் தொழில் முறை பயனாளர்களிடையே இது பெரும் வரவேற்ப்பு பெற்று காணப்பட்டது. பிளக்பெரி தாயாரிப்புக்கள் யாவும் ஆர்.ஐ.எம் ( R.I.M ) Research in Motion  நிறுவனமே தாயாரித்து வருகின்றது. இவ் நிறுவனம் கனடா நாட்டைச் சோ்ந்தது. இது தொலைத் தொடர்பு மற்றும் கம்பி இல்லாத சாதன தாயாரிப்பு நிறுவனமாகும்

Wednesday, January 18, 2012

உங்கள் பெயர் எத்தனை தளங்களில் பாவிக்கப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டுமா


உலகத்தில் ஒரு பெயர் ஒருவருக்கு மட்டும் இருப்பதில்லை. ஒரு பெயரில் எத்தனையோ பேர் இருப்பார்கள். ஏதாவது இணையத்தளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது உங்களுக்கே இந்த விடயம் தெரிந்திருக்கும். நீங்கள் உங்கள் பெயரில் கணக்கினை உருவாக்கும்போது “ இந்த பெயர் ஏற்கனவே பாவனையில் உள்ளது” என்று எச்சரிக்கை வந்திருக்கும். 

ஆகவே உங்கள் பெயரில் எத்தனை இணையத்தள கணக்குகள் இருக்கிறது என்று அறியவேண்டுமா? namechk.com என்ற இணையத்தளம் உங்கள் பெயர் எங்கெங்கெல்லாம் பாவிக்கப்பட்டிருக்கிறது என 80 இற்கும் மேற்பட்ட பிரபலமான தளங்களில் தேடித்தருகிறது.

ஒரு அசத்தலான இலவச கன்வேர்ட் மென்பொருள்


Format Factory  இவ் மென்பொருள் மூலம் அனைத்து விதமான Video, Audio , Image கோப்புக்களை இலகுவான முறையில்  Convert செய்ய முடிகிறது. அது மட்டுமின்றி இந்த Converter மூலம் பழுதடைந்த  Multimedia கோப்புக்களை திருத்தி பாவிக்க கூடிய நிலை காணப்படுகிறது. அதோடு நாங்கள் பயன்படுத்தும் Multimedia கோப்புக்களின் அளவினைக்குறைத்து இலகுவான முறையில் அவைகளை கையாளும் வசதியும் கூடுதலாக இருப்பது சிறப்பம்சம்

இணைய இணைப்பு இல்லாமல் Windows இயங்குதளத்தை அப்டேட் செய்திட


Microsoft நிறுவனம் தனது Windows இயங்குதளத்திற்கான அப்டேற்றினை குறிப்பிட்டதொரு காலத்திற்கொருமுறை வெளியிட்டுக்கொண்டிருக்கும். இந்த அப்டேற்றானது Security மற்றும் சில அடிப்படை/ அவசியமான வசதிகளை கொண்டிருக்கும். Windows இனை அப்டேற் செய்வதற்கு கணினி இணைய வசதியினை கொண்டிருக்கவேண்டும்.

இப்போது இணைய வசதி இல்லாதவர்களும் அல்லது வேகம் குறைந்த இணைப்பு வசதி உள்ளவர்களும் வெளி இடங்களில் இருந்து அப்டேற்றினை தரவிறக்கி பயன்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. Autopatcher. என்னும் மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் Windows இனை அப்டேற் செய்துகொள்ளலாம்.

Tuesday, January 17, 2012

Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையும் அதற்கான தீர்வும்


Windows இயங்குதளத்தை பாவிப்பவர்கள் அடிக்கடி ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியிருப்பார்கள். புதிதாக வன்பொருள் (Hardware) ஏதாவது நிறுவும்போதோ அல்லது கணினியில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதோ திடீரென நீல ஸ்கிரீனில் irql_not_less_or_equal in Xp அல்லது irql_not_less_or_equal in Windows7 என்ற எச்சரிக்கையுடன் கணினி  Restart ஆகும். இதற்கு காரணம் கணினியில் நிறுவப்பட்ட Hardware இற்குரிய பொருத்தமான Driver நிறுவப்படாமையே ஆகும். சரியான Driver நிறுவப்படாதவிடத்து அது உங்கள் கணினியை கிராஷ் செய்கிறது. இதன்போதே Windows இந்த எச்சரிக்கையை காட்டுகிறது.

உண்மையில் இதற்குரிய காரணம் என்னவென்றால்,சில Driver கள் பாதுகாக்கப்பட்ட, மெமறி பகுதியில் நுழைய முயற்சிக்கின்றன. அதனாலேயே இந்த எச்சரிக்கை காட்டப்படுகிறது.

எச்சரிக்கை கீழ்க்கண்டவாறு இருக்கும்

Saturday, January 14, 2012

இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி


எவ்வளவுதான் Antivirus மென்பொருட்கள் கணினியில் வைரஸ் ப்ரோகிராம் களை தேடி தேடி அழித்தாலும் வைரஸ்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை. சாதாரணமாக பென் டிரைவ், சிடிக்கள் மூலம் பரவும் வைரஸ்களை விட இணையம் மூலம் பரவும் வைரஸ்/ Malware கள் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. Malware நிறைந்த websites களை பார்வையிட்டாலோ அல்லது Browser Toolbar களை கணினியில் Install செய்வதலோ இந்த Malware கள் கணினிக்குள் நுழைகின்றன. Antivirus மென்பொருட்களில் இத்தகைய Malware/ வைரஸ்களை கண்டறிவதற்கான Tools கள் இணைந்து வந்தாலும் அவற்றால் ஓரளவிற்கு மேல் இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை.

இதற்கு நாமாகவே சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

Friday, January 13, 2012

அட்டகாசமான Facebook Emotion smileys


Facebook இல் பல smileys உலாவருவதை கண்டிருப்பீர்கள். ஒரு பகுதியினருக்கு இது பற்றி தெரிந்தாலும் பலருக்கு இதை எவ்வாறு Post செய்வது என்று தெரிவதில்லை. அப்படி தெரியாதவர்களுக்கள் இதை பார்த்து அறிந்துகொள்ளுங்கள். கீழுள்ள அட்டவணையில் முதலாம் கட்டத்தில் உள்ள smileys களை பெறுவதற்கு இரண்டாம் கட்டத்தில் உள்ள குறியீடுகளை உள்ளீடு செய்யுங்கள்.

இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்


இன்றை உலகில் இணையம் என்பது ஒரு சாதரணமான விடயமாக மாறிவிட்டது. இன்று எல்லா விடயத்துக்கும் இன்று இணையம் பெரிதும் பயன்படுகிறது. இதனால் இணைய பாவனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இணையம் என்பது ஆரம்ப காலத்தில் மிக குறைந்த வேகத்திலேயே செயற்பட்டது. அக்காலத்தில் Dial up connection  என அழைக்கப்படும். கம்பி வழி தொலைபசியின் நேரடி இணைப்பின் முலமே இணைய இணைப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு  கொடுக்கப்பட்ட இணைய இணைப்பு அக்காலத்தில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகவே காணப்பட்டது. இவ் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான செலவு அதிகம் என்பதால் ஒரு சிலரே இந்த இணைப்பை பெற்றிருந்தனர்.

ப்ளாக்கரின் Comment Reply வசதியை முழுவதுமாக ஆக்டிவேட் செய்ய


அண்மையில் ப்ளாக்கரில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. Comments இற்கு அந்த Comments இற்கு கீழேயே Reply பண்ணும் வசதி. ஆனால் இந்த வசதி முழுவதுமாக அனைவருக்கும் கிடைக்கவில்லை. சிலருக்கே கிடைத்திருந்தது.

இப்போது அந்த வசதியை அனைவரும் அக்டிவேட் செய்து கொள்ளலாம்.

Thursday, January 12, 2012

உங்கள் கணினிகளை வைரசிடம் இருந்து பாதுகாக்க- Bitdefender 2012 Review


கணினி நுட்பம் வளர வளர கூடவே கணினிகளை பாதிக்கும் வைரஸ்களும் வளர்ந்து வளர்ந்து பெரும் சவாலை கொடுக்கின்றன. கணினிகளை பாவிப்பதை விட இந்த வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பதிலேயே அனைவரினதும் நேரம் கழிந்துவிடும்.

கணினியை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கவென ஏராளமான ஆன்ரிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. ஆனால் அவற்றில் சிறந்தவற்றை தேடிப்பிடித்து பாவித்தால்தான் வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பை பெறமுடியும். அந்தவகையில் முன்னனியில் இருக்கும் ஒரு அன்ரிவைரஸ் மென்பொருளான Bitdefender Antivirus தனது புதிய பதிப்பான Bitdefender Antivirus Plus 2012 ஐ அன்மையில் வெளியிட்டிருந்தது.

Wednesday, January 11, 2012

பதிவுகளை பிரபலமாக்க ஒரு அதிரடி ஐடியா- Use Hootsuite


எமது பதிவுகள் ஏனையவர்களை சென்றடைவதற்கும், பிரபலமடைவதற்கும் திரட்டிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் அந்த திரட்டிகளை விட சமூக வலைத்தளங்களே ஏராளமான வாசகர்களை எமது பதிவுகள் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மையாகும். எமது சமூக வலைத்தள கணக்குகளிலும், பேஸ்புக்கில் இருக்கும் குழுக்களிலும் இதுவரை நாம் பதிவுகளை பகிர்ந்து வந்திருப்போம்.

Tuesday, January 10, 2012

Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிப்பதற்கான வழி


Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்கலாமா? ஆம் அழிக்கலாம். அதுவும் இலகுவாக அழிக்கலாம்.

பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். அல்லது சிலர் ஆரம்பத்தில் ஒரு கணக்கை வைத்திருந்துவிட்டு பின்னர் வேறு ஒரு கணக்கை உபயோகிக்கலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்ப்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.

ப்ளாக்கரில் Pop up பேஸ்புக் Like Box உருவாக்க இலகு வழி


எமது ப்ளாக்கின் Pageviews ஐ அதிகரிப்பதற்கு ஏற்கனவே எல்லோரும் Facebook Like Page ஒன்றை உருவாக்கி வைத்திருப்போம். இதன் மூலம் எமது பதிவுகளுக்கு Facebook இல் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி அவர்கள் அந்த Page இன் மூலமாக தொடர்ந்து எமது பதிவுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆகவே Page Likes என்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் எமது தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். பலர் ஏற்கனவே Facebook Like Box வைத்திருந்தாலும் அதை ப்ளாக்கின் ஓரமாக எங்காவது வைத்திருப்பார்கள். இதனால் தளத்திற்கு வருபவர்கள் அதை கவனிக்காமல் செல்ல வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே Facebook Like Box ஐ பொப் அப் விண்டோவாக வைத்தால் அதிகம் பேரை சென்றடையும் அல்லவா!

Monday, January 9, 2012

Facebook இல் போலி Profile ஐ இலகுவாக அடையாளம் காண 10 வழிகள்


Facebook இன் பாவனை நாளுக்கு நாள், கிராமத்துக்கு கிராமம் என அதிகரித்துவரும் நிலையில், நல்ல நோக்கத்திற்காக Facebook ஐ பாவிப்போரை விட வேண்டத்தகாத செயல்களுக்காக பாவிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான போலிகளின் செயற்பாடுகளால் ஏனையோருக்கு பல விதங்களிலும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பிடிக்காதவர்களுடன் வீண் சச்சரவு செய்ய, வேண்டத்தகாத பிரச்சாரங்கள் செய்ய என்று இவர்களின் நோக்கம் இருக்கிறது. அதைவிட சில இணையத்தளங்கள் தங்கள் பதிவுகளை Facebook இல் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.

Sunday, January 8, 2012

Facebook இல் புதிய பிரச்சினை.. தீர்ப்பது எப்படி


Facebook இல் அண்மைக்காலமாக ஒரு பிரச்சினை அனைத்து பாவனையாளர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. ஏதாவது இணைப்புக்களை Facebook இல் Share பண்ணும்போது Captcha Code கேட்டு கணக்கை Verify பண்ணும்படி கேட்கும். இப்படி அடிக்கடி கேட்பதால் பெரும் இடைஞ்சலாக இருக்கும்.

இதற்கு காரணம் தற்போது Facebook தன் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதே. சாதாரணமான பாவனையாளர்களைவிட Facebook அப்ளிகேஷன் வடிவில் வரும் Spam இணைப்புக்களை கிளிக் செய்தவர்களுக்கு இந்த பிரச்சினை தொடர்ந்து இருக்கும். அவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கும் ஸ்பாம் பரவுவதை தடுப்பதற்கான ஏற்பாடே இந்த Captcha Code.

கடவுளுடன் இணையத்தில் Chat பண்ண ஆசையா


இணையம் என்பது பொழுதுபோக்குகளின் உறைவிடம். ஏராளமான பொழுதுபோக்குகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றிலே பிரபலமானது Chatting வசதி. அநேகம் பேர் பயன்படுத்தும் வசதியாகவும் இந்த Chatting உள்ளது. நண்பர்களுடன் chat பண்ணுவதற்கான வசதியினை பல இணையத்தளங்கள் வழங்கிவருகின்றன. ஆனால் கடவுளுடன் Chat பண்ணலாமா? ஆம் Chat பண்ணலாம். ஆனால் உண்மையான கடவுளுடன் அல்ல. IGod என்ற இணைய அப்ளிகேஷன் மூலம்.

Saturday, January 7, 2012

Facebook மூலம் எந்த நாட்டிற்கும் இலவசமாக SMS அனுப்பலாம்


இலவசமாக SMS அனுப்பும் வசதியை பல தளங்கள் தருகின்றன. ஆனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சமூகத்தளங்களில் இந்த வசதி இருந்தால் எப்படி இருக்கும். பயன்படுத்த இலகுவாக இருக்கும் அல்லவா?

இப்போது இந்த வசதி பேஸ்புக்கில் அப்ளிகேஷனாக அறிமுகமாகியுள்ளது.Chat SMS என்னும் இந்த அப்ளிகேஷனில் 100 கரெக்டர் கொண்ட SMS ஐயே அனுப்ப முடியும்.

Wednesday, January 4, 2012

எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி


இப்போது எங்கும் இணையவேகம் ஆகக்குறைந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது (ஒரு சில பிரதேசங்கள் தவிர்த்து) . சாதாரணப் பாவனைக்கு எந்த இணைய வேகமுமே கைகொடுக்கிறது. ஆனால் தரவிறக்கத்தை பொறுத்தவரை அதிவேக இணப்புகள் மாத்திரமே சரியாகிறது. 1 ஜிபி அளவுள்ள ஒரு File ஐ தரவிறக்கவேண்டுமானால் ஒருநாள் முழுதும் செலவழிக்கவேண்டியுள்ளது. சிறிய அளவுள்ள file கள் என்றால் Internet Download Manager மூலமாகவோ அல்லது Orbit மூலமாகவோ விரைவாக தரவிறக்கிவிடலாம். ஆனால் அதிக கொள்ளளவுடைய File களை தரவிறக்குவதில்தான் பிரச்சினை.