Wednesday, February 29, 2012

ஜீமெயில் உங்களுக்கு வழங்குகிறது ஆன்லைன் இடவசதி.


உங்களிடம் ஜீ மெயில் கணக்கு உள்ளதா? அப்படியாயின் கூகிள் வழங்கும் அசத்தலான சேவை ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆம் நீங்கள் ஜீமெயில் கணக்கு வைத்திருந்தால் போதும் உங்கள் கணனியில் Drive ஆக பயன்படுத்தும் வசதியை Gmail வழங்கியுள்ளது. இந்த சேவையில் 25Mb அளவுள்ள இடவசதி வழங்கப்படுகிறது.

Monday, February 27, 2012

1 GB File ஒன்றை 10 MB ஆக குறைக்கும் மென்பொருள்


 File களின் அளவுகள் எப்போதுமே எமக்கு பிரச்சினையான ஒரு விடயமாகவே இருக்கிறது. ஒரு கணினியில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதானாலும் சரி, இணையம் மூலம் Share பண்ணுவதானாலும் சரி, கூடிய அளவுள்ள File கள் பெரும் தலையிடியை கொடுக்கும். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு என்ன வழி?. 

இதற்காகவே வந்துள்ளது ஒரு மென்பொருள். KGB Archiver எனப்படும் இம் மென்பொருள்  1 GB அளவுள்ள File ஒன்றை 10 MB அளவிற்கு குறைத்து Compress பண்ணுகிறது. இதனால் அதிக கொள்ளளவுள்ள File களையும் இலகுவாக பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.

Sunday, February 26, 2012

Android தொலைபேசிகளை Wi-Fi மூலம் Sync பண்ணுவது எப்படி


 Smart Phone களை Sync பண்ணுவதற்கு அவற்றை USB கேபிள் மூலம் கணினிகளில் இணைத்து Sync பண்ணுவோம். ஆனால் இப்போது புதிய வசதியாக Wireless முறையில் தொலைபேசிகளை Sync பண்ணும் முறை Android வகை தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மென்பொருளை Android Marketplace இல் இருந்து தரவிறக்கி பயன்படுத்தவேண்டும். AirDroid  எனப்படும் இந்த மென்பொருள் முற்றுமுழுதாக இலவசமானது.

Wi-Fi மூலம் தொலைபேசியை கணினியுடன் இணைத்து Sync பண்ண இந்த மென்பொருள் உதவுகின்றது.

Thursday, February 23, 2012

ஹார்ட் டிஸ்கில் இருக்கும் தரவை முழுவதுமாக அழிப்பது எப்படி


ஹார்ட் டிஸ்க் இல் இருந்து (Recycle bin) நாம் Delete செய்யும் தரவுகள்  நிரந்தரமாக ஹார்ட் டிஸ்கில் இருந்து அழிக்கப்படுகின்றனவா? நிச்சயமாக இல்லை. இவை ஏனைய தரவுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வண்ணம் ஹார்ட் டிஸ்கில் உள்ள இடைவெளியில்  Re-writable முறையில் சேமிக்கப்படுகின்றன. அதாவது நீங்கள் புதிய தரவுகளை சேமிக்கும்போது ஹார்ட் டிஸ்கில் இடம் போதவில்லை என்றால் இவற்றை அழித்துவிட்டு அதில் சேமித்துக்கொள்ளும். 

Tuesday, February 21, 2012

பேஸ்புக்கின் புதிய Timeline ஐ உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைப்பது எப்படி


பேஸ்புக் அண்மையில் தனது வடிவமைப்பை Timeline ஆக மாற்றியிருந்தது. இந்த மாற்றம் சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. பலர் Timeline ஐ பழைய தோற்றத்திற்கு மாற்ற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். Timeline ஐ பழைய தோற்றத்தை மாற்றுவதற்கு Extensions, Add- ons என்பவை வந்திருந்தன. அதை கொண்டு பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

லேப்டாப்பை (laptop) பாதுகாப்பதற்கான இலகு வழிகள் - A Complete Guide- பாகம் 2


பாகம் 1 ஐ படிக்க கிளிக்

சிறந்த பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவி கொள்ளுங்கள்.

கணினி பாதுகாப்பிற்கென ஏராளமான மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் சிறந்த மென்பொருள்களை தெரிவு செய்து பயன்படுத்தலாம். IObit Toolbox என்னும் மென்பொருள் இவற்றுள் சிறப்பானது. Cleaning, Repairing, security என 20 வகையான Categories ஐ கொண்டுள்ளது இந்த மென்பொருள்.

லேப்டாப்பை (laptop) பாதுகாப்பதற்கான இலகு வழிகள் - A Complete Guide


நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக/ நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பாதுகாப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.

Monday, February 20, 2012

BitTorrent இன் புதிய பதிப்பு ஆச்சரியமான பல வசதிகளுடன் வெளியிடப்பட்டது


நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் Bittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் Bittorrent தனது புதிய பதிப்பான Bittorrent 7.6 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது.

Saturday, February 18, 2012

பில்கேட்ஸின் விண்டோஸ் அன்றில் இருந்து இன்றுவரை


ஒருவழியாக விண்டோஸ் 8 இன் logo வடிவமைப்பு முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Windows Xp ஐ வெளியிட்ட Microsoft அதன் மிகப்பெரிய விற்பனை/வெற்றிக்கு பின்னர் 2006 நவம்பர் மாதம் windows Vista எனப்படும் சொதப்பல் இயங்குதளத்தை பல குறைகளுடன் வெளியிட்டு தோல்வி கண்டது. அதற்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் Windows 7 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டது. வெற்றியும் கண்டது.

Wednesday, February 15, 2012

Far cry ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் கேம்


ஆக்‌ஷன் வீடியோ கேம் பிரியர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் அது Far Cry தான். System requirements மிகவும் குறைவாக உள்ள அதேவேளை அதி உச்ச கிராபிக்ஸ் நுட்பத்தையும் கொண்டது இந்த கேம்.

ஜாக் என பெயர் கொண்ட மாலுமி ஒருவன் ஊடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென் பசுபிக் இல் அமைந்துள்ள  Micronesia என்னும் தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த தீவின் அருகே தரித்து நிற்கும்போது அங்குள்ள ஆயுதக்குழுவினரால் அவனது படகு தாக்கி அழிக்கப்படுகிறது. ஊடகத்தை சேர்ந்த பெண் அக்குழுவினரால் கைது செய்யப்படுகிறாள். அதில் இருந்து தப்பும் ஜாக், அந்த தீவினுள் நுழைந்து அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறான்.

Friday, February 10, 2012

பேஸ்புக்கின் புதிய Photo Viewer - அசத்தலான வசதி


பேஸ்புக் தனது போட்டோ viewer ஐ கடந்த 2011 ஆம் ஆண்டு Classic View வில் இருந்து  Light Box view ஆக மாற்றியிருந்தது. அதில் சில கூடுதல் வசதிகள் இருந்தாலும் பலருக்கு அந்த மாற்றம் பிடிக்கவில்லை. காரணம் Light Box view வானது லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டதுதான். அந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக இப்போது வேறு ஓர் வடிவத்திற்கு போட்டோ Viewer ஐ மாற்றியுள்ளது.

முன்னைய போட்டோ Viewer இலும் பார்க்க பல மேம்பட்ட வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விரைவாக லோட் ஆகிறது.

Thursday, February 9, 2012

ஜிமெயிலில் புதிய வசதி - Insert Image


ஜிமெயிலில் இதுவரை காலமும் புகைப்படம் ஒன்றை அனுப்புவதற்கு, அந்த புகைப்படத்தை Attach பண்ணியே அனுப்பவேண்டும். இல்லாவிடில் வேறு தளங்களில் உள்ள புகைப்படங்களை Drag and Drop முறையில் இழுத்து விடவேண்டும். நேரடியாக கணினியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜிமெயில் Body இல் Insert பண்ணமுடியாது.

Wednesday, February 8, 2012

Google Chrome இன் புதியதொரு இணைப்பு. G News


Google Chrome  உலவி தனது சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் பயனாளார்கள் இலகுவான முறையில் செய்திகளை அறியும் பொருட்டும் G News எனும் புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இச் சேவையை Google Chrome  உலவியின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

இச் சேவை பெருமளவான Google Chrome பயனாளர்களின் ஆதரவை பெற்றுள்ளது.  Google Chrome  உலவியினால் இச் சேவையை வழங்குவதன் மூலம் அனேகமானோர் பயனடையக்கூடியாதாக உள்ளது. ஏனெனில் உலகில் அதிகளவானோர் பயன்படுத்தும் உலவியாக Google Chrome காணப்படுவதால் இவ் சேவை அனேகரின் விருப்பத்திற்குரிய சேவையாக காணப்படுகிறது.

Saturday, February 4, 2012

Internet Download Manager ஐ Firefox உலாவியில் பெற்றுக்கொள்வது எப்படி?


தரவிறக்கிகளிலே எப்போதும் No:1 ஆக இருப்பது IDM தான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி கூறலாம். தரவிறக்க வேகம் கூடியது என்பதோடு தரவிறக்க இணைப்புக்கள் இருக்கும் இடங்களில் Automatic ஆக அந்த இணைப்பை எடுத்துக்கொள்ளக்கூடியது. உதாரணமாக நீங்கள் YouTube இல் ஒரு காணொளியை பார்க்கும்போது அந்த காணொளிக்கான தரவிறக்க இணைப்பை தானாகவே தரும்.

ஆனால் Firefox இன் 3 ஆவது பதிப்புக்கு பின் வந்த பதிப்புக்களில் தரவிறக்க இணைப்புக்களை IDM தானாக எடுப்பதில்லை. காரணம் Firefox 4 இற்கு பின்னர் Firefox இற்கான IDM இன்  Ad-on ஐ Firefox இனால் அப்டேட் செய்யமுடியாமல் போனமையே.

Thursday, February 2, 2012

Windows7 இன் மொத்த பாவனையும் ஒரு Box இல்: அட்டகாசமான மென்பொருள்


பெரும்பாண்மையான கணினி பாவனையாளர்கள் உபயோகப்படுத்தும் இயங்குதளம் Windows என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் Windows ஐ உபயோகிக்கும் பலருக்கு அதன் Settings, Functions எல்லாம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும்.

அப்படிப்பட்டவர்களின் பாவனையை இலகுபடுத்தும் பொருட்டு ஒரு இலகுவான, சிறிய மென்பொருள் வெளியாகியுள்ளது.

Wednesday, February 1, 2012

Firefox இன் புதிய பதிப்பு Firefox 10 வெளியாகியது


கடந்த 9 மாத காலப்பகுதிக்குள் Mozilla Firefox இணைய உலாவியானது பதிப்பு 4 இல் இருந்து அடுத்தடுத்து புதிய பதிப்புக்களை வெளியிட்டு இப்போது புதிய பதிப்பாக Firefox 10 உம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் பலர் Firefox 4 ஐ தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது  இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் தொடர்ந்து தனது அடுத்த பதிப்புக்களை வெளியிடுவதற்கு காரணம் அடுத்தடுத்து அசத்தலான வசதிகளை அறிமுகப்படுத்திவரும் Chrome இன் வளர்ச்சி என்பது அறிந்ததே.