Monday, April 30, 2012

Dropbox இல் 16 GB அளவுவரை இடவசதியை பெறுவதற்கான சிறப்பு சலுகை-விரைந்திடுங்கள்


Dropbox என்றால் என்ன?

Dropbox என்பது ஒரு Online Cloud Storage சேவையினை வழங்கும் தளம். அதாவது உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், Documents போன்றவற்றை Online இலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையினை பல தளங்கள் வழங்கி வந்தாலும் Dropbox சிறப்பானதோடு அவ்வப்போது பல சலுகைகளையும் வழகிவருகிறது.

Thursday, April 26, 2012

அமெரிக்கா, கனடாவிற்கு android ல் இருந்து இலவச அழைப்பை மேற்கொள்வது எப்படி?


உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியில் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு படைப்புகள் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையில் இப்போது யார் பேச்சைக் கேட்டாலும் அன்ரோயிட் பற்றியே பேச்சாக இருக்கிறது. குறுகியதொரு காலப்பகுதியில் அன்ரோயிட் பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி ஆச்சரியமானதே.

Wednesday, April 25, 2012

Spam, வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி


பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது” என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். பேஸ்புக் தொடர்பான எனது கடந்த பதிவுகளில் இதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

Sunday, April 22, 2012

பேஸ்புக்கை இலகுவாக உபயோகிப்பதற்கான ShortCuts


நாம் கணினிகளில் நம் வேலைகளை இலகுபடுத்துவதற்காக Shortcut எனப்படும் குறுக்குவிசைகளை பாவிப்போம். இதனால் கணினியில் எம் வேலைகளை இலகுவாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதே போல் பேஸ்புக்கிற்கென்றும் சில குறுக்குவிசைகள் (Shortcuts) இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதன்மூலம் பேஸ்புக்கில் விரைவாக செயற்படமுடியும்.

அவசியம் தெரிந்திருக்கவேண்டிய இணைய பாதுகாப்பு- Online Security


இப்போது கிராமத்துக்கு கிராமம் மூலை முடுக்கு எங்கும் இணையத்தின் பாவனை பரந்துள்ளது. அனைவருக்கும் எதோ ஒரு வகையில் இணையம் தேவைப்பொருளாகிவிட்டது. அதில் பெரும்பாண்மையான இடத்தை சமூக வலைத்தளங்கள் பிடித்துள்ளன.

இப்படி இணையத்தில் உலாவரும் அநேகருக்கு கணினி மற்றும் இணையம் பற்றிய பூரண தெளிவோ பாதுகாப்போ தெரிந்திருப்பதில்லை. தமது தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டால் போதும் என நினைக்கும் இவர்கள் இணையத்தில் காத்திருக்கும் ஆபத்துகளுக்குள் தங்களை அறியாமலேயே சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே இணையத்தை பாவிக்கும் அனைவரும் இணைய பாதுகாப்பு பற்றி அடிப்படையையேனும் அறிந்திருத்தல் அவசியம்.

Friday, April 20, 2012

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே மின்னஞ்சலில் கையாளுவது எப்படி


எல்லோரும் எமது தனிப்பட்ட, தொழில்ரீதியான தேவைகளை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்போம். இதன்போது Gmail மட்டும் என்றல்லாமல் வேறுபட்ட பல சேவைகளை பாவிப்போம். உதாரணமாக Yahoo, HotMail போன்றவற்றை பாவிப்போம். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கையாளுவது சாத்தியமா? அதில் பெரிய சிரமம் உள்ளது அல்லவா? ஆகவே அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே மின்னஞ்சலில் வைத்து உபயோகிக்கக்கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்.

Monday, April 16, 2012

பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ ஆஃப் செய்வது எப்படி


பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.

Sunday, April 15, 2012

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி


கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.

பேஸ்புக் Chat இல் பயன்படுத்துவதற்கான அழகிய 7 வர்ணப்படங்கள்


Chat வசதியை வழங்கும் தளங்களுள் இப்போது பிரபலமாக இருப்பது பேஸ்புக் Chat. இங்கு வெறும் சாட் மாத்திரமன்றி அவ்வப்போது வேடிக்கையான பல வசதிகளையும் அறிமுகப்படுத்தி பாவனையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் பேஸ்புக்கில் கலர் கலராய் சாட் பண்ணுவது எப்படி?  மற்றும் அட்டகாசமான Facebook Emotion smileys என இரு பதிவுகளை பேஸ்புக் Chat தொடர்பாக எழுதியிருந்தேன்.

Thursday, April 5, 2012

சிறந்த 5 CDMA Android தொலைபேசிகள், இலங்கை, இந்திய விலையுடன்


symbian மற்றும் iOS இயங்குதளங்களை கொண்ட தொலைபேசிகளை விட Android இயங்குதளத்தை கொண்ட தொலைபேசிகளை பாவனையாளர்கள் அதிகம் விரும்பி பாவித்து வருகிறார்கள். காரணம் Android தொலைபேசிகள் ஒப்பீட்டளவில் அதிக வசதிகளை கொண்டிருப்பதும் விலை குறைவாக இருப்பதுமே. Android இயங்குதளத்துடன் WCDMA என்னும் 3G அதிவேக தகவல்பரிமாற்ற வசதியையும் கொண்ட சிறந்த 5 தொலைபேசிகளின் விபரத்தை இலங்கை மற்றும் இந்திய விலைகளுடன் பட்டியல் படுத்துகிறேன்.

Sunday, April 1, 2012

ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடக்கும் விடயங்கள். அதிரவைக்கும் ஆச்சரியம்


இணையத்தில் என்னென்ன விடயங்கள் நடக்கின்றன என்று அறிவதற்கு எப்போதாவது நீங்கள் முயற்சித்து இருக்கிறீர்களா? இணையம் எல்லையற்றது என்ற வாசகத்தை தாண்டி அங்கெ ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பதை அறிந்தால் தலை விறைத்து போவீர்கள். ஒரு நாளில் 60 செக்கன்களுக்குள் என்னென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பதை தொகுத்து தருகிறேன்