Wednesday, June 20, 2012

Apple Device களில் iOS 6 Beta வெர்சனை நிறுவுவ இலகுவான வழி


Apple மொபைல் தயாரிப்புக்களில் (iPhone, iPad, iPod) பயன்படுத்தப்படும் இயங்குதளமே iOS. அண்மையில் iOS இன் புதிய வெர்சனான iOS 6 Beta வெளியிடப்பட்டிருந்தது. இதனை எமது Apple Device களில் எப்படி நிறுவுவது என்று பார்ப்போம். அதற்கு முன்னர் சில எச்சரிக்கை குறிப்புகள், iOS 6 என்பது ஒரு Beta வெர்சன் ஆகும். Beta வின் ஆரம்ப படிநிலையில் உள்ளது. ஆகவே முன்னைய iOS களில் உள்ள பல வசதிகள் இதில் இயங்காது. பல Applications இதில் இயங்காது. ஆகவே இது சாதாரண பயனாளர்களுக்கு பொருத்தமற்றது.
Application Developers தமது Application களை இந்த இயங்குதளத்திற்கு ஏற்றதாக உருவாக்க பயன்படுத்தலாம். அவ்வாறு அல்லாமல் இந்த வெர்சனில் உள்ள அடிப்படை வசதிகளை அறிந்துகொள்ளவிரும்பும் iOS பிரியர்கள் நிறுவிப் பார்க்கலாம். பயப்படாதீர்கள், நிறுவிப்பார்த்தபின்னர் ஏற்கனவே இருந்த iOS வெர்சனுக்கு மாற்றுவது (Downgrade) எப்படி என்பது பற்றி தொடர்ந்து வரும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் :)

முன்குறிப்பு : 
1. இந்த பதிவு எப்படி iOS 6 இற்கு Upgrade செய்வது என்பதை அறிவதற்கு மாத்திரமே.  இரண்டு நண்பர்களுக்கு Upgrade செய்து கொடுத்துள்ளேன். அந்த படிமுறைகளை அப்படியே இங்கு தருகிறேன். தயவு செய்து முன் அனுபவம் இல்லாதவர்கள் முயற்சிக்கவேண்டாம். இதன்போது ஏற்படும் பாதிப்புகளுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் :( This is Your Own Risk

சரி.. இப்போ பதிவுக்குள் நுழைவோம்.iOS 6 Beta Support பண்ணும் Apple Devices கீழ் வருமாறு,

iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPad 2, iPad 3,  iPod touch 4th gen

Upgrade செய்வதற்கு முன்னர் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Apple Device ஐ Back Up எடுத்து வைப்பது. வழக்கமாக உங்கள் Apple Device ஐ iTunes உடன் Connect பண்ணியதுமே Automatic ஆக Backup ஆகும். அப்படி Backup ஆகாவிடில் Manual ஆக Back up செய்துகொள்ளலாம். கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
உங்கள் Apple Device ஐ iTunes உடன் Connect பண்ணுங்கள். மேலுள்ள படத்தில்  காட்டப்பட்டுள்ளது போல iTunes இல் உங்கள் Apple Device இல் Right Click செய்து Backup என்பதை கொடுங்கள்.

இப்போ நாம் iOS 6 Beta விற்கு Upgrade பண்ணலாம். இப்போ நாம் பார்க்கப்போகும் முறையில் Developer Account, UDID Activation போன்றவை தேவையற்றது.

1. iOS 6 beta IPSW இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
2. iTunes 10 ஐ Open செய்யுங்கள்
3. அடுத்ததாக itunes இல் உங்கள் Apple Device இன் Summery பகுதிக்கு செல்லுங்கள். அங்கிருக்கும் Update பட்டனை Shift கீயை அழுத்தியவாறு கிளிக்செய்யுங்கள்.


4. அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் ஏற்கனவே தரவிறக்கிய iOS 6 Beta IPSW ஐ தெரிவு செய்யுங்கள்.

5. Upgrade முடிந்ததும் உங்கள் Apple Device ஐ Reboot பண்ணுங்கள். Done

முக்கியமான விடயம் : இது ஆரம்ப படிநிலைகளில் உள்ள Beta வெர்சன் ஆகும். பல வசதிகள் இதில் இயங்காது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Apple, iOS, iPad 3, iPhone, iPhone5, iPod, Mobile Review, Mobile Software, Mobile tips

Post Comment

0 comments: