Wednesday, September 26, 2012

தனிநபர் பாதுகாப்பை உடைத்தெறிந்த பேஸ்புக்+ஆப்பிள் கூட்டணி


அண்மையில் அப்பிளின் புதிய இயங்குதளமான iOS 6 பல புதிய வசதிகளோடு அறிமுகமாகி இருந்தது அனைவரும் அறிந்த விடயமே. அதில் உள்ள புதிய வசதிகள் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தபோதுதான், தனிநபருடைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சில விடயங்கள் கண்ணில் பட்டது. ஒவ்வொரு வசதிகளாக பார்த்து பார்த்து மெருகேற்றியுள்ள ஆப்பிள் இந்த விடயத்தில் கோட்டை விட்டது மிகப்பெரிய மைனஸ் என்றுதான் சொல்லவேண்டும் :(


முன்னைய பதிவில் iOS 6 இன் புதிய வசதிகள் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். அதில் iOS 6 உடன் பேஸ்புக்கை இணைப்பதன் மூலமாக பேஸ்புக் நண்பர்களின் Contacts ஐ உங்கள் iPhone இல் தரவிறக்கி கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதில்தான் இருக்கிறது சிக்கல். 


முதலாவது விடயம், இவ்வாறு பேஸ்புக்கை iOS உடன் இணைத்ததும் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள் அனைவரது Contact தகவல்களும் (தொலைபேசி இலக்கம் அவர்கள் பேஸ்புக்கில் கொடுத்திருந்தால் மாத்திரம்) உங்கள் iPhone இல் தரவிறங்கிக்கொள்கிறது.  இதன்போது உங்கள் மொபைல் Contact list இல் உள்ள யாராவது ஒருவரின் தொலைபேசி இலக்கம் ஏதாவது பேஸ்புக் ஐடியில் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஐடி இணைப்பை அவருடைய புகைப்படத்துடன் உங்கள் iPhone இல் காண்பிக்கப்படுகிறது. இது எந்த வகையில் தனி நபர் பாதுகாப்பு மீறல் என்கிறீர்களா? உங்களிடன் தொலைபேசி இலக்கம் தந்தவர் உங்களோடு வேறு தகவல்கள் எதனையும் பகிர விரும்பாத ஒருவராக இருக்கும் பட்சத்தில் iOS 6 எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிடுகிறது :(

அதோடு Smart Phone உபயோகிப்பவர்கள் Viber பற்றி அறிந்திருப்பீர்கள். சுருக்கமாக சொல்வதானால் குறைந்தளவு வேகம் கொண்ட நெட்வேர்க்கிலும் தெளிவான அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு சேவை. உங்கள் பேஸ்புக் நண்பர்கள் யாராவது Viber User ஆக இருந்தால் அவர்களையும் உங்கள் Viber Contact List இல் இணைத்துவிடுகிறது iOS 6. விரும்பினால் மாத்திரம் இணைக்கக்கூடியதுபோல் இருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் Viber பாவிப்பவர்கள் அனைவரையும் இணைத்துவிட்டால் ?

எனது கருத்து... மேற்கூறியவை இரண்டுமெ தனிநபர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விடயங்களே. சம்மந்தப்பட்டவரி அனுமதி இல்லாமல் அவர்களுடைய விபரங்களை பற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது நல்லதல்ல :(

                  Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Apple, facebook, iOS

Post Comment

2 comments:

ம.தி.சுதா on September 26, 2012 at 11:15 PM said...

சாதகம் இருக்கிறது என்றாலும் பாதகம் அதிகமே

திண்டுக்கல் தனபாலன் on September 27, 2012 at 12:53 PM said...

பலருக்கும் பயன் தரும் தகவல்...

அறிந்து கொண்டேன்...

நன்றி...