Friday, September 21, 2012

iOS6 மேம்படுத்தல் + புதிய வசதிகள்


Apple சில நாட்களுக்கு முன்னர்  தனது புதிய இயங்குதளமான iOS6 ஐ வெளியிட்டிருந்தது. அது பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. அதற்கு முன்னர் எப்படி iOS6 இற்கு அப்கிரேட் பண்ணுவது என்பதை பார்ப்போம்.

கணினி மூலம் அப்கிரேட் பண்ணிக்கொள்ளவேண்டுமாயின் உங்கள் Apple Device ஐ கணினியுடன் இணையுங்கள். அதன்பின்னர் iTunes ஐ Open செய்துகொள்ளுங்கள். அதில் உங்கள் Apple Device பகுதிக்கு சென்று Summery இல் Update என்பதை கிளிக் பண்ணுங்கள் ( Update file Size = 887 MB). கிளிக் பண்ணியதும் Update File தரவிறங்கி Apple Device அப்கிரேட் ஆகும்.

Wifi மூலம் அப்கிரேட் பண்ணவேண்டுமாயின் Settings > General > Software Update சென்றால் அதில் இறுதியாக வெளிவந்த iOS 6 அப்டேட் காணப்படும். தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். 

தரவிறக்கி முடிந்ததும் அப்டேட்டை Apple Device இல் நிறுவும்போது சில வேளைகளில் Fail ஆகலாம். அது பற்றி கவலைப்படவேண்டியதில்லை. மறுபடியும் அப்டேட் பட்டனை அழுத்தினால் Upgrade ஆகிவிடும் :)

iOS 6 இன் குறிப்புரையில் 200 இற்கும் மேற்பட்ட புதிய வசதிகள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்தளவு வசதிகள் உண்மையாகவே இருக்கின்றதா என்று தெரியவில்லை J இதுவரை நான் பார்த்த வசதிகளை பட்டியலிடுகிறேன்

     1.   iMassage
புதிய வசதிகளுள் பிரதானமானது. இதுவரை இருந்த Massage முறையையோடு புதிதாக ஒரு Massage முறைய சேர்த்திருக்கிறார்கள். அதாவது உங்கள் Apple ஐடியை உபயோகித்து Apple Device களுக்கூடாக இலவசமாக Massage அனுப்பிக்கொள்ளலாம். தொடர்புடைய இரு Apple Device களும் iOS6 ஐ கொண்டிருக்கவேண்டும்.
Settings > Massage > iMassage என்ற வழியே சென்று iMassage ஐ ஆன் செய்துகொள்ளுங்கள். Message அனுப்பும்போது To என்ற இடத்தில் அனுப்புவரின் இலக்கத்திற்கு பதிலாக அனுப்புவரின் Apple ஐடி (ஈமெயில்) ஐ கொடுக்கவேண்டும். வழக்கமாக Massage அனுப்பும்போது நாம் அனுப்பும் Massage அனைத்தும் பச்சை வர்ணத்தில் அடையாளப்படுத்தப்படும். இப்போதும் வழக்கமான Massage அதேபோல்தான் உள்ளது. ஆனால் iMassage இல் நீல நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.

2    2.   3D Map
அடுத்த வசதி 3D Map. அட்டகாசமான Map என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை. அந்தளவு சூப்பரான Map. இதை நான் சொல்வதை விட நீங்களே பார்த்தால்தான் வித்தியாசத்தை உணரமுடியும். Map இல் சென்று வேண்டிய இடத்தை தெரிவு செய்து Map அப்ளிகேஷனின் கீழ்ப்பகுதியில் உள்ள 3D என்ற Option ஐ தெரிவு செய்தால் 3D இல் ரசிக்கமுடியும்.

3    3.   VIP Mail
மெயில் அப்ளிகேஷனில் புதிதாக VIP Mail என்ற வசதியை சேர்த்திருக்கிறார்கள். பயனுள்ளதாகைருக்கிறது. Inbox, sent Mail என்ற வரிசையில் VIP Mail ஐ இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் முக்கியமான நபர்களின் மெயில் ஐடியை கொடுத்து அவர்களின் மெயில்களை தனியாக VIP Mail இற்கு வரும்படி செய்யலாம்.

 4. Facebook 
பேஸ்புக்கை iOS உடன் இணைத்திருக்கிறார்கள். நேரடியாக iPhone இல் இருந்தே பேஸ்புக்குடன் இணையக்கூடியவாறாக பல வசதிகள் உள்ளன. Notification Center இல் இருந்தே Status Update பண்ணிக்கொள்ளலாம். புகைப்படங்களை நேரடியாக iPhone இல் இருந்தே பேஸ்புக்கிற்கு Upload செய்துகொள்ளலாம்.Settings> Facebook போய் உங்க பேஸ்புக் யூசர் ஐடி, பாஸ்வேர்டை கொடுத்தா உங்க பேஸ்புக்ல இருக்கிற அத்தனை நண்பர்களோட Contact டீட்டெயிலும் போனுக்கு டவுன்லோட் ஆகிடும். அதோட பேஸ்புக்ல இருக்கிற Birthday, Invitation எல்லாம் உங்க காலெண்டருக்கு இம்போர்ட் ஆகி அப்பப்போ ரிமைண்ட் பன்ணும். notification center ல இருந்தே ஸ்டேட்டஸ் போட முடியும்.

5. Privacy Setting

புதிதாக இணைக்கப்பட்டுள்ள Setting. Simple வசதி. Location Service, Contacts, Calender, Photos போன்றவற்றை கையாளுவதற்கான அனுமதியை வழங்கும் வசதி

6. Sharing Menu
புகைப்பட ஆல்பத்தில் ஏற்கனவே இருந்த Droplist ஐ Sharing மெனுவாக மாற்றியிருக்கிறார்கள். இலகுவானதாக, அழகானதாக இருக்கிறது. இதில் இருந்தே பேஸ்புக்கிற்கு புகைப்படங்களை அப்லோட் பண்ணும் வசதியும் கூடவே உள்ளது.


7. interface
iPod, Apps Store, itunes Store அனைத்தினதும் வடிவமைப்பை மாற்றியிருக்கிறார்கள். முன்பை விட அழகாகவும், இலகுவாகவும் இருக்கிறது. Dialing Key வடிவமைப்பை கூட மாற்றியிருக்கிறார்கள்.

8. Phone
Call இல் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அழைப்பு வரும்போது   Remind Me Later, Reply With Massage போன்ற ஆப்ஸன்கள் இணைக்கப்பட்டுள்ளன.
9. Application Update
முன்பு ஏதாவது அப்ளிகேஷனின் அப்டேட் வரும்போது எமக்கு அப்டேட் பற்றிய Notification ஒன்றூ வரும். அதை கிளிக் பண்ணி அப்டேட் பண்ணுவோம். அப்டேட் பற்றிய எந்த விபரமும் இருக்காது. ஆனால் iOS 6 இல் அப்டேட்டுக்கு கீழே இருக்கும் Whats New என்னும் பட்டனை கிளிக் பண்ணுவதன் மூலம் குறித்த அப்டேட்டில் என்ன புதிய வசதிகள் இருக்கின்றன என்றூ அறிந்துகொள்ளலாம்.

இவற்றோடு இன்னும் சில சிறிய சிறிய மாற்றங்களும் உள்ளன. 

கவலைக்குரிய விடயம் இன்னமும் iOS 6 இற்கு Cydia சப்போர்ட் ஆகவில்லை. iOS 6 ஐ ஜெயில்ப்ரேக் பண்ணிக்கொள்ளலாம். ஆனால் Cydia இன்ஸ்டால் பண்ணமுடியாது. இன்று இரவு ஜெயில்ப்ரேக் பண்ணபோகிறேன். நாளை அதுபற்றிய பதிவு வெளிவரும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Apple, iOS, iPhone

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் on September 21, 2012 at 6:35 PM said...

விளக்கமான பகிர்வுக்கு நன்றி... முந்தைய (Mario) பதிவில் ஒவ்வொரு புதிய விளையாட்டிற்கும் install செய்ய வேண்டுமா...? கொஞ்சம் விளக்கி இருக்கலாம்...

ANBUTHIL on September 21, 2012 at 7:02 PM said...

பயனுள்ள பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

Mathuran on September 21, 2012 at 9:22 PM said...

@திண்டுக்கல் தனபாலன்//

அதில் பல வெர்சன்கள் உள்ளது. விரும்பியதை நிறுவி விளையாடலாம்

Mathuran on September 21, 2012 at 9:22 PM said...

@அன்மை தேடி,,,அன்பு//

நன்றி நண்பா

Unknown on September 21, 2012 at 9:52 PM said...

உங்க ஆப்டேட்டுக்கு நன்றி மதுரன் :)

Anonymous said...

Really super explanation and I have updated my iPhone today to iOS 6 and came to know something new about iOS6... Thanks a lot