Friday, November 16, 2012

வித்தியாசம் காணமுடியாத போலி Samsung Galaxy S3 சந்தையில்


இன்று இரண்டு போலி Samsung Galaxy S3 ஸ்மார்ட்போன்கள் என் கைக்கு கிடைத்தது. பார்த்ததும் அதிர்ந்துபோனேன்.  உடனடியாக பார்த்ததும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஒரிஜினலை அப்படியே காப்பியடித்து செய்திருக்கிறார்கள்.  இயங்குதளம் கூட ஆன்ரோயிட் தான். சிறிது Modify பண்ணியிருக்கிறார்கள். ஒரிஜினலை பார்க்காமல் போலியை பார்த்தால் நிச்சயம் ஏமாந்துபோவீர்கள்.


இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள்.

இங்குள்ள புகைப்படங்களில் Black ஒரிஜினல் S3. White போலி S3. முதலாவது வித்தியாசம் போலி ஒரிஜினலை விட சற்று தடிமன் கூடியது. S3 போலி Screen Quality படு மோசம். tuch sensitive அதைவிட மோசம். இவற்றை விட பெரும்பாலான அப்ளிகேஷன்கள் சப்போர்ட் பண்ணவில்லை. Music Hup, Game Hub,Video hub போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளடக்கப்படவில்லை. ஒரு சில சைனீஸ் மொழி அப்ளிகேஷன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காமெரா ஒரிஜினலோடு ஒப்பிடும்போது Quality கம்மி. இந்த புகைப்படங்கள் கூட இன்னோர் போலி s3 காமெராவினால் எடுக்கப்பட்டவைதான். Radio இல்லை. LED Indicator இல்லை. S3 இல் உள்ள முக்கியமான வசதி Motion தொழில்நுட்பம் போலியில் இல்லை.

போலி வேகம் குறைந்தது. Security and lock Screen Option போலியில் இல்லை. அதே நேரம் Schedule Power On/Off என்னும் வசதி போலியில் மேலதிகமாக உள்ளது. வழக்கமாக S3 யில் Home Button மற்றும் Power Button ஐ ஒன்று சேர அழுத்தினால் ஸ்கிரீன்சாட் எடுக்கமுடியும். ஆனால் போலியில் அவ்வாறு ஸ்கிரீன்சாட் எடுக்கமுடியவில்லை :(

SVoice போலியில் இல்லை. பல முக்கியமான வசதிகள் இல்லை. இணையத்தில் இது பற்றி தேடியபோது பெரிய அளவில் விபரங்கள் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏற்கனவே சைனா தயாரிப்பு போலி Galaxy S3 ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பல வித்தியாசங்கள் இலகுவாக கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது. இயங்குதளமும் ஆன்ரோயிட் இல்லை. ஆனால் இந்த போலியில் எல்லாமே அச்சு அசல் ஒரிஜினல் Galaxy S3 போலவே உள்ளது.

தயவு செய்து Galaxy S3 தொலைபேசியை அனுமதி பெறாத முகவர்களிடம் வாங்க நினைப்பவர்கள் S3 பற்றிய அனுபவம் உள்ளவர்களை அழைத்து செல்லுங்கள்.

போலியை இலகுவாக அடையாளம் காண...

* முக்கியமாக இடதுபக்க மேல் மூலையில் LED Indicator உள்ளதா என்று பரிசோதியுங்கள். ஒரிஜினலில் Indicator உள்ளது. போலியில் இல்லை

* பின் பக்கத்து கவரை அகற்றி பரிசோதியுங்கள். ஒரிஜினல் S3 இன்  Battery இல் Made By Korea என இருக்கும். அதோடு SAMSUNG என்ற பெயர் பிரிண்ட் பண்ணப்பட்டு இருக்கும். போலியில் Made in china finished in china என்று இருக்கும்.

* அதே போல் Battery யை அகற்றிவிட்டு Battery இன் பின்புறம் பாருங்கள். ஒரிஜினல் இல் Made By Samsung என இருக்கும். போலியில் Made in korea by Samsung என இருக்கும்

மேலும் இதுபற்றி அறிய கீழுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை பாருங்கள்.

        

Black Original White Fake







பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Mobile Review, Mobile tips, Samsung Galaxy S3

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் on November 16, 2012 at 6:21 PM said...

விளக்கமான தகவல் பலருக்கும் உதவும்...

நன்றி...
tm2

ப.கந்தசாமி on November 17, 2012 at 3:18 AM said...

நல்ல தகவல்.

Unknown on November 17, 2012 at 3:32 PM said...

பல பேருக்கு பயன் படும் தகவல்