Sunday, December 16, 2012

Samsung Galaxy S3 (GT 19300) தொலைபேசியை ஆன்ரோயிட் 4.1.2 JellyBean இற்கு Upgrade பண்ணுவதற்கான Guide


Samsung Galaxy S3 தொலைபேசிக்குரிய Official JellyBean Firmware ஏற்கனவே வெளிவந்திருந்தது. இப்போது அதை எப்படி உங்கள் S3 யில் Upgrade பண்ணுவது என்று பார்ப்போம்.

முன்குறிப்பு 1 : கீழே தரும் படிமுறைகளை கவனமாக பின்பற்றுங்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் வெற்றிகரமாக Upgrade பண்ணமுடியும் :) 

முன்குறிப்பு 2 : Upgrade பண்ணி தொலைபேசியை Reboot பண்ணும்போது தொடர்ச்சியாக Reboot ஆகிக்கொண்டிருந்தாலோ அல்லது Welcome Screen இல் தொலைபேசி Stuck ஆகினாலோ, தொலைபேசியின் Battery ஐ அகற்றி மறுபடியும் Insert பண்ணி, மறுபடியும் கீழே தரப்படும் படிமுறைகளை பின்பற்றி Upgrade பண்ணுங்கள்.

முன்குறிப்பு 3 : Upgrade பண்ணமுதல் உங்கள் தொலைபேசியை Back up எடுத்துக்கொள்ளுங்கள்.

புதிய அப்டேட்டில் உள்ள வசதிகள்

  • Multiview Feature,
  • Based on Android 4.1.2 JZO54K,
  • Customizable Notification Panel for enhanced viewing experience,
  • Brightness Slider is not a part of notification panel,
  • Smart rotation feature is enabled,
  • Android 4.2 Keyboard comes pre-loaded,
  • Page buddy, Paper Cast app and Group Cast apps are pre-loaded,
  • Samsung Galaxy Note 2 Gallery
JellyBean Firmware ஐ தரவிறக்க : http://goo.gl/gruYf
Samsung Galaxy Driver for PC : http://goo.gl/jEpxW

இரண்டையும் தரவிறக்கிக்கொள்ளுங்கள். Samsung Galaxy s3 Driver இனை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கிய Update File ஐ WinRar அல்லது 7zip மென்பொருளின் மூலம் Extract பண்ணிக்கொள்ளுங்கள். அதில் '.tar.md5’ என்னும் Extension உடன் ஒரு Firmware அப்டேட் File உம் கூடவே Odin என்னும் சிறிய மென்பொருள் ஒன்றும் காணப்படும்.

  • முதல் படிமுறையாக “Settings > Applications > Development >” என்ற வழியே சென்று USB debugging ஐ Enable செய்துவிடுங்கள்
  • உங்கள் Samsung Galaxy S3 ஐ Downloading Mode இற்கு மாற்றிக்கொள்ளுங்கள். இதற்கு முதலில் தொலைபேசியை Off செய்துகொள்ளுங்கள். அதன்பின் Home button + Volume Down Button+ Power On Button ஐ ஒன்றுசேர அழுத்துங்கள். 
  • அடுத்து Volume Up Button ஐ அழுத்தி Continue பண்ணுங்கள். 
  • இப்போ Downloading Mode ரெடி. 
  • அடுத்து Data Cable ஐ உபயோகித்து கணினியுடன் Galaxy S3 ஐ இணையுங்கள். இணைத்த பின் ஏற்கனவே தரவிறக்கிய Odin மென்பொருளை Open பண்ணுங்கள். Open பண்ணியதும் Odin இல் ID : COM என்ற பகுதி Light Blue வர்ணத்தில் Indicate பண்ணும். அதோடு Message பகுதியில் Added என்ற தகவல் காண்பிக்கப்படும். அவ்வாறு வரவில்லை என்றால் Samsung Driver உங்கள் கணினியில் சரியான முறையில் நிறுவப்பட்டுள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.


  • Odin இல் PDA என்பதை தெரிவு செய்து '.tar.md5’ Extension உடன் கூடிய Update File ஐ தெரிவு செய்யுங்கள். 
  • வேறு எந்த மாற்றமும் செய்யவேண்டாம். Re-Partition Option செக் பண்ணுப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு Start Button ஐ கிளிக் பண்ணுங்கள். 
  • இப்போ அன்ரோயிட் இன் புதிய அப்டேட் JellyBean இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். தயவு செய்து அப்டேட் முடியும் வரை வேறு எந்த பட்டனையும் அழுத்தாதீர்கள். 
  • 5-8 நிமிடங்கள் வரை எடுக்கும். இன்ஸ்டால் ஆகி முடிந்ததும் மொபைல் Restart ஆகும். இப்போ Settings > About Device > சென்று பாருங்கள். Android Version 4.1.2 என்று இருக்கும் :)
Enjoy 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Android, Mobile Software, Mobile tips, Samsung Galaxy S3

Post Comment

6 comments:

கூடல் பாலா on December 17, 2012 at 10:14 AM said...

பயனுள்ள தகவல் சகோ...நான் Android 2.3.5 உபயோகிக்கிறேன் , இதை upgrade செய்ய வழி ஏதேனும் உண்டா?

Unknown on December 17, 2012 at 2:10 PM said...

சாம்சங் எஸ் அட்வான்சு ஏதாவது அப்கிரேட் செய்ய வழி உள்ளதா.?இது ஜின்சர்பேர்டில் உள்ளது இதை ஐஸ்கிம் சான்வெஜ் க்கு அப்கிரேட் செய்வது எப்படி?

Mathuran on December 17, 2012 at 10:55 PM said...

@koodal bala
உங்கள் தொலைபேசி மாடல் என்னவென்று சொல்லமுடியுமா?

Mathuran on December 17, 2012 at 11:02 PM said...

Arif.A
Samsung Galaxy S இனை ஐஸ்கிரீம் சான்வெட்ஜுக்கு அப்கிரேட் பண்ண முடியாது. Ginger Bread 2.3.3 க்கு வேண்டுமானால் அப்கிரேன் பண்ணிக்கொள்ளலாம். எப்படி செய்வது என்ற குறிப்பு இந்த இணைப்பில் உள்ளது
http://pages.samsung.com/ca/androidupgrade/English/

கூடல் பாலா on December 19, 2012 at 11:11 AM said...

My mobile model is Micromax A57

semmalai akash on December 23, 2012 at 7:25 PM said...

மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி.