Saturday, January 11, 2014

பேஸ்புக்கில் REPLY button வசதியை இணைத்துக்கொள்வது எப்படி?



பேஸ்புக் கடந்த வருடம் கமென்ட் பாக்ஸில்  REPLY வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் இந்த வசதி பேஸ்புக் பேஜ்களிற்கு மட்டும்தான். தனிநபர் கணக்குகளிற்கு அல்ல. விதிவிலக்காக நீயூசிலாந்து பேஸ்புக் பாவனையாளர்களிற்கு மட்டும் அவர்களது தனிநபர் கணக்குகளில் இந்த கமென்ட் பாக்ஸில்  REPLY வசதியை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பேஸ்புக் ஒரு புதிய விடயத்தை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த முன்னர் பரீட்சார்த்தமாக ஓரிரு நாடுகளில் உள்ள பயனாளிகளுக்கு மட்டும் அக்குறிப்பிட்ட வசதியை வழங்கும். ஆகவே எதிர்காலத்தில் கமென்ட் பாக்ஸில்  REPLY வசதி எல்லோருக்கும் கிடைக்கலாம்.

ஆனா அதுவரைக்கும் நாம பொறுமையா இருப்பமா? சோ பேஸ்புக் கமென்ட் பாக்ஸில்  REPLY வசதியை இலகுவாக எவ்வாறு சேர்த்துக்கொள்வது பற்றி இந்த பதிவினூடே பார்க்கலாம்.




*எல்லாவற்றுக்கும் முதலில் பேஸ்புக்கினை திறந்து வைத்திருக்கும் அனைத்து வின்டோக்களையும் க்ளோஸ் செய்து விடுங்கள்.

step 1

இந்த இணைப்பினை ஒரு புதிய வின்டோவில் திறந்து கொள்ளுங்கள். https://touch.facebook.com/

step 2

திறந்துகொண்ட இந்த புதிய பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் Right Click செய்து Inspect element என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.



step 3

இப்போது வந்திருக்கும் இந்த புதிய பாக்ஸில் கீழ் பகுதியிலுள்ள Wheel ஐகானை அழுத்துங்கள்.



step 4

Wheel ஐகானை அழுத்தியதும் இப்போது இன்னொரு புதிய பாக்ஸ் வந்திருக்கும்.

அதில் Settings பகுதியில் overrides என்பதை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

அங்கே Enable என்பதில் ரிக் செய்துகொள்ளுங்கள்.

கீழே override geolocation என்பதிலும் ரிக் செய்து கொள்ளுங்கள், அத்தோடு அங்குள்ள geolocation position பாக்ஸ்களில் கீழே கொடுக்கப்பட்ட இலக்கத்தொடரை paste செய்துகொள்ளுங்கள்.

Lat =  -41.289996   Lon = 174.781555

இப்போது இந்த setting windowஇனை க்ளோஸ் செய்துவிட்டு Inspect elements windowவினையும் க்ளோஸ் செய்துகொள்ளுங்கள்.




step 5

இப்போ இந்த பக்கத்தின் மேல் வரிசையில் உள்ள check in என்பதை அழுத்துங்கள்.
*சிலநேரம்  https://touch.facebook.com/ உங்களின் Browsing Location அறிய அனுமதி கேட்டு நிற்கும். அவ்வாறானால் Allow செய்யுங்கள்.



அழுத்தியதும் தானாகவே  நீயூசிலாந்திலுள்ள சிலபல இடங்கள் check in செய்வதற்கென உங்களுக்கு பரிந்துரைக்கப்படும். அதில் விரும்பிய ஒரு இடத்தை தெரிவுசெய்து check in செய்துகொள்ளுங்கள்.



step 6

இறுதியாக https://www.facebook.com/ இனை திறந்து ஒரு சாம்பிள் போஸ்ட் ஒன்றினை போட்டுத்தான் பாருங்களேன்...




DONE

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook, Internet Tips

Post Comment

0 comments: