Monday, May 14, 2012

பேஸ்புக்கில் புதிய வசதி - விரைவில் வருகிறது Fecebook App Center


பேஸ்புக் வெகுவிரைவில் Facebook App Center என பெயர் கொண்ட தமது Apps Store ஐ வெளியிடப்போகிறார்கள். பேஸ்புக் அப்ளிகேஷன் பிரியர்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி என்பதில் சந்தேகமில்லை. கேம்ஸ் உட்பட இலட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் பேஸ்புக்கில் உள்ளன. இவற்றில் ஸ்பாம் அப்ளிகேஷன்களும் உள்ளடக்கம். இவற்றை இனி இந்த Facebook App Center மூலம் இலகுவாக கையாளலாம். இதில் ஸ்பாம் அப்ளிகேஷன்களுக்கெதிராக பேஸ்புக் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் என நினைக்கிறேன். பார்போம் :(


சில மாதங்களுக்கு முன்னர் Microsoft நிறுவனத்தின் Microsoft app store வெளியாகி பாவனையாளர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. அதுபோல கூகிளின் Google play, மற்றும் Apple நிறுவனத்துன் Apps store போன்றனவும் மிகவும் பிரபலமடைந்திருந்தன. அந்த வகையில் தற்போது பேஸ்புக்கும் தனது App Center ஐ வெகு விரைவில் வெளியிடவுள்ளது.


இதன்மூலம் அப்ளிகேஷன் வடிவமைப்பாளர்கள் நேரடியாகவே தமது அப்ளிகேஷன்களை சந்தைப்படுத்தும் சிறப்பான வசதியையும் Facebook Apps Center மூலமாக வழங்கவுள்ளது.

Android, iOS மற்றும் Web based அப்ளிகேஷன்களை Facebook Apps Center மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு Facebook Blog

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook

Post Comment

0 comments: