Friday, May 11, 2012

பேஸ்புக்கில் அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிக்கலாம்


பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிப்பது என்பது இதுவரை காலமும் முடியாத ஒரு விடயமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது அந்த வசதி ஒரு Extension மூலம் சாத்தியமாகிறது.  பேஸ்புக்கில் Message களை அழிக்கும் வசதியை ஏற்கனவே பேஸ்புக் வழங்கிவந்தது. ஆனால் அதில் எதிர்பார்க்கப்பட்ட வசதிகள் எவையும் இல்லை. முதலில் பேஸ்புக் அளித்த வசதியை பயன்படுத்தி எப்படி Message களை அழிப்பது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கின் Message பகுதிக்கு செல்லுங்கள். அதில் அழிக்கவேண்டிய Message ஐ தெரிவு செய்யுங்கள் ( கவனிக்க : இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ஒரு நபரின் Message இனை மாத்திரம் அழிக்கலாம். அனைத்து Message களையும் அழிக்கவேண்டும் எனில் தனித்தனியாகத்தான் அழிக்கவேண்டும்)

அழிக்கவேண்டியவரின் Message ஐ தெரிவு செய்து அதில் Action > delete Messages என்ற வழியே செல்லுங்கள்

அதன் பின்னர் அழிக்கவேண்டிய Message ஐ தெரிவு செய்துவிட்டு Delete Messages என்பதை தெரிவு செய்தால் குறிப்பிட்ட அந்த Message அழிந்துவிடும். ஆனால் இதில் பல குறைபாடுகள் உள்ளன.
  1. inbox இல் உள்ள அனைத்து Massege களையும் ஒரே தடவையில் அழிக்கமுடியாது. யாராவது ஒருவரின் Message ஐ மாத்திரமே ஒரு தடவையில் அழிக்கலாம். அதே நேரம் ஒருவருக்கு அனுப்பிய அனைத்து Message களையும் தனித்தனியாக தெரிவு செய்தே அழிக்கவேண்டும்.
  2. அப்படி அழித்தாலும் எங்கள் inbox இல் மட்டும்தான் அழியுமே தவிர நாம் அனுப்பியவரின் inbox இல் அழியாமல் இருக்கும்.
  3. மறுபடி அவருடன் Message மூலம் தொடர்புகொண்டால் மறுபடி அனைத்து Message உம் Restore ஆகிவிடும் :(
அவ்வாறல்லாமல் ஒரே தடவையில் Message களை நிரந்தரமாக அழிக்கமுடியுமா? ஆம் முடியும். இதற்கென தற்போது ஒரு Google Chrome extension வந்துள்ளது.Facebook Fast Delete Messages எனப்படும் இந்த Extension ஐ உங்கள் Chrome இல் நிறுவிக்கொள்வதன் மூலம் அனைத்து Message ஐயும் ஒரே தடவையில் அழித்துக்கொள்ளலாம்.

இந்த Extension ஐ நிறுவியதும் உங்கள் Message பகுதிக்கு செல்லுங்கள். அங்கு ஒவ்வொரு Message இர்கு பக்கத்திலும் புதிதாகஎன்ற அடையாளம் தோன்றியிருக்கும்.



அதை கிளிக் பண்ணினால் அந்த Message முழுவதுமாக அழிந்துவிடும். Inbox இல் உள்ள அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிக்கவேண்டுமாயின் மேல் பக்கத்தில் புதிதாக வந்திருக்கும் Delete All என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். அத்தனை Message களும் அழிந்து Inbox Empty ஆகிவிடும்.

இதில் உள்ள ப்ளஸ் என்னவென்றால் இதன் மூலம் Message களை அழித்தால், அவை நிரந்தரமாக அழிந்துவிடும். நீங்கள் Message  அனுப்பியவரின் Inbox இலும் அழிந்துவிடும்.

இந்த Extension ஐ பெற்றுக்கொள்ள Facebook Fast Delete Messages

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook, Google chrome extension

Post Comment

1 comments:

ANBUTHIL on May 20, 2012 at 7:25 PM said...

usefull tks