Apple சில நாட்களுக்கு முன்னர் தனது புதிய இயங்குதளமான iOS6 ஐ வெளியிட்டிருந்தது. அது பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. அதற்கு முன்னர் எப்படி iOS6 இற்கு அப்கிரேட் பண்ணுவது என்பதை பார்ப்போம்.
கணினி மூலம் அப்கிரேட் பண்ணிக்கொள்ளவேண்டுமாயின் உங்கள் Apple Device ஐ கணினியுடன் இணையுங்கள். அதன்பின்னர் iTunes ஐ Open செய்துகொள்ளுங்கள். அதில் உங்கள் Apple Device பகுதிக்கு சென்று Summery இல் Update என்பதை கிளிக் பண்ணுங்கள் ( Update file Size = 887 MB). கிளிக் பண்ணியதும் Update File தரவிறங்கி Apple Device அப்கிரேட் ஆகும்.