Sunday, April 1, 2012

ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடக்கும் விடயங்கள். அதிரவைக்கும் ஆச்சரியம்


இணையத்தில் என்னென்ன விடயங்கள் நடக்கின்றன என்று அறிவதற்கு எப்போதாவது நீங்கள் முயற்சித்து இருக்கிறீர்களா? இணையம் எல்லையற்றது என்ற வாசகத்தை தாண்டி அங்கெ ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பதை அறிந்தால் தலை விறைத்து போவீர்கள். ஒரு நாளில் 60 செக்கன்களுக்குள் என்னென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பதை தொகுத்து தருகிறேன்

மேலுள்ள வரைபடத்தில் 60 செக்கன்களுக்குள் இணையத்தில் நடக்கும் விடயங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்தில், அதாவது 60 செக்கன்களின் 2 மில்லியன் கூகிள் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 100 000 ட்வீட்ஸ் கள் வெளியிடப்படுகின்றன.

Smart Phone பாவனை அதிகரித்துள்ள நிலையில் 60 செக்கன்களுக்கு 47 000 Smart Phone Application கள் தரவிறக்கப்படுகின்றன. விக்கிபீடியாவில் 6 புதிய ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. இதேவேளை பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக் 277 000 தடவைகள் Login செய்யப்படும் அதேவேளை 6 மில்லியன் பாவனையாளர்கள் Online இல் இருக்கிறார்கள். 

Youtube இல் 30 மணிநேர வீடியோக்கள் Upload செய்யப்படுகின்றன. ஒரு நிமிடத்தில் 1.3 மில்லியன் பக்கப்பார்வைகளை Youtube பெற்றுக்கொள்கிறது. Twitter இல் 100 000 Tweets வெளியிடப்படும் அதேவேளை ஒவ்வொரு நிமிடத்திலும் 320 புதிய கணக்குகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

பிரபலமான Online Shopping தளமான Amazon நிமிடம் ஒன்றில் 83 000 டாலர்களை விற்பனையின் மூலம் பெற்றுக்கொள்கிறது. புகைப்பட தளமான Flickr இல் 20 மில்லியன் புகைப்படங்கள் பார்வையிடப்படுகின்றன. 3000 புகைப்படங்கள் Upload செய்யப்படுகின்றன.

அடுத்ததாக உங்களை உறைய வைக்கும் ஒரு தரவு; உலகம் முழுவதும் 60 செக்கன்களில் 639 800 GB அளவுள்ள தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வளவு நல்ல விடயங்கள் நடக்கும் அதேவேளையில் ஒவ்வொரு 60 செக்கனுக்கும் 135 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள், 20 பேர் Phishing தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

இவையெல்லாம் ஒரு நாளில் ஒரு நிமிடத்தில் நடந்தேறும் விடயங்களே!!!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
funny tips, Internet Tips

Post Comment

0 comments: