Friday, April 20, 2012

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே மின்னஞ்சலில் கையாளுவது எப்படி


எல்லோரும் எமது தனிப்பட்ட, தொழில்ரீதியான தேவைகளை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்போம். இதன்போது Gmail மட்டும் என்றல்லாமல் வேறுபட்ட பல சேவைகளை பாவிப்போம். உதாரணமாக Yahoo, HotMail போன்றவற்றை பாவிப்போம். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கையாளுவது சாத்தியமா? அதில் பெரிய சிரமம் உள்ளது அல்லவா? ஆகவே அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே மின்னஞ்சலில் வைத்து உபயோகிக்கக்கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்.


உதாரணமாக உங்களிடம் Example@gmail.com, Example@yahoo.com என இரு மின்னஞ்சல்கள் இருக்கிறது. நீங்கள் Example@gmail.com என்னும் மின்னஞ்சலை திறந்து வைத்துக்கொண்டு Example@yahoo.com இற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்கக்கூடியதாகவும் அந்த முகவரியூடாகவே மின்னஞ்சல் அனுப்பக்கூடியதாகவும் இருந்தால் எப்படி இருக்கும். ஆம அந்த வசதியை இப்போது Gmail வழங்குகிறது.

முதலில் எப்படி Gmail இல் இருந்தபடியே வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை உபயோகித்து மின்னஞ்சல் அனுப்புவது என்று பார்ப்போம். உங்கள் Gmail மின்னஞ்சல் கணக்கை Log in செய்யுங்கள். அதில் Settings செல்லுங்கள்

அடுத்து Accounts என்ற Tab இனுள் செல்லுங்கள். அதில் Send Mail as என்பதில் Add another Email Address you Own என்பதை கிளிக் பண்ணுங்கள்.


கிளிக் பண்ணியதும் பாப் அப் விண்டோ ஒன்று Open ஆகும். அதில் உங்கள் பெயரையும் இணைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து Next  Step என்பதை கிளிக் பண்ணுங்கள்


அடுத்து வரும் விண்டோவில் Send Through Gmail  என்னும் ஆப்ஸனை தெரிவு செய்து Next Step என்பதை கிளிக் பண்ணுங்கள்.


அடுத்து Send Verification என்பதை கிளிக் பண்ணுங்கள். இப்போது புதிய விண்டோ Open ஆகுகி verification code ஐ கேட்கும். அதில் இடுவதற்கான Verification நீங்கள் இணைப்பதற்காக கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

அதில் Verificaion Code மற்றும் Verification Link இரண்டும் அனுப்பப்படும்.Verificaion Code ஐ காப்பி செய்து மேலே கூறிய விண்டோவில் பேஸ்ட் செய்தும் Complete பண்ணலாம். அல்லது Verification Link ஐ கிளிக் செய்தும் Complete பண்ணலாம்.

Complete பண்னியதும் இப்போது Gmail இன் Compose Mail பகுதிக்கு வாருங்கள். அதில் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி இருக்கும். விரும்பியபோது அந்த முகவரியை தெரிவுசெய்து அதனூடாக அனுப்பலாம்

அடுத்து வேறு முகவரிகளுக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி Gmail இற்கு Forward பண்ணுவது என்று பார்ப்போம்.

Setting > Accounts and Import > Check mail from other accounts > Add a POP3 mail account you own என்ற வழியே செல்லுங்கள். அடுத்துவரும் விண்டோவில் Forward பண்ணவேண்டிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Next கொடுங்கள்.அடுத்த விண்டோவில் ஏற்கனவே கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கான பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து Add Acount என்பதை கொடுங்கள்


அடுத்து ஒரு விண்டோ Open ஆகும். அதில் மேலே முதலாவதாக குறிப்பிட்டது போன்று நீங்கள் இந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்ப விரும்பினால் Yes, I want to be able to send mail as என்ற ஆப்சனை தெரிவு செய்யுங்கள். தேவையில்லை என்றால் No என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது நீங்கள் கொடுத்த முகவரிக்கு வரும் மின்னஞ்சல்கள் உங்கள் Gmail கணக்கிற்கு Forward ஆகும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Gmail Tips

Post Comment

0 comments: