Sunday, April 22, 2012

அவசியம் தெரிந்திருக்கவேண்டிய இணைய பாதுகாப்பு- Online Security


இப்போது கிராமத்துக்கு கிராமம் மூலை முடுக்கு எங்கும் இணையத்தின் பாவனை பரந்துள்ளது. அனைவருக்கும் எதோ ஒரு வகையில் இணையம் தேவைப்பொருளாகிவிட்டது. அதில் பெரும்பாண்மையான இடத்தை சமூக வலைத்தளங்கள் பிடித்துள்ளன.

இப்படி இணையத்தில் உலாவரும் அநேகருக்கு கணினி மற்றும் இணையம் பற்றிய பூரண தெளிவோ பாதுகாப்போ தெரிந்திருப்பதில்லை. தமது தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டால் போதும் என நினைக்கும் இவர்கள் இணையத்தில் காத்திருக்கும் ஆபத்துகளுக்குள் தங்களை அறியாமலேயே சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே இணையத்தை பாவிக்கும் அனைவரும் இணைய பாதுகாப்பு பற்றி அடிப்படையையேனும் அறிந்திருத்தல் அவசியம்.

 இதுவரை எழுதிய இணைய பாதுகாப்பு சம்மந்தமான பதிவுகளினை ஒரு தொகுப்பாக இங்கு தருகிறேன்.



பேஸ்புக் என்னும் சமூக வலைத்தளத்தில் இப்போது போலியாக பெண்கள் பெயரில் கணக்குகளை உருவாக்கி ஏனையவர்களுக்கு ஆபத்தை/இடைஞ்சலை ஏற்படுத்தும் நபர்களை எப்படி இலகுவாக அடையாளம் காண்பது... 



பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.

ஆகவே எப்படி பேஸ்புக் கணக்கை நிரந்தரமாக அழிப்பது



 எவ்வளவுதான் Antivirus மென்பொருட்கள் கணினியில் வைரஸ் ப்ரோகிராம் களை தேடி தேடி அழித்தாலும் வைரஸ்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை. சாதாரணமாக பென் டிரைவ், சிடிக்கள் மூலம் பரவும் வைரஸ்களை விட இணையம் மூலம் பரவும் வைரஸ்/ Malware கள் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. Malware நிறைந்த websites களை பார்வையிட்டாலோ அல்லது Browser Toolbar களை கணினியில் Install செய்வதலோ இந்த Malware கள் கணினிக்குள் நுழைகின்றன. 



உலகத்தில் ஒரு பெயர் ஒருவருக்கு மட்டும் இருப்பதில்லை. ஒரு பெயரில் எத்தனையோ பேர் இருப்பார்கள். ஏதாவது இணையத்தளங்களில் கணக்குகளை உருவாக்கும் போது உங்களுக்கே இந்த விடயம் தெரிந்திருக்கும். நீங்கள் உங்கள் பெயரில் கணக்கினை உருவாக்கும்போது “ இந்த பெயர் ஏற்கனவே பாவனையில் உள்ளது” என்று எச்சரிக்கை வந்திருக்கும்.

ஆகவே உங்கள் பெயரில் எத்தனை இணையத்தள கணக்குகள் இருக்கிறது என்று அறியவேண்டுமா?



நீங்கள் பார்வையிடும்/ பார்வையிடப்போகும் இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தி விட்டுத்தான் பார்வையிடுகின்றீர்களா? அந்த தளங்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறீர்கள்? தனிப்பட்ட நபர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு தளத்தை நம்பி பார்வையிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏன் என்றால் இணைய வலைப்பின்னலில் கோடிக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பான  தளங்களை பிரித்தறிவது கடினம். 



Mozila Firefox  உலவியில் தேவையற்ற இணையத்தளங்களை முடக்குவது தற்போது இலகுவான முறையாக காணப்படுகிறது. அதாவது Mozila Firefox  உலவி இதற்காக புதிதான ஒரு Add on ஐ வெளியிட்டுள்ளது. இந்த Add on மூலம் தேவையற்ற இணையத்தளங்களை முடக்க கூடியதாக உள்ளது.உதாரணமாக பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் தடுக்க வேண்டும் எனில் இந்த Add - on சென்று Block List இல் www.facebook.com என்று கொடுத்துவிட்டால் அதன் பின்னர் பேஸ்புக் தளத்தை பார்வையிடமுடியாது. 



இணையம் என்பது கணக்கற்ற பொழுதுபோக்குகளின் உறைவிடம். இணையத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் இருக்கும். பலருக்கு இணையம் ஒரு போதை போல. வேலைவெட்டி எல்லாம் மறந்து இணையத்தில் மூழ்கி கிடப்பார்கள். அதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?

இப்படியான தளங்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் தடை செய்யலாம்



அவ்வப்போது பாவனையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறு சிறு குறைகளை விட்டுவந்த பேஸ்புக் இப்போது பாவனையாளர்களால் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பிலும் சிறிய குறைபாடு ஒன்றை விட்டுள்ளது. அது என்னவெனில் நீங்கள் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு பின்னர் ஏதாவது காரணங்களால் நீக்கிவிட்டால் அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் இருந்து முற்றாக நீக்கப்படுவதில்லை. 



பேஸ்புக்கை இலகுவாக ஹக் பண்ணலாமா? உங்களுடைய கணக்கு அவ்வாறு ஹக் பண்ணப்பட்டுள்ளதா?



பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் அடிக்கடி உங்களை Tag பண்ணி தொல்லை கொடுப்பார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்கான வழி



மின்னஞ்சல் பாவிப்பவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய அசௌகரியம் என்று சொன்னால் அது இந்த Spam மெயில்கள்தான். முன்னர் இந்த Spam மெயில்களும் ஏனைய மெயில்களுடன் சோ்ந்து Inbox இல் நிறைந்திருக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Online Security

Post Comment

1 comments:

சுதா SJ on April 22, 2012 at 8:30 PM said...

நல்ல தொகுப்பு மது... தேங்க்ஸ்