Wednesday, April 25, 2012

Spam, வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி


பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது” என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். பேஸ்புக் தொடர்பான எனது கடந்த பதிவுகளில் இதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

சரி அப்போ இந்த பதிவு எதுக்கென்று கேட்கிறீங்களா? பாதுகாப்பு இந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறதால இனிமேல் ஹக்கிங்கோ ஸ்பாம் பிரச்சினையோ குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவம் அந்த நினைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. நேற்று திடீரென்று நண்பரிடம் இருந்து வந்த Message இல் is this your mom என்ற தகவலுடன் ஒரு பேஸ்புக் Application இணைப்பு வந்திருந்தது. அதை கிளிக் செய்தபோது ஒரு Facebook Application இற்கு தேவையற்ற விதத்தில் எனது பேஸ்புக் கணக்கின் பெரும்பாலான உரிமைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியை கோரியது. சந்தேகப்பட்டு குறிப்பிட்ட அந்த Message ஐ அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு கேட்டபோது அந்த Message ஐ தான் அனுப்பவில்லை என்று கூறினார். இணையத்தில் தேடிப்பார்த்தபொழுது அது ஸ்பாம்தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.


மீண்டும் முன்னரைப்போலவே ஒரு சில ஸ்பாம்/ வைரஸ்கள், பேஸ்புக்கின் சில பாதுகாப்பு ஓட்டைகளை பயன்படுத்தி உலாவத்தொடங்கியுள்ளன. ஆகவே முற்றுமுழுதாக பேஸ்புக்கை நம்பிக்கொண்டிருக்காமல் எமக்கான பாதுகாப்பை நாமே ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது.

வைரஸ் / ஸ்பாம்

என்னை பொறுத்தவரை ஹக்கிங்கை விட இந்த ஸ்பாம் ஆபத்தானது. ஹக்கிங்கால் உங்கள் கணக்கு மட்டும்தான் பாதிக்கப்படும். ஆனால் ஸ்பாம் உங்களை பாதிப்பதோடு உங்கள் மூலமாக உங்கள் நண்பர்களையும் அவர்கள் மூலமாக அவர்களுடைய நண்பர்களையும் என தொடர்ச்சியாக பரவி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் இப்படியான ஸ்பாம் இனால் பாதிக்கப்பட்டால், அந்த ஸ்பாம் Automatic ஆக உங்களுடைய பெயரில் உங்கள் நண்பர்களின் Wall இல் செய்திகளை பகிர்கிறது. உங்கள் நண்பரோ நீங்கள்தான் அந்த செய்தியை பகிர்ந்ததாக நினைத்து கிளிக் பண்ணி செல்வார். இது தொடர்ச்சியாக இப்படியே பரவிக்கொண்டு செல்லும்

பேஸ்புக் Timeline இற்கு மாற்றம்பெற முன்னர் இத்தகைய இணைப்புக்களை உங்கள் நண்பர்களின் Wall இலோ அல்லது உங்களது Wall இலோ அவதானித்திருப்பீர்கள். பலர் இதுபற்றி அறிந்திருந்தாலும், இணைப்புக்கள் மாத்திரமே ஸ்பாம் என கருதியிருந்தனர். ஆனால் இதைவிட போலியான பேஸ்புக் குழும இணைப்புக்கள், போலி Fan Page இணைப்புக்கள் என பல வடிவங்களில் பரவி வந்தது.

மேலுள்ள படத்தில் உள்ளதை போன்று விநோதமான, பார்க்கத்தூண்டும் செய்திகளுடனான இணைப்புக்களே உங்கள், உங்கள் நண்பர்களது Wall களில் பகிரப்படுகிறது. இவற்றை கிளிக் பண்ணினால் இருவிதமான செயற்பாடுகள் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட சில இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகின்றது. பின்னர் உங்களுக்கு தெரியாமலே உங்கள் தகவல்களை திருடிக்கொள்கிறது. சில இணைப்புக்கள் உங்களை பேஸ்புக் தளத்தை விட்டு வேறோர் ஆபத்தான தளத்திற்கு எடுத்து செல்கிறது.

அடுத்து பேஸ்புக்கில் முக்கியமானதொரு ஸ்பாம் Clickjacking அல்லது Likejacking எனப்படும் முறை. மேற்கூறப்பட்டதுபோன்ற சில இணைப்புக்களை கிளிக் பண்ணும்போது உங்களை போலியானதொரு Facebook Page இற்கு எடுத்து செல்லப்படுகிறது. நீங்கள் தற்செயலாக அந்த பக்கத்தில் எங்கேயாவது கிளிக் பண்ண நேர்ந்தால் உடனடியாக அந்த கிளிக் Like ஆக மாற்றப்படுகிறது. இதன் மூலம் உங்கள் கணக்கிற்கு ஸ்பாம் பரப்பப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் சார்பில் தகவல் அனுப்புகிறது.

Fake Pages


பேஸ்புக்கில் எமது நட்பு வட்டத்தை தாண்டி ஏனையவர்களோடு தொடர்பினை பேணுவதற்கு Facebook Page ஒரு சிறந்த வழி. கூடவே ஸ்பாம் பரப்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வழி என்பதுதான் கவலைக்குரிய விடயம். இப்படியான போலி பக்கங்களை எப்படி அடையாளம் காண்பது? மேலே உள்ள படத்தை பாருங்கள். இது ஒரு போலி பக்கம். ஏதாவது ஒரு பேஸ்புக் பக்கத்தில் பார்க்கத்தூண்டும் செய்தியின் சாராம்சத்தை தந்து Like பண்ணினால்தான் மிகுதியை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தால் 100% அது போலி பக்கம்தான்.

இப்படியான பக்கங்களை நீங்கள் Like பண்ண முயற்சிக்கும்போது உங்கள் பேஸ்புக் கணக்கின் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகிறது. விடயம் அறியாமல் நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் தகவல்கள் திருட்டு போவதுடன் உங்கள் சார்பில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

Facebook Chat ஸ்பாம்


இதுதான் எனக்கு நடந்த சம்பவம். நண்பர் வட்டத்தில் ஸ்பாம் இனை பரப்புவதற்கு சாட்டிங் ஒரு சிறந்த வழி என்றே சொல்லலாம். Wall இல் பகிரப்படும் இணைப்புக்களை விட சாட் மூலம் பகிரப்படும் இணைப்புக்கள் அதிகம் கிளிக் பண்ணப்படுகின்றன என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான காரணம் Wall Sharing இலும் பார்க்க Chatting தனிப்பட்டு விளங்குவதும், குறிப்பிட்ட அந்த நண்பர் ஆன்லைனில் இருக்கும்போதே ஸ்பாம் இணைப்பு வருவதால் அவர்தான் அனுப்பியிருக்கவேண்டும் என்ற தோற்றத்தை உண்டாக்குவதுமே. இதற்கு உடனடி தீர்வு, இப்படி வரும் இணைப்புக்களை கிளிக் பண்ணமுதல் அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு அந்த இணைப்பு தொடர்பாக விசாரியுங்கள், அவர்தன் அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லை எனில் அந்த இணைப்பை அகற்றிவிடுங்கள்.

சர்ச்சைக்குரிய தலைப்புடனான ஆக்கங்கள்

“Something Unbelievable is here, and I can’t believe they let it on the Internet!”  சில சமயங்களில் இதுபோன்ற தகவலுடன் கூடிய ஆக்கம் ஒன்றிற்கான இணைப்பினை கண்டிருப்பீர்கள். இதுகூட ஒரு வகை ஸ்பாம் தான். ஆனால் இது ஏனையவற்றை விட கொஞ்சம் ஆபத்து கூடியது. காரணம் இந்த இணைப்பை கிளிக் செய்தாலே உங்கள் பெயரில் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.

இதுபோன்ற இணைப்புக்களை காணும்போது அந்த இணைப்பின் மேல் Mouse Cursor ஐ கொண்டு செல்லுங்கள்( கிளிக் பண்ணவேண்டாம்). கொண்டு சென்றதும் இணைய உலாவியின் கீழ் Bar இனை பாருங்கள். அதில் அந்த இணைப்பிற்கான உண்மையான URL காட்டப்படும். பெரும்பாலும் அந்த URL ஆனது Short செய்யப்பட்ட URL ஆகவே இருக்கும். உதாரணமாக bit.ly, tinyurl.com, t.co போன்ற URL ஆக இருக்கும். பெருமபாலான Short பண்ணப்பட்ட இணைப்புக்கள் பாதுகாப்பானவை அல்ல.

Fake Events

இதுவும் மேற்கூறப்பட்ட ஸ்பாம் செயற்பாடுகளை ஒத்ததுதான். அநேகமாக இலவசமாக ஏதாவது வழங்குவதாக கூறி இந்த event உருவாக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் Description ஐ உற்று நோக்கினால் போலி Events ஐ கண்டுபிடிக்கலாம். போலியில் நிறைய எழுத்து பிழைகள் இருக்கும், சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கும். உதாரணமாக Facebook என்பது "Face book" என்றோ அல்லது "Favebook" என்றோ மாற்றப்பட்டிருக்கும். அதில் ஏதாவது இணைப்பு ஒன்றை தந்திருப்பார்கள். பார்ப்பதற்கு Fecebook இன் URL போன்று இருந்தாலும் கிளிக் பண்ணினால் வேறு ஓர் ஆபத்தான தளத்திற்கு செல்லும்.

ஸ்பாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு

ஸ்பாமினால் தினம் தினம் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதிஷ்டவசமாக ஸ்பாமில் இருந்து உங்கள் கணக்கை மீட்டெடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கிறது. உடனடியாக இந்த ஸ்பாம் அப்ளிகேஷன்களை Block பண்ணிவிட்டு உங்கள் பேஸ்புக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டால் சரி. எல்லோரும் முக்கியமான ஒரு விடயத்தை கவனிக்கவேண்டும். பெரும்பாலான ஸ்பாம் இணைப்புக்கள் பேஸ்புக் அப்ளிகேஷன் வடிவிலேயே வருகின்றன.

ஆகவே அப்ளிகேஷனை Block பண்ணினால் சரி. அத்தோடு தேவையற்ற விதத்தில் அப்ளிகேஷன்களை பயன்படுத்தாமல் விட்டால் பிரச்சினையே இல்லை.

இந்த பிரச்சினையில் இருந்து எப்படி முழுமையான பாதுகாப்பை பெற்றுக்கொள்வது? ஹக்கேர்சிடம் இருந்து எப்படி பாதுகாப்பு பெறுவது.. தொடர்பான விடயங்கள் அடுத்த பாகத்தில்...

தொடர்ந்து பதிவுகளின் அப்டேற்றினை பெற்றுக்கொள்ள Facebook FanPage இனை Like பண்ணுவதன் மூலமாகவோ அல்லது கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவுசெய்வதன் மூலமாகவோ இணைந்திருங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook, Online Security

Post Comment

1 comments:

காட்டான் on April 25, 2012 at 10:01 PM said...

Nanri