Thursday, March 29, 2012

Android தொலைபேசிக்கான Opera Mini இன் புதிய பதிப்பு Opera Mini 7 வெளியிடப்பட்டது


Android தொலைபேசிகளுக்கான Opera Mini யின் புதிய பதிப்பான Opera Mini 7 இன்று வெளியிடப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கான இணைய உலாவிகளில் அதிக வேகமுடையதும், பிரபலமானதும் Opera Mini ஆகும். மாதாந்தம் கிட்டத்தட்ட 160 மில்லியன் பாவனையாளர்களை கொண்டது.



புதிய வரவான இந்த பதிப்பில் பல வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. Compression எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்துள்ளார்கள். ஒரு இணையப்பக்கத்தின் 90% ஐ Compress பண்ணுவதாக Opera அறிவித்துள்ளது. இதனால் சாதாரண உலவிகளை விட Opera Mini 7 வேகம் கூடியதாக உள்ளது

அத்தோடு Speed Dial Sites, Bookmark போன்ற வழமையான வசதிகளையும் கொண்டுள்ளது.

Android Platform மிற்கான Opera Mini 7 ஐ தற்போது Android Market இல் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Android, Internet Tips, Mobile Software, Mobile tips

Post Comment

0 comments: