Wednesday, May 30, 2012

SkyDrive இல் 25GB இலவச இடவசதியை பெறுவது எப்படி?


SkyDrive என்பது Microsoft இன் Online Cloud Storage சேவையாகும். இது Google இன் google Drive, மற்றும் Dropbox போன்றவற்றினை ஒத்ததே. ஆரம்பத்தில் 5GB இலவச இடவசதியை வழங்கிவந்த SkyDrive பின்னர் அதனை 7GB ஆக உயர்த்தியிருந்தது. google drive 5GB இடவசதியையும் Dropbox 2GB இடவசதியையும் வழங்கிவருகின்றன. ஆனால் Dropbox அண்மையில் சிறப்பு சலுகை ஒன்றின் மூலமாக 16GB இடவசதியினை வழங்கியிருந்தது.

Sunday, May 27, 2012

Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?


தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர Video Sharing தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.

Monday, May 14, 2012

பேஸ்புக்கில் புதிய வசதி - விரைவில் வருகிறது Fecebook App Center


பேஸ்புக் வெகுவிரைவில் Facebook App Center என பெயர் கொண்ட தமது Apps Store ஐ வெளியிடப்போகிறார்கள். பேஸ்புக் அப்ளிகேஷன் பிரியர்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி என்பதில் சந்தேகமில்லை. கேம்ஸ் உட்பட இலட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் பேஸ்புக்கில் உள்ளன. இவற்றில் ஸ்பாம் அப்ளிகேஷன்களும் உள்ளடக்கம். இவற்றை இனி இந்த Facebook App Center மூலம் இலகுவாக கையாளலாம். இதில் ஸ்பாம் அப்ளிகேஷன்களுக்கெதிராக பேஸ்புக் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் என நினைக்கிறேன். பார்போம் :(

விரைவில் வெளிவரும் iPhone 5 - அதிரடியான தகவல்கள்+புகைப்படங்கள்


iPhone இன் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPhone 5. நாளுக்கு நாள் இது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்தமே உள்ளன. iPhone பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பை iPhone 5 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது iPhone 5 பற்றிய சில தகவல்களும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. iPhone 5 விசேடமான LiquidMetal என்னும் உலோமம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. LiquidMetal எனப்படுவது வெவ்வேறு உலோகங்களை கலந்து உருவாக்கப்பட்டது.

Friday, May 11, 2012

பேஸ்புக்கில் அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிக்கலாம்


பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிப்பது என்பது இதுவரை காலமும் முடியாத ஒரு விடயமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது அந்த வசதி ஒரு Extension மூலம் சாத்தியமாகிறது.  பேஸ்புக்கில் Message களை அழிக்கும் வசதியை ஏற்கனவே பேஸ்புக் வழங்கிவந்தது. ஆனால் அதில் எதிர்பார்க்கப்பட்ட வசதிகள் எவையும் இல்லை. முதலில் பேஸ்புக் அளித்த வசதியை பயன்படுத்தி எப்படி Message களை அழிப்பது என்று பார்ப்போம்.

Monday, April 30, 2012

Dropbox இல் 16 GB அளவுவரை இடவசதியை பெறுவதற்கான சிறப்பு சலுகை-விரைந்திடுங்கள்


Dropbox என்றால் என்ன?

Dropbox என்பது ஒரு Online Cloud Storage சேவையினை வழங்கும் தளம். அதாவது உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், Documents போன்றவற்றை Online இலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையினை பல தளங்கள் வழங்கி வந்தாலும் Dropbox சிறப்பானதோடு அவ்வப்போது பல சலுகைகளையும் வழகிவருகிறது.

Thursday, April 26, 2012

அமெரிக்கா, கனடாவிற்கு android ல் இருந்து இலவச அழைப்பை மேற்கொள்வது எப்படி?


உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியில் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு படைப்புகள் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையில் இப்போது யார் பேச்சைக் கேட்டாலும் அன்ரோயிட் பற்றியே பேச்சாக இருக்கிறது. குறுகியதொரு காலப்பகுதியில் அன்ரோயிட் பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி ஆச்சரியமானதே.

Wednesday, April 25, 2012

Spam, வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி


பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது” என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். பேஸ்புக் தொடர்பான எனது கடந்த பதிவுகளில் இதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

Sunday, April 22, 2012

பேஸ்புக்கை இலகுவாக உபயோகிப்பதற்கான ShortCuts


நாம் கணினிகளில் நம் வேலைகளை இலகுபடுத்துவதற்காக Shortcut எனப்படும் குறுக்குவிசைகளை பாவிப்போம். இதனால் கணினியில் எம் வேலைகளை இலகுவாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதே போல் பேஸ்புக்கிற்கென்றும் சில குறுக்குவிசைகள் (Shortcuts) இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதன்மூலம் பேஸ்புக்கில் விரைவாக செயற்படமுடியும்.

அவசியம் தெரிந்திருக்கவேண்டிய இணைய பாதுகாப்பு- Online Security


இப்போது கிராமத்துக்கு கிராமம் மூலை முடுக்கு எங்கும் இணையத்தின் பாவனை பரந்துள்ளது. அனைவருக்கும் எதோ ஒரு வகையில் இணையம் தேவைப்பொருளாகிவிட்டது. அதில் பெரும்பாண்மையான இடத்தை சமூக வலைத்தளங்கள் பிடித்துள்ளன.

இப்படி இணையத்தில் உலாவரும் அநேகருக்கு கணினி மற்றும் இணையம் பற்றிய பூரண தெளிவோ பாதுகாப்போ தெரிந்திருப்பதில்லை. தமது தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டால் போதும் என நினைக்கும் இவர்கள் இணையத்தில் காத்திருக்கும் ஆபத்துகளுக்குள் தங்களை அறியாமலேயே சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே இணையத்தை பாவிக்கும் அனைவரும் இணைய பாதுகாப்பு பற்றி அடிப்படையையேனும் அறிந்திருத்தல் அவசியம்.