நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக/ நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பாதுகாப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.
Tuesday, February 21, 2012
Monday, February 20, 2012
BitTorrent இன் புதிய பதிப்பு ஆச்சரியமான பல வசதிகளுடன் வெளியிடப்பட்டது
நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் Bittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் Bittorrent தனது புதிய பதிப்பான Bittorrent 7.6 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது.
Saturday, February 18, 2012
பில்கேட்ஸின் விண்டோஸ் அன்றில் இருந்து இன்றுவரை
ஒருவழியாக விண்டோஸ் 8 இன் logo வடிவமைப்பு முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Windows Xp ஐ வெளியிட்ட Microsoft அதன் மிகப்பெரிய விற்பனை/வெற்றிக்கு பின்னர் 2006 நவம்பர் மாதம் windows Vista எனப்படும் சொதப்பல் இயங்குதளத்தை பல குறைகளுடன் வெளியிட்டு தோல்வி கண்டது. அதற்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் Windows 7 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டது. வெற்றியும் கண்டது.
Wednesday, February 15, 2012
Far cry ஒரு அட்டகாசமான ஆக்ஷன் கேம்
ஆக்ஷன் வீடியோ கேம் பிரியர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் அது Far Cry தான். System requirements மிகவும் குறைவாக உள்ள அதேவேளை அதி உச்ச கிராபிக்ஸ் நுட்பத்தையும் கொண்டது இந்த கேம்.
ஜாக் என பெயர் கொண்ட மாலுமி ஒருவன் ஊடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென் பசுபிக் இல் அமைந்துள்ள Micronesia என்னும் தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த தீவின் அருகே தரித்து நிற்கும்போது அங்குள்ள ஆயுதக்குழுவினரால் அவனது படகு தாக்கி அழிக்கப்படுகிறது. ஊடகத்தை சேர்ந்த பெண் அக்குழுவினரால் கைது செய்யப்படுகிறாள். அதில் இருந்து தப்பும் ஜாக், அந்த தீவினுள் நுழைந்து அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறான்.
Friday, February 10, 2012
பேஸ்புக்கின் புதிய Photo Viewer - அசத்தலான வசதி
பேஸ்புக் தனது போட்டோ viewer ஐ கடந்த 2011 ஆம் ஆண்டு Classic View வில் இருந்து Light Box view ஆக மாற்றியிருந்தது. அதில் சில கூடுதல் வசதிகள் இருந்தாலும் பலருக்கு அந்த மாற்றம் பிடிக்கவில்லை. காரணம் Light Box view வானது லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டதுதான். அந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக இப்போது வேறு ஓர் வடிவத்திற்கு போட்டோ Viewer ஐ மாற்றியுள்ளது.
முன்னைய போட்டோ Viewer இலும் பார்க்க பல மேம்பட்ட வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விரைவாக லோட் ஆகிறது.
Thursday, February 9, 2012
ஜிமெயிலில் புதிய வசதி - Insert Image
ஜிமெயிலில் இதுவரை காலமும் புகைப்படம் ஒன்றை அனுப்புவதற்கு, அந்த புகைப்படத்தை Attach பண்ணியே அனுப்பவேண்டும். இல்லாவிடில் வேறு தளங்களில் உள்ள புகைப்படங்களை Drag and Drop முறையில் இழுத்து விடவேண்டும். நேரடியாக கணினியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜிமெயில் Body இல் Insert பண்ணமுடியாது.
Wednesday, February 8, 2012
Google Chrome இன் புதியதொரு இணைப்பு. G News
Google Chrome உலவி தனது சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் பயனாளார்கள் இலகுவான முறையில் செய்திகளை அறியும் பொருட்டும் G News எனும் புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இச் சேவையை Google Chrome உலவியின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
இச் சேவை பெருமளவான Google Chrome பயனாளர்களின் ஆதரவை பெற்றுள்ளது. Google Chrome உலவியினால் இச் சேவையை வழங்குவதன் மூலம் அனேகமானோர் பயனடையக்கூடியாதாக உள்ளது. ஏனெனில் உலகில் அதிகளவானோர் பயன்படுத்தும் உலவியாக Google Chrome காணப்படுவதால் இவ் சேவை அனேகரின் விருப்பத்திற்குரிய சேவையாக காணப்படுகிறது.
Saturday, February 4, 2012
Internet Download Manager ஐ Firefox உலாவியில் பெற்றுக்கொள்வது எப்படி?
தரவிறக்கிகளிலே எப்போதும் No:1 ஆக இருப்பது IDM தான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி கூறலாம். தரவிறக்க வேகம் கூடியது என்பதோடு தரவிறக்க இணைப்புக்கள் இருக்கும் இடங்களில் Automatic ஆக அந்த இணைப்பை எடுத்துக்கொள்ளக்கூடியது. உதாரணமாக நீங்கள் YouTube இல் ஒரு காணொளியை பார்க்கும்போது அந்த காணொளிக்கான தரவிறக்க இணைப்பை தானாகவே தரும்.
ஆனால் Firefox இன் 3 ஆவது பதிப்புக்கு பின் வந்த பதிப்புக்களில் தரவிறக்க இணைப்புக்களை IDM தானாக எடுப்பதில்லை. காரணம் Firefox 4 இற்கு பின்னர் Firefox இற்கான IDM இன் Ad-on ஐ Firefox இனால் அப்டேட் செய்யமுடியாமல் போனமையே.
Thursday, February 2, 2012
Windows7 இன் மொத்த பாவனையும் ஒரு Box இல்: அட்டகாசமான மென்பொருள்
பெரும்பாண்மையான கணினி பாவனையாளர்கள் உபயோகப்படுத்தும் இயங்குதளம் Windows என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் Windows ஐ உபயோகிக்கும் பலருக்கு அதன் Settings, Functions எல்லாம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும்.
அப்படிப்பட்டவர்களின் பாவனையை இலகுபடுத்தும் பொருட்டு ஒரு இலகுவான, சிறிய மென்பொருள் வெளியாகியுள்ளது.
Wednesday, February 1, 2012
Firefox இன் புதிய பதிப்பு Firefox 10 வெளியாகியது
கடந்த 9 மாத காலப்பகுதிக்குள் Mozilla Firefox இணைய உலாவியானது பதிப்பு 4 இல் இருந்து அடுத்தடுத்து புதிய பதிப்புக்களை வெளியிட்டு இப்போது புதிய பதிப்பாக Firefox 10 உம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் பலர் Firefox 4 ஐ தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் தொடர்ந்து தனது அடுத்த பதிப்புக்களை வெளியிடுவதற்கு காரணம் அடுத்தடுத்து அசத்தலான வசதிகளை அறிமுகப்படுத்திவரும் Chrome இன் வளர்ச்சி என்பது அறிந்ததே.
Subscribe to:
Posts (Atom)






