Saturday, February 4, 2012

Internet Download Manager ஐ Firefox உலாவியில் பெற்றுக்கொள்வது எப்படி?


தரவிறக்கிகளிலே எப்போதும் No:1 ஆக இருப்பது IDM தான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி கூறலாம். தரவிறக்க வேகம் கூடியது என்பதோடு தரவிறக்க இணைப்புக்கள் இருக்கும் இடங்களில் Automatic ஆக அந்த இணைப்பை எடுத்துக்கொள்ளக்கூடியது. உதாரணமாக நீங்கள் YouTube இல் ஒரு காணொளியை பார்க்கும்போது அந்த காணொளிக்கான தரவிறக்க இணைப்பை தானாகவே தரும்.

ஆனால் Firefox இன் 3 ஆவது பதிப்புக்கு பின் வந்த பதிப்புக்களில் தரவிறக்க இணைப்புக்களை IDM தானாக எடுப்பதில்லை. காரணம் Firefox 4 இற்கு பின்னர் Firefox இற்கான IDM இன்  Ad-on ஐ Firefox இனால் அப்டேட் செய்யமுடியாமல் போனமையே.

ஆனால் இப்போது Firefox 7 அல்லது அதற்கு பின்னர் வந்த பதிப்புக்களுக்கான அப்டேட் செய்யப்பட்ட Ad-on வெளிவந்துள்ளது. இதனை நாங்கள் manual ஆகவே தரவிறக்கி நிறுவவேண்டும்.

எப்படி நிறுவுவது?

  • இந்த இணைப்பில் சென்று Ad - on ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள் Click here
  • தரவிறக்கும்போது Firefox உலாவியில் ஒரு தகவல் வரும். அதில் Allow என்பதை கொடுங்கள்
  • அடுத்துவரும் விண்டோவில் install என்பதை கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள்.
  • அதன் பின்னர் Firefox உலாவியை Restart பண்ணுங்கள்.
இப்போது தரவிறக்க இணைப்புக்களில் IDM இன் இணைப்பை காணலாம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, Firefox, Firefox Application, Internet Tips

Post Comment

0 comments: