Monday, February 20, 2012

BitTorrent இன் புதிய பதிப்பு ஆச்சரியமான பல வசதிகளுடன் வெளியிடப்பட்டது


நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் Bittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் Bittorrent தனது புதிய பதிப்பான Bittorrent 7.6 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது.
அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க இலகுவான வழிகள் என பல முன்னேற்றகரமான வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
  

இதில் உள்ளடங்கியுள்ள புதிய வசதிகள்

1) Discovery : புதிய இசை ஆல்பங்கள், பாடல்கள், திரைப்படங்கள் என்பவற்றை இலகுவாக தேடமுடியும். புதுவரவுகளை பட்டியல்படுத்துகிறது

2) Speed :  முன்னைய பதிப்புகளை விடவும் அதிகரித்த வேகம்.

3) Simple :  இலகுவான பயனர் இடைமுகம் (User Interface). கையாள்வதற்கு இலகுவானது

4) Advanced :  புதுப்பிக்கப்பட்டுள்ள µTP protocol வசதி, நீங்கள் இணையத்தில் உலாவும்போதும், Skye மற்றும் VoIP calls, வீடியோ Streaming, ஆன்லைனில் Games விளையாடும்போதும் Automatic ஆக தரவிறக்க வேகத்தை குறைக்கிறது.

6) Customized : நீங்களாகவே புதிய வசதிகளை இணைத்துக்கொள்ளும் வசதி. மேலதிக Application களை இணைத்துக்கொள்ளலாம்.


இன்னும் பல சிறிய சிறிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

தரவிறக்க Bittorrent 7.6

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, software review, torrent

Post Comment

0 comments: