Friday, February 10, 2012

பேஸ்புக்கின் புதிய Photo Viewer - அசத்தலான வசதி


பேஸ்புக் தனது போட்டோ viewer ஐ கடந்த 2011 ஆம் ஆண்டு Classic View வில் இருந்து  Light Box view ஆக மாற்றியிருந்தது. அதில் சில கூடுதல் வசதிகள் இருந்தாலும் பலருக்கு அந்த மாற்றம் பிடிக்கவில்லை. காரணம் Light Box view வானது லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டதுதான். அந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக இப்போது வேறு ஓர் வடிவத்திற்கு போட்டோ Viewer ஐ மாற்றியுள்ளது.

முன்னைய போட்டோ Viewer இலும் பார்க்க பல மேம்பட்ட வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விரைவாக லோட் ஆகிறது.


அதேவேளை இதுவரை காலமும் புகைப்படத்திற்கு கீழே இருந்துவந்த கருத்துக்கள் இப்போது வலது பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் கருத்துக்களை இலகுவாக பார்க்கமுடியும் என்பதோடு, கருத்துக்களை Scroll பண்ணி பார்க்கும்போது கூட புகைப்படத்தை விட்டு விலகாமல் இருக்கமுடியும்.

இந்த வசதி இப்போது எல்லோருக்கும் அக்டிவ் ஆக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது சற்று கூகிள் ப்ளஸ் இன் போட்டோ Viewer இனை ஒத்துள்ளது.

இதனை விரும்பாதவர்கள் முன்பு போலவே பழைய வடிவிற்கு மாற்றிக்கொள்ளலாம். அதற்கு புகைப்படத்தை திறக்கும்போது Address bar இல் உள்ள URL இல் theater என்பதை நீக்கிவிட்டு எண்டர் பண்ணுங்கள்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook

Post Comment

0 comments: