Tuesday, February 21, 2012

லேப்டாப்பை (laptop) பாதுகாப்பதற்கான இலகு வழிகள் - A Complete Guide


நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக/ நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பாதுகாப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.
சாதாரண Desk Top கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பாதுகாப்பு/ பராமரிப்பு அத்தியாவசியமானதும்  சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால், அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.

திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான மென்பொருள்

லேப்டாப்பை தொலைப்பவர்களை எடுத்து பார்த்தால் அவர்களில் பெரும்பாண்மையானவர்கள் தங்கள் லேப்டாப்பை வெளி இடங்களில் சார்ஜ் செய்யும்போதுதான் தொலைத்திருப்பார்கள்/ பறிகொடுத்திருப்பார்கள். இதை எப்படி தடுப்பது? அதற்கும் இருக்கிறது வழி. லேப்டாப்பை AC அடாப்டருடன் கூடிய Power Connector மூலமே சார்ஜ் இடுவோம். இந்த Power Connector ஐ அகற்றும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய மென்பொருள்களை உபயோகிக்கலாம். இதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும் ALARM என்ற மென்பொருள் சிறப்பானதும் இலவசமானதும். தரவிறக்க ALARM. இந்த மென்பொருளை நிறுவி விட்டால், Power Connector ஐ வேறு யாராவது அகற்றினால் உரத்த ஒலியை எழுப்பி உங்களை உசாராக்கிவிடும்

அடுத்த வழி Map அல்லது GPRS System மூலம் திருடப்பட்ட உங்கள் லேப்டாப் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது. அதற்கு Prey என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளை நிறுவி ( ஆன்லைனில்) உங்களுக்கான கணக்கு ஒன்றை ஆரம்பித்து விட்டால், உங்கள் லேப்டாப்பை யார் திருடினாலும் அவரது இருப்பிடத்தை/ அதாவது உங்கள் லேப்டாப் இருக்கும் இடத்தை Trace பண்ணி கண்டறியலாம். Prey மென்பொருள் உங்கள் லேப்டாப் உள்ள சரியான இடத்தை குறிப்பிட்டு காட்டுகிறது. அத்தோடு இந்த மென்பொருள் முற்றுமுழுதாக இலவசமாகும்.

Over Heat பிரச்சினை

எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.
  1. குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.
  2. அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.
  3. வெப்பநிலையான பிரதேசங்களில் ( சாதாரன வெப்பநிலையில் கூட) 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள்
  4. எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
  5. Cool pad ஐ பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad ஐ உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat ஐ ஓரளவிற்கு குறைக்கும்
  6. அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
  7. லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.
  8. லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.
  9. அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts ஐ பாதிக்கும்
  10. அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.
பாட்டரி பாதுகாப்பு

பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்கு
  1. லேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்
  2. சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள். வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
  3. சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
  4. லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.

மேலே குறிப்பிட்டவை பாட்டரியை பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம்
  1. Wi-fi,  Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள்
  2. பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஐ குறைக்கும்
  3. USB port பட்டரி Life ஐ குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick,  Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.
  4. லேப்டாப் Screen ஐ மாத்திரம் ஆஃப் செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screen ஐ ஆஃப் செய்துவிடுங்கள். TurnOffMonitor 1.0 இந்த மென்பொருளை நிறுவி Shift+F1 ஐ உபயோகித்து Screen ஐ ஆஃப்/ ஆன் செய்துகொள்ளலாம்
  5. தேவையில்லாதபோது சிடி ட்றைவில் உள்ள சிடிக்களை அகற்றிவிடுங்கள்
  6. Screen Server களை உபயோகிப்பதை தவிருங்கள்
  7. முக்கியமாக Screen இன் Brightness குறைத்து வையுங்கள்
பாகம் 2 ஐ படிக்க கிளிக்..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Compuer Tips, Hardware, Laptop

Post Comment

5 comments:

இராஜராஜேஸ்வரி on February 21, 2012 at 8:30 AM said...

மிகப் பயனுள்ள பகிர்வுகள்..

ஆமினா on February 21, 2012 at 3:32 PM said...

அப்பப்பா... இவ்வளவு விஷயமா?

இப்ப தான் தெரியுது என் நெட்புக்கை நா கொஞ்சம் கூட கவனிக்கிறதில்லைன்னு :-(

சார்ஜ்ஜில் இருக்கும் போது உபயோகிப்பது தான் கொஞ்சம் இடிக்குது ஹி...ஹி...ஹி...

அலாரம் மற்றும் மேப் மூலம் ட்ரேஸ் பண்ணும் முறை பத்தி இப்ப தான் கேள்விபடுறேன். நல்லதொரு தகவல் மது

வாழ்த்துகள்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 on June 4, 2012 at 3:34 AM said...

நல்ல பதிவு நன்றி

srinivasan on September 1, 2013 at 11:28 PM said...

அப்பா !மடிகணிணி நம்மளிடம் இல்லை !

srinivasan on September 1, 2013 at 11:28 PM said...

அப்பா !மடிக்கணிணி நம்மளிடம் இல்லை!