Wednesday, February 29, 2012

ஜீமெயில் உங்களுக்கு வழங்குகிறது ஆன்லைன் இடவசதி.


உங்களிடம் ஜீ மெயில் கணக்கு உள்ளதா? அப்படியாயின் கூகிள் வழங்கும் அசத்தலான சேவை ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆம் நீங்கள் ஜீமெயில் கணக்கு வைத்திருந்தால் போதும் உங்கள் கணனியில் Drive ஆக பயன்படுத்தும் வசதியை Gmail வழங்கியுள்ளது. இந்த சேவையில் 25Mb அளவுள்ள இடவசதி வழங்கப்படுகிறது.


இந்த 25Mb அளவுள்ள Drive மூலம் என்ன பயன் என்று கேட்குறீர்களா? Gmail மூலம் 25Mb அளவுள்ள File களை Attach பண்ணி அனுப்பக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் பல வேளைகளில் அதிக அளவுள்ள (25Mb க்கு உட்பட்ட) File களை Attach பண்ணும்போது Fail ஆகிவிடும். ஆனால் இந்த Gmail Drive இனுள் File களை Copy செய்துவிட்டு அதனை இலகுவாக Gmail இல் இணைத்துக்கொள்ளலாம்.

இதனை எவ்வாறு பெறுவது எவ்வாறு நிறுவுவது. என்பது பற்றி அடுத்து நோக்குவோம்
  • முதலில் இங்கு GMail Driver கிளிக் செய்து இதனை உங்கள் கணனியில் நிறுவுக்கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்கள் கணனியில் My Computer க்கு சென்று பாருங்கள் அங்கு Gmail Driver எனப் பெயரிடப்பட்டு Drive வடிவில் ஒரு Icon  காணப்படும். அதில் Right Click செய்து Log in எனும் பகுதியை கிளிக் செய்யுங்கள்.


  • அவ்வாறு log in கொடுத்தவுடன் Pop up Window இல் உங்கள் கணக்கு User name  மற்றும் Password ஐ கொடுத்து Log in செய்து உங்கள் கணக்கை ஆரம்பித்துக் கொள்ளலாம்.


இந்த Drive இன் மூலம் நீங்கள் வழமையாக செய்யும் Copy,Paste,Drag  என்பவற்றை இலகுவாக மேற்கொள்ளலாம்.
  • உங்களது தேவை முடிந்தவுடன் அவ் Icon இல் Right Click  செய்து Logout கொடுத்துவிடவும்.

அதுமட்டுமன்றி உங்கள் கணக்குக்கு வரும் Mail களை இந்த Drive ற்கு Forward  செய்தும் பார்த்துக்கொள்ளலாம்.இப்போது 25Mb வழங்கப்பட்டாலும் காலப்போக்கில இடவசதி அதிகமாக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பு-  இவை அனைத்து செயற்பாடுகளுக்கும் இணைய வசதி இருப்பது கட்டாயம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Gmail Tips, google, Internet Tips

Post Comment

0 comments: