Tuesday, February 21, 2012

பேஸ்புக்கின் புதிய Timeline ஐ உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைப்பது எப்படி


பேஸ்புக் அண்மையில் தனது வடிவமைப்பை Timeline ஆக மாற்றியிருந்தது. இந்த மாற்றம் சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. பலர் Timeline ஐ பழைய தோற்றத்திற்கு மாற்ற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். Timeline ஐ பழைய தோற்றத்தை மாற்றுவதற்கு Extensions, Add- ons என்பவை வந்திருந்தன. அதை கொண்டு பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இப்போது புதிய Timeline ஐ உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய Add - On வெளிவந்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல.. ஏராளமான அசத்தல் வசதிகள் இதில் உள்ளன. அதில் முக்கியமான வசதியாக இரண்டு Column ஆக இருக்கும் Timeline ஐ சிங்கிள் Column ஆக மாற்றக்கூடியதாக உள்ளது.

Tabbed News Feed

New Feed வசதியானது Feed ஐ வகை வகையாக பிரிக்கிறது.  Feed Filter ஐயும் கொண்டுள்ளதால் படித்த Feed களை Automatic ஆக மறைத்துவிடுகிறது. அத்துடன் Feed ஐ Home, Twitter என இருவகையாக பிரித்து பேஸ்புக் Feed ஐ ஒன்றிலும் Tweeter மூலம் பகிரப்பட்டவற்றை இன்னொரு பிரிவிலுமாக தருகிறது. கீழ் உள்ள படத்தை பாருங்கள்

மேலும் இதில் உள்ள புதிய வசதிகள்

பேஸ்புக் Groups ஐ சைட் Tap இல் வரிசைப்படுத்தியது போன்று நீங்கள் Like பண்ணிய Pages ஐயும் வரிசைப்படுத்துகிறது

கமெண்ட்ஸ் இற்கு Reply வசதி.. இதனால் இலகுவாக Reply செய்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

புகைப்படங்களுக்கு மேல் Mouse ஐ கொண்டு செல்லும்போது Automatic ஆக புகைப்படங்களை பெரிதாக்கி காண்பிக்கிறது.

புதிய கமெண்ட்ஸை Highlight செய்து காண்பிக்கிறது.

உங்களை யாராவது Unfriend செய்தால், யார் Unfriend செய்தார்கள் என காண்பிக்கிறது.
இப்படி பல வசதிகள் இந்த Add-On இல் உள்ளது. அனைத்து இணைய உலாவிகளுடனும் ஒத்துழைக்கக்கூடிய வகையில் உள்ளது.
தரவிறக்க Social Fixer

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook

Post Comment

0 comments: