Tuesday, February 21, 2012

லேப்டாப்பை (laptop) பாதுகாப்பதற்கான இலகு வழிகள் - A Complete Guide- பாகம் 2


பாகம் 1 ஐ படிக்க கிளிக்

சிறந்த பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவி கொள்ளுங்கள்.

கணினி பாதுகாப்பிற்கென ஏராளமான மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் சிறந்த மென்பொருள்களை தெரிவு செய்து பயன்படுத்தலாம். IObit Toolbox என்னும் மென்பொருள் இவற்றுள் சிறப்பானது. Cleaning, Repairing, security என 20 வகையான Categories ஐ கொண்டுள்ளது இந்த மென்பொருள்.


BattCursor என்ற மென்பொருள் பாட்டரி சார்ஜ் அளவு குறைவடையும் போது உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இந்த மென்பொருளை நிறுவி விட்டால் பாட்டரி குறைவடையும்போது மவுஸ் கேர்ஸருக்கு கீழே பாட்டரியின் அளவை காட்டிக்கொண்டிருக்கும்.

மெமரியை சேமியுங்கள்

ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லாதபோது மென்பொருள்களை நிறுவுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் Portable மென்பொருள்களை USB Drive இனுள் சேமித்து பயன்படுத்துங்கள்

ஸ்கிரீன் மற்றும் கீபோர்டில் கவனம் செலுத்துங்கள்

எந்த வேளையிலும் லேப்டாப்பின் ஸ்கிரீன் மற்றும் கீபோர்ட் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துக்கொள்ளுங்கள். பலவேளைகளில் நாம் கீபோர்டை சரியான முறையில் பராமரிப்பதில்லை. இப்படியான சமயங்களில் கீபோர்டில் தூசி படிந்திருப்பதை அவதானிக்கலாம். இவை கீபோர்டின் தொழில்பாட்டு வேகத்தை குறைக்கிறது.  லேப்டாப்பின் முன் இருந்து உணவு அருந்துவதை தவிர்க்கலாம். அல்லது கீபோர்ட், ஸ்கிரீனுக்கு Protect Covers உபயோகிக்கலாம்
Protect Cover
முக்கியமான விடயம் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பின் ஸ்கிரீன் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. மிகவும் கவனமாக பாதுகாக்கப்படவேண்டியவற்றுள் ஸ்கிரீனும் ஒன்று. screen guard  உபயோகிப்பது நல்லது. Scratches, Marks போன்றவற்றில் இருந்து screen guard  பாதுகாப்பை கொடுக்கும்.

ஈரமான எதை கொண்டும் ஸ்கிரீனை Clean செய்யாதீர்கள். உலர்ந்த மென்மையான துணிகளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

அத்தோடு சில அடிப்படையான மென்பொருள்களை நிறுவிக்கொள்ளுங்கள். Disk Space, CPU Usage போன்றவற்றை அறிந்துகொள்ள FreeMeter என்ற மென்பொருளை உபயோகியுங்கள்

Battery Care என்ற மென்பொருளின் மூலம் battery capacity, Battery Mode, Basic Information போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Compuer Tips, Hardware, Laptop

Post Comment

2 comments:

காட்டான் on February 21, 2012 at 2:26 PM said...

Saringka

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 on June 4, 2012 at 3:43 AM said...

லேப்டாப் பாதுகாப்புக்கு உதவும்" டாப் "பதிவு வாழ்த்துக்கள்