Sunday, February 26, 2012

Android தொலைபேசிகளை Wi-Fi மூலம் Sync பண்ணுவது எப்படி


 Smart Phone களை Sync பண்ணுவதற்கு அவற்றை USB கேபிள் மூலம் கணினிகளில் இணைத்து Sync பண்ணுவோம். ஆனால் இப்போது புதிய வசதியாக Wireless முறையில் தொலைபேசிகளை Sync பண்ணும் முறை Android வகை தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மென்பொருளை Android Marketplace இல் இருந்து தரவிறக்கி பயன்படுத்தவேண்டும். AirDroid  எனப்படும் இந்த மென்பொருள் முற்றுமுழுதாக இலவசமானது.

Wi-Fi மூலம் தொலைபேசியை கணினியுடன் இணைத்து Sync பண்ண இந்த மென்பொருள் உதவுகின்றது.


உங்கள் Anroid தொலைபேசியில் Marketplace ஐ ஓபன் செய்து AirDroid  என தேடுங்கள். தேடி இம் மென்பொருளை பெற்று Install செய்யுங்கள். Install செய்ததும் AirDroid மென்பொருளை திறந்து முகப்பு பக்கத்தில் உள்ள Start ஐ அழுத்துங்கள்.
 Start ஐ அழுத்தியதும் AirDroid உங்களுக்கு ஒரு IP Address மற்றும் பாஸ்வேர்ட் தரும். அந்த IP Address ஐ உங்கள் கணினி இணைய உலாவியின் Address bar இல் இட்டு Enter பண்ணுங்கள்.
Enter பண்ணியதும் AirDroid system உங்கள் கணினி இணைய உலாவியில் ஓபன் ஆகும். தொலைபேசியில் ஏற்கனவே தந்த பாஸ்வேர்டை கொடுத்து Log in செய்து கொள்ளுங்கள். 
 log in செய்ததும் பிரதான Navigation மெனு தோன்றும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Android, Mobile tips

Post Comment

0 comments: