Wednesday, March 7, 2012

20$ பெறுமதியான அட்டகாசமான Inpaint மென்பொருள் முற்றிலும் இலவசமாக


புகைப்பட எடிட்டிங் துறையிலே Adobe Photoshop, Photo Impact போன்ற தரம்வாய்ந்த மென்பொருள்கள் இருந்தாலும், அவை சாதாரணமான பாவனையாளர்களால் இலகுவாக பயன்படுத்த முடியாதவை. ஆனால் இப்போது இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் பல சிறிய சிறிய மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. Photoshop போன்ற மென்பொருள்களில் செய்ய கஷ்டமாக இருக்கும் சில செயற்பாடுகளை கூட இதுபோன்ற சிறிய மென்பொருள்களின் உதவியுடன் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது.


அந்த வகையில் Photoshop இல் உள்ள Stamp Tool இற்கு பதிலாக வெளிவந்த சிறிய மென்பொருள்தான் Inpaint. போட்டோக்களில் உள்ள தேவையற்ற Watermark, Logos போன்றவற்றை இலகுவாக அகற்றுவதற்கு உதவி செய்கிறது. போட்டோக்களில் உள்ள நபர்களை கூட இந்த மென்பொருளின் உதவியுடன் நீக்கிக்கொள்ளலாம்.


இந்த மென்பொருளின் சிறப்பம்சம்

  • Repair old photos
  • Remove watermarks
  • Erasing Power Lines
  • Remove unwanted objects
  • Digital Facial retouching
  • Remove date stamps
  • Erase wrinkles and skin blemishes
 
19.99$ பெறுமதியான இந்த மென்பொருள் இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு முதலில் இங்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் Inpaint 

அதன் பின்னர் இந்த Special Promotion பக்கத்திற்கு செல்லுங்கள் Click Here

இந்த பக்கம் ஜேர்மன் மொழியில் இருக்கும். ஆகவே கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை கவனமாக பின்பற்றுங்கள். Vorname என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுங்கள், Nachname என்ற இடத்தில் Last Name கொடுங்கள், அதன்பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரி, Sprache என்ற இடத்தில் மொழியை தேர்வு செய்யுங்கள்.
படிவத்தை பூர்த்தி செய்ததும் Absenden (sent) பட்டனை கிளிக் பண்ணுங்கள். கிளிக் பண்னியதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Confirmation mail அனுப்பப்படும். 

அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பை கிளிக் செய்து Confirm பண்ணியதும் உங்களுக்கான லைசன்ஸ் கீ தரப்படும்
அதன் பின்னர் நிறுவப்பட்ட மென்பொருளை Open செய்து Help > Enter the License Key சென்று தரப்பட்ட கீயை கொடுத்து Active ஆக்கிக்கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை


பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
downloads, software review

Post Comment

0 comments: