Monday, March 12, 2012

கணினி மானிட்டரை தற்காலிகமாக Off செய்வதற்கான இலகு Shotcut


கணினி இயக்கத்தில் இருக்கும்போதே மானிட்டரை off செய்வதற்கு மானிட்டரில் உள்ள Power பட்டனை பாவிப்போம். இதற்கு ஒரு ShortCut இருந்தால் எப்படி இருக்கும். இலகுவாக இருக்கும் அல்லவா? அதோடு சாதாரண மானிட்டர்களுக்கு Power பட்டனை உபயோகிப்பது இலகுவாக இருக்கும். 30 inch மானிட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும் அல்லவா? அதற்கு ஒரு Shortcut இருந்தால் உபயோகமாக இருக்கும். அப்படி ஒரு Shorcut ஐ எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.

மிகவும் இலகுவானது. சிறிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவி அதற்குரிய Shortcut ஒன்றையும் உருவாக்கிக்கொண்டால் சரி. இந்த இணைப்பில் சென்று அந்த மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள் NirCMD.

தரவிறக்கியதும் Winrar Format இல் இருக்கும் மென்பொருளை Extract பண்ணிக்கொள்ளுங்கள். அதில் nircmd என்ற பெயரில் இரண்டு file கள் இருக்கும். அதில் ஒன்றை டபிள் கிளிக் செய்து Open பண்ணுங்கள்.

மென்பொருள் Open ஆகியதும் அதன் கீழ் பக்கத்தில் உள்ள Copy To Windows Directory என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் அந்த மென்பொருளை Close செய்துவிடுங்கள்.

இப்போது Desktop இல் Right Click செய்து New > Shorcut என்பதை கொடுங்கள். கொடுத்ததும் புதிய விண்டோ ஒன்று Open ஆகும்.


 அதில் கீழ்வரும் வரிகளை காப்பி பேஸ்ட் பண்ணுங்கள்.

"%WINDIR%\nircmd.exe" cmdwait 1000 monitor off

அடுத்துவரும் விண்டோவில் Shortcut இற்கான பெயரை கொடுத்து Finish கொடுங்கள். இப்போது மானிட்டரை Sleep Mode இற்கு கொண்டுசெல்வதற்கான Shortcut  உங்கள் Desktop இல் தோன்றியிருக்கும். அதனை டபிள்கிளிக் செய்வதன் மூலம் மானிட்டரை Sleep Mode இற்கு கொண்டு செல்லலாம் (off Monitor).

உதவிக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Compuer Tips

Post Comment

0 comments: