Friday, March 16, 2012

Mozila Firefox உலவியில் இணையத்தளங்களை தடைசெய்வதற்கான Add-On


Mozila Firefox  உலவியில் தேவையற்ற இணையத்தளங்களை முடக்குவது தற்போது இலகுவான முறையாக காணப்படுகிறது. அதாவது Mozila Firefox  உலவி இதற்காக புதிதான ஒரு Add on ஐ வெளியிட்டுள்ளது. இந்த Add on மூலம் தேவையற்ற இணையத்தளங்களை முடக்க கூடியதாக உள்ளது.உதாரணமாக பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் தடுக்க வேண்டும் எனில் இந்த Add - on சென்று Block List இல் www.facebook.com என்று கொடுத்துவிட்டால் அதன் பின்னர் பேஸ்புக் தளத்தை பார்வையிடமுடியாது.

இதை பெறுவதற்கு முதலில் நீங்கள் Firefox உலவியை Open செய்து அதில் Tools என்பதை Click செய்து அதில் Add ones எனும் பகுதி காணப்படும் அதனை Click செய்யவும் அதன் பின் அங்கு தோன்றும் Window வில Get Addones என்பதை Click செய்யவும்

பின்னர் அடுத்து தோன்றும் Window இல் "Browse All Add - ons" எனும் பகுதியை கிளிக் செய்யவும். பின் அங்கு Search box ஒன்று தோன்றும் அந்த Search Box இனை கிளிக் செய்து அதில் "Blocksite" என்பதை Type செய்யவும்

பின்  அந்த Add one-s ஐ Firefox உலவியில் Install செய்து கொள்ளவும். Install செய்த பின் உலவியை மீள இயக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்படும்  அப்போது அதனை click செய்து Restart செய்யவும் .அதன் பின் மீண்டும் Tools இக்கு சென்று அங்கு Add - ons என்பதை Click செய்த பின் அங்கு Extension என்பதை click  செய்து அங்கு "Blocklist" எனும் Add on நிறுவியிருப்பதை உறுதிசெய்யலாம்.

பின்னர் Blocklist எனும் என்பதை Click செய்யவும் பின் அதில் காணப்படும் Option என்பதை Click செய்து அங்கு தோன்றும் Window வில் "Enable Block site","Enable warning messages" , "Enable link removal" என்பவற்றை Tick செய்யவும்.

பின்னர் அங்கு காணப்படும் Add  எனும் Button ஐ Click செய்து அங்கு தோன்றும் விண்டோவில் நீங்கள் முடக்க வேண்டிய தளத்தின் URL இனை type  செய்து Ok  Button இனை click  செய்யவும். பின்னர் விண்டோவின் அடியில் காணப்படும் OK Button ஐ கிளிக் செய்து நீங்கள் செய்த Setting களை சேமித்துக் கொள்ளலாம்.

பின்னர் முடக்குவதற்காக கொடுத்த URL இனை Address bar  இல்   type செய்து அவ் தளத்தை பார்வையிட முயற்சிக்கும் போது உங்களது திரையில் பின்வருமாறு தோன்றும் " This website or elements thereof, are on the Block site (or not on the white list) and have not bee loaded" எனும் Pop up  தோன்றும் அவ்வாறு தோன்றினால் குறிப்பிட்ட அத்தளத்துக்கு நீங்கள் பிரவேசிக்க முடியாது என்பது பொருள்.

அதுமட்டுமின்றி ஒரு தளத்தை மடடுமல்லாமல் பல தளங்களையும் இந்த சேவையின் மூலம் தடை செய்ய முடியும். மேலும் நீங்கள் முடக்கிய தளங்களை ஏனையவாகள் பார்க்க முற்படும் போது நீங்கள் அதற்கு கடவுச்சொல்லை கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதாவது நீங்கள் முடக்குவதற்காக தளத்தின் பெயரை கொடுக்கும் இடத்தின் மேல் Enable authentecation  என்பதை கிளிக் செய்து அதற்கு கீழ் உள்ள இடைவெளியில் கடவுச் சொல்லை Type செய்து Ok Button இனை கொடுத்து உறுதிப்படுத்தினால்  போதும் வேறுயாரும் நீங்கள் முடக்கிய தளங்களை பார்க்க முடியாது.

 முடக்கிய தளத்தை நீங்கள் பார்வையிட விரும்பினால் தளத்தை Add செய்யும் இடத்திற்க்கு வந்து முடக்கிய அவ் குறிப்பிட்ட தள முகவரியை Click  செய்து Remove என்பதை கொடுப்பதன் மூலம் அவ் தளத்தை மீண்டும் நீங்கள் பார்வையிடலாம்.
உதவிக்கு வீடியோவை பாருங்கள் Block a website in firefox

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Firefox Application, Internet Tips, Mozila firefox, Online Security

Post Comment

0 comments: