Saturday, March 24, 2012

Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் -2


Windows இயங்குதளத்தை பாவிப்பவர்கள் அடிக்கடி ஏற்படும் Windows Error பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பார்கள்.  ஏற்கனவே Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையும் அதற்கான தீர்வும் என்னும் தலைப்பில் windows இல் ஏற்படும் பிரச்சினை சம்மந்தமாக ஒரு பதிவினை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகிறது.


Windows XP இல் பொதுவாக ஏற்படும் சில பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் பற்றி பார்ப்போம்.

1. “Please go to the Control Panel to install and configure system components”

My Computer இல் ஏதாவது ஒரு Drive ஐ Open பண்ணுவதற்கு Double கிளிக் பண்ணும்போது இந்த Error Message தோன்றும். இதற்கு காரணம் அந்த Drive இனுள் Autorun.inf எனப்படும் ஒரு File இருப்பதே. ஆகவே இந்த Error Message தோன்றும்போது அந்த Drive இன் மீது Right Click செய்து Open என்பதை கொடுத்து Open பண்ணி அதற்குள் இருக்கும் Autorun.inf ஐ அழித்துவிடுங்கள். அதன் பின்னர் Windows ஐ Restart பண்ணிவிடுங்கள்

2.“Task Manager has been disabled by your administrator”

கணினியில் Task Manager ஐ Open பண்ணும்போது இந்த Error Message தோன்றும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
  • Run ஐ Open செய்யுங்கள் (Start > Run or Winkey+R). Open செய்ததும் கீழுள்ள Command வரிகளை Copy செய்து Past பண்ணுங்கள். Past பண்ணியதும் ok பண்ணுங்கள்.
    REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f
    • இரண்டாவது வழி, Start > Run என்ற வழியே சென்று Run Open ஆகியதும் “Regedit.exe” என ரை செய்து Enter பண்ணுங்கள். அடுத்து வரும் விண்டோவில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System என்ற வழியே செல்லுங்கள். அங்கு Value என்ற பகுதியின் கீழ் “DisableTaskMgr” என்றிருப்பதை அழித்து விடுங்கள். அவ்வளவும்தான்
    Windows Error

    3.“Automatic server can’t create object”
    User Account Control Panel ஊடாக user account இற்குரிய Profile படத்தை மாற்ற முயற்சிக்கும் போது இந்த Error Message தோன்றும். இதற்கு Start > Run சென்று “REGSVR32SHIMGVW.DLL” என ரைப் செய்து Enter பண்ணுங்கள்.

    4.“Device Driver for the standard 101/102-key or Microsoft Natural PS/2 error”

    இந்த Error Message தோன்றுவதற்குரிய காரணம் உங்கள் கணினியில் Adobe Type Manager மென்பொருளின் பழைய வேர்சன் நிறுவப்பட்டுள்ளமையே. (eg:- 4.0). இதற்கு அந்த மென்பொருளை அப்டேட் செய்துகொண்டால் சரி.

    அப்டேட் செய்வதற்கு
    Windows Vista வில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வும்
    1. “There is no script engine for file extension”

    Java Script file (.js) ஒன்றை Run பண்ணும்போது இந்த Error Message தோன்றும். இதற்கு
    • Start > All Programs > Accessories என்ற வழியே சென்று Command Prompt இல் Right Click செய்து Run as administrator என்பதை கிளிக் செய்து Open செய்துகொள்ளுங்கள்
    • பின்வரும் வரிகளை Copy செய்து Past பண்ணியபின் Enter பண்ணுங்கள். regsvr32 %systemroot%\system32\jscript.dll
    • அதன் பின்னர் Command Prompt இல் Exit என ரை செய்து Enter பண்ணி Command Prompt ஐ Close பண்ணுங்கள்.
    • அதன் பின்னர் இந்த இணைப்பில் vista_js_fix.reg இனை தரவிறக்கி கொள்ளுங்கள். (windows Xp இற்குரிய Js Fix fil ஐ தரவிறக்க xp_js_fix.reg)
    • தரவிறக்கிய File இன் மீது Right Click செய்து Merge என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் விண்டோவில் yes என்பதை கொடுங்கள்.
    2.“Unable to open .PDF attachments from Windows Mail”

    windows Mail இல் attachment ஆக வந்த சில PDF File களை Open செய்யும்போது இந்த Error Message தோன்றும். இதற்கு முதலில் unassoc.zip என்ற மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள். தரவிறக்கியதும் Open செய்து லிஸ்டில் Error ஆன PDF File ஐ தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்ததும் Delete file Type என்பதை கிளிக் பண்ணுங்கள்.

    அடுத்ததாக Adobe Reader மென்பொருளை Repair செய்யவேண்டும். இதற்கு Adobe Reader ஐகான் மீது Right Click செய்து Run as administrator என்பதை கிளிக் பண்ணுங்கள். பின்னர் Help > Repair Adobe Reader Installation என்ற வழியே சென்று Repair செய்துகொள்ளுங்கள்

    3.“Internal error 2755.110″

    இந்த Error நீங்கள் Windows Installer Cleanup Utility மென்பொருளை நிறுவும்போது ஏற்பட்டிருக்கும்.

    இதன்போது உங்கள் Windows ஐ Restart பண்ணுங்கள். அதன் பின்னர் Start > Run செல்லுங்கள். அங்கு %temp% என ரைப் செய்து Enter பண்ணுங்கள். இப்போது Temporary file கள் அடங்கிய Folder Open  ஆகும். அதிலுள்ள முழு File ஐயும் அழித்துவிடுங்கள். அதன்பின்னர் Windows Installer Cleanup Utility மென்பொருளை நிறுவினால் சரியாகிவிடும்.


    பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

    உங்கள் மின்னஞ்சல் முகவரி:

    For Further Reading,
    Compuer Tips, Windows

    Post Comment

    0 comments: