Sunday, March 4, 2012

இணைய இணைப்பில்லாமல் iPod ஐ Restore பண்ணுவது எப்படி


iPod இன் பாஸ்வேர்டை மறக்கும் தருணங்களிலோ அல்லது iPod இன் Software Version ஐ Upgrade செய்யவேண்டிய தருணங்களிலோ உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படும். கணினியுடன் iPod ஐ இணைத்தது iTunes மென்பொருளினூடாக Restore என்பதை கொடுத்து Upgrade பண்ணும்பொழுது இணைய இணைப்பினூடாக iPod இற்குரிய Firmware தரவிறக்கப்பட்டு அதன் பின்னர் install ஆகும்.

ஆனால் இணைய இணைப்பில்லாமல் எப்ப்டி iPod ஐ Restore பண்ணுவது? அதற்கான வழிகளை கீழே சொல்கிறேன்.

எச்சரிக்கை :- இதை செய்வதற்கான படிமுறைகளை Step by Step ஆக தருகிறேன். இருந்தபோதும் முன் அனுபவம்/ Apple தயாரிப்புகள் பற்றிய போதுமான தெளிவு இல்லாமல்  முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

  • முதலில் இந்த இணைப்பில் சென்று உங்கள் iPod Version இற்குரிய Firmware இனை தரவிறக்கி கொள்ளுங்கள். Firmware
  •  iPod ஐ off செய்யுங்கள் ( இதன்போது iPod ஐ கணினியுடன் இணைத்திருக்கக் கூடாது)
  • off செய்த பின்னர் Home பட்டனை அழுத்தியவாறே கணினியுடன் USB Cable மூலமாக இணையுங்கள். இணைத்ததும் உங்கள் iPod இல Restore Window ஓபின் ஆகும். அதன் பின்னரே Home பட்டனில் இருந்து கையை எடுங்கள்.
  • இப்போது உங்கள் iPod திரை கீழ் கண்டவாறு இருக்கும்



  • இப்போது iTunes இற்கு வாருங்கள்
  • iTunes இல் உங்கள் iPod இன் விபரங்கள் காட்டப்படும். அதன் கீழே உள்ள Restore என்ற பட்டனை, கணினி கீபோர்டில் Shift கீயை அழுத்தியவாறே கிளிக் பண்ணுங்கள்

                                     

  •  கிளிக் பண்ணியதும் புதிய விண்டோ Open ஆகும். அதில் ஏற்கனவே தரவிறக்கிய Firmware ஐ தெரிவு செய்யுங்கள்.


  • செலக்ட் செய்து Open செய்ததும் iPod Restore Process ஐ ஆரம்பிக்கும்


தயவு செய்து Restore Process முடியும் வரை iPod ஐ Disconnect பண்ணவேண்டாம். Restore Process முடிந்ததும் iPod Restart ஆகும். இப்போது உங்கள் iPod Restore ஆகியிருக்கும்

அவ்வளவும் தான் வேலை

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Apple, iPod, Mobile tips

Post Comment

3 comments:

தாமரைக்குட்டி on March 4, 2012 at 1:19 PM said...

தொழில்நுட்ப மன்னன் ஐயா நீர்........

தாமரைக்குட்டி on March 4, 2012 at 1:20 PM said...

தொழில்நுட்ப மன்னன் ஐயா நீர்.......

ibu on July 21, 2012 at 11:11 PM said...

good.news