Wednesday, March 28, 2012

கைத்தொலைபேசியில் Youtube வீடியோவை இலகுவாக தரவிறக்க


கைத்தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை பார்க்கும் போது உங்களை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படலாம். அடிக்கடி பார்க்கவேண்டிய வீடியோக்களை தரவிறக்கி வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட Bandwidth ஐ விரயம் செய்யத்தேவையில்லை. கணினியில் என்றால் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் தொலைபேசிகளில் இது சற்று சிரமமானதே.
Symbian, Android மற்றும் Opera Mini உபயோகிக்கும் தொலைபேசிகளில் சிறிய Java Script ஐ உபயோகிப்பதன் மூலம் Youtube வீடியோக்களை இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.

அதற்கு முதலில் இந்த இணைப்பில் சென்று Opera Mini Browser ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள். Opera Mini

தரவிறக்கி நிறுவிய பின்னர் Opera Mini இன் Book Mark பகுதிக்கு செல்லுங்கள். அங்கு கீழுள்ள Java Script வரிகளை காப்பி செய்து Address என்ற இடத்தில் Past செய்துகொள்ளுங்கள். Title என்ற இடத்தில் Download Youtube என்று கொடுங்கள்.

javascript:d=document;s=d.createElement(“script”);s.src=”http://userscripts.org/scripts/source
/129114.user.js”;d.body.appendChild(s);void(0);

Download Youtube Videos

அதன் பின்னர் தரவிறக்கவேண்டிய வீடியோவிற்கு செல்லுங்கள். வீடியோ பகுதிக்கு சென்றதும் Opera Mini யின் கீழ் பகுதியில் உள்ள Desktop  என்பதை கிளிக் பண்ணுங்கள்

அடுத்து Book Mark பகுதிக்கு செல்லுங்கள். அதில் ஏற்கனவே Create பண்ணிய Java Script Bookmark ஐ கிளிக் பண்ணுங்கள். இப்போது Youtube Video Page Refresh ஆகும். Refresh ஆகியதும் வீடியோவின் கீழ் Download பட்டன் ஒன்று இருப்பதை காணலாம்.


அதில் கிளிக் செய்து விரும்பிய Format இல் தரவிறக்கி கொள்ளலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Android, Download Videos, Mobile Software, Mobile tips

Post Comment

4 comments:

மாசிலா on March 28, 2012 at 5:20 PM said...

வணக்கம் மதுரன்.
சாம்சுங் கலாக்சி டேப்'இல் உங்களது டிப்ஸ் வேலை செய்யவில்லை.
பகிர்வுக்கு நன்றி.

தாமரைக்குட்டி on March 28, 2012 at 7:55 PM said...

மதுரா.... நான் முன்பே சொல்லியதுதான்.... மீண்டும் நிரூபித்துவிட்டாய்.... நீ சந்தேகமே இல்லாமல் ஜீனியஸ் தான்....

Mathuran on March 28, 2012 at 10:31 PM said...

@மாசிலா

சாம்சுங் கலக்சியில் வேலை செய்கிறது நண்பா.. Java Script ஐ சரியான முறையில் கொடுங்கள்

Mathuran on March 28, 2012 at 10:32 PM said...

@தாமரைக்குட்டி

ஹி ஹி நன்றி தாமர