Tuesday, March 13, 2012

கம்பியூட்டர் command prompt ஆச்சரியமான வசதிகள்


command prompt ஐ பயன்படுத்தி கணினி மானிட்டரை தற்காலிகமாக Off செய்வதற்கான இலகு Shotcut பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். கணினியில் சாதாரணமாக செய்யமுடியாத பல விடயங்களை command prompt மூலம் செய்யலாம். இப்போது command prompt ஐ பயன்படுத்தி செய்யக்கூடிய சில வசதிகளை பார்ப்போம்.

கீழ்வரும் 4 கட்டளைகளுக்கும் Nircmd நிறுவியிருக்கவேண்டும். இதுபற்றி இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். Click Here
1. Open/Close Optical Drive
CD/ DVD Drive களை Open செய்வதற்கும் Close செய்வதற்கும் இந்த கட்டளையை பயன்படுத்தலாம். Command prompt ஐ open செய்துகொள்ளுங்கள் (Start > Run> cmd & enter or WinKey+R)

அடுத்து கீழ்வரும் வரிகளை Command Prompt இல் காப்பி பேஸ்ட் பண்ணுங்கள்.

nircmd.exe cdrom open d:   

இங்கு d: என்பது CD Drive இன் Drive letter. அதை உங்கள் Drive Letter இற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளுங்கள்

Drive ஐ Close பண்ண  nircmd.exe cdrom close d: என்ற வரிகளை உபயோகியுங்கள்

2. கணினியின் System Volume ஐ அதிகரிக்க
கணினியின் System Volume ஐ அதிகரிப்பதற்கு பின்வரும் வரிகளை Command Prompt இல் காப்பி பேஸ்ட் பண்ணுங்கள்

nircmd.exe setsysvolume 65535

3. Volume ஐ Mute பண்ண

கணினி System Volume ஐ Mute பண்ணுவதற்கு கீழ்வரும் வரிகளை காப்பி செய்து Command Prompt இல் பேஸ்ட் செய்து Enter பண்ணுங்கள்.

nircmd.exe mutesysvolume 2

4. அனைத்து விண்டோக்களையும் Close பண்ண

திறந்து வைத்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் Open பண்ண கீழ்வரும் வரிகளை காப்பி பேஸ்ட் பண்ணுங்கள்

nircmd.exe win close class "CabinetWClass"
 
முக்கிய குறிப்பு : Command prompt இல் Ctrl+v என்ற Shortcut மூலம் பேஸ்ட் பண்ணமுடியாது. ஆகவே Command Prompt இல் RightClick செய்து பேஸ்ட் பண்ணுங்கள்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
command prompt, Compuer Tips

Post Comment

0 comments: