Monday, March 26, 2012

Gmail இற்கு வரும் Spam மெயில்களை Automatic ஆக அழிப்பது எப்படி


மின்னஞ்சல் பாவிப்பவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய அசௌகரியம் என்று சொன்னால் அது இந்த Spam மெயில்கள்தான். முன்னர் இந்த Spam மெயில்களும் ஏனைய மெயில்களுடன் சோ்ந்து Inbox இல் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது பெரும்பாலான மெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் Spam மெயில்களை Spam Filter மூலம் கண்டறிந்து அவற்றை பிரித்து Spam என்னும் பிரிவினுள்(Folder) போட்டுவிடுகின்றன.

Spam Mail என்றால் என்ன?
இந்த Spam Mail என்னும் வகையினுள் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், உங்கள் தனிப்பட்ட தகவல்களை கறக்கும் Phishing Mail கள், இன்னபிற ஏமாற்று மெயில்களும் உள்ளடக்கம்.

இவ்வாறு வரும் Spam மெயில்களை Gmail இல் உள்ள Spam Filter கள் அனுப்புனரை வைத்து இலகுவாக அடையாளம் கண்டு Spam folder இற்கு அனுப்பிவிடுகின்றது. இதனால் Spam Folder ஆனது Spam மெயில்களால் நிறைந்து காணப்படும்.

இப்போது Gmail இல் இந்த Spam மெயில்களை Automatic ஆக அழித்துவிடக்கூடிய வசதி வந்துள்ளது. இதை செயற்படுத்துவதற்கு உங்கள் gmail ஐ Log in செய்துகொள்ளுங்கள். அதன்பின்னர் Settings செல்லுங்கள்
அதன் பின்னர் Filter Tab ஐ கிளிக் செய்து Create New Filter என்பதை கிளிக் பண்ணுங்கள்
கிளிக் பண்ணியதும் Pop up விண்டோ ஒன்று தோன்றும். அதில் Has the words என்னும் Fiels இல் in:spam என்று ரைப் பண்ணுங்கள். ஏனைய Fields ஐ Empty ஆகவே விடுங்கள்
அதன் பின்னர் Create Filter with this Search என்பதை கிளிக் செய்து Ok பண்ணி அடுத்த Step இற்கு செல்லுங்கள். அடுத்து வரும் விண்டோவில் Delete it, Also Apply filter to matching conversions என்ற இரு Option களையும் Check செய்யுங்கள்.

அதன்பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவும்தான். இப்போது உங்கள் Spam Folder இற்கு வரும் அத்தனை மெயில்களும் Automatic ஆக அழிக்கப்பட்டுவிடும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Gmail Tips, google, Internet Tips, Online Security

Post Comment

1 comments:

மும்தாஜ் on March 27, 2012 at 9:35 PM said...

பயனுள்ள தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி...