Monday, March 5, 2012

இணைய மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த 6 தளங்கள்


நீங்கள் HTML, Java, CSS போன்ற இணைய மொழிகளை கற்கும் மாணவரா? அல்லது இவ் இணைய மொழிகளை ஆன்லைனிலேயே கற்பதற்கு சரியான தளங்களை தேடிக்கொண்டிருப்பவரா? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு நல்ல பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறேன்.

இணைய மொழிகளின் அடிப்படைகளை இலகுவான முறையில் கற்றுத்தரும் சிறந்த 6 தளங்களை இங்கு பட்டியல் படுத்துகிறேன்.


1. W3School

HTML, Scripting, XML, Web Services, Web Building போன்றவற்றை இணையத்தில் கற்றுக்கொள்ள சிறந்த தளம்.
இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சமான விடயம் இந்த தளத்தில் கற்கும் விடயங்களை உடனுக்குடன் அதிலேயே பரீட்சித்து பார்க்கலாம். அதற்கு “Try It Yourself Editor” என்னும் வசதியையும் தந்துள்ளார்கள்.
 
இதேவேளை W3School தளமானது certification கற்கைநெறிகளையும் ஆன்லைனிலேயே செய்கிறது.
  • HTML Certificate
  • CSS Certificate
  • JavaScript Certificate
  • jQuery Certificate
  • XML Certificate
  • ASP Certificate
  • PHP Certificate
போன்ற கற்கைநெறிகளை 95$ செலுத்தி கற்று இந்த தளத்தால் வழங்கப்படும் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தளம் செல்ல W3School

2. Web DevelopersNotes

HTML, JavaScript, SQL போன்ற பல இணைய மொழிகளை பற்றிய தகவல்கள், அடிப்படைகள் இங்கு ஏராளமாக கொட்டி கிடக்கின்றன.
ஒரு இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு தேவையான அனைத்து மொழிகளும், அத்தோடு வடிவமைப்பு பற்றியும் பல பிரிவுகளில் விதம் விதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்

இந்த தளத்திற்கு செல்ல Web DevelopersNotes

3. WebDesign Library

இந்த தளத்தில் Tutorial களை தொடர்ச்சியாக Update செய்துகொண்டிருப்பார்கள். CMS, HTML, CSS, PHP போன்ற பல்வேறு மொழிகள் பற்றி இந்த தளத்தில் சிறப்பான விளக்கத்துடன் சொல்லிதருகிறார்கள். 

இணைய மொழிகளில் உங்கள் அறிவுக்கு ஏற்ப கற்கும் வகையில் ஒவ்வொரு படிநிலையாக பிரித்து தந்திருக்கிறார்கள். Beginners இல் ஆரம்பித்து Professionals வரையானவர்களுக்கான முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த தளம் செல்ல WebDesign Library


4. Quackit

HTML, CSS, Database, XML போன்ற மொழிகளை இந்த தளம் கற்று தருகிறது. 


கையாளுவதற்கு இலகுவான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த தளம், இணைய மொழிகளையும் மிக இலகுவாக, தெளிவாக விளங்கிக்கொள்ளும் வண்ணம் தருகிறது.
இந்த தளம் செல்ல Quackit

5. WebMonkey

இந்த தளத்தில் அனைத்து இணைய மொழிகளை பற்றிய Tutorials ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தளத்தில் “Web Dev & Design” என்னும் பிரிவின் கீழ் Ajax, CSS, HTML5 போன்ற பிரபலமான இணைய மொழிகளை சொல்லி தருகிறார்கள். அத்தோடு கற்கை சம்மந்தமான பல வசதிகளையும் இதில் தருகிறார்கள்

இந்த தளம் செல்ல WebMonkey

6. HTML Code Tutorial

HTML மற்றும் CSS மொழிகளை கற்பிக்கும் இந்த தளத்தில் HTML பற்றிய முழுமையான பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தளம் செல்ல HTML Code Tutorial

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
HTML, Internet Tips, Languages

Post Comment

0 comments: