Tuesday, March 13, 2012

Android தொலைபேசிகளை ஆட்டோமாட்டிக்காக Silent Mode இற்கு மாற்றும் மென்பொருள்- தரவிறக்க


தொலைபேசிகளை எல்லோரும் இரவு வேளைகளில், எம்மை தொந்தரவு செய்யாதிருக்கும்பொருட்டு  Silent Mode இல் வைத்திருப்போம் அல்லவா? இதற்கு தினமும் இரவு வேளைகளில் Manual ஆக Silent Mode இற்கு மாற்றி வைப்போம். ஆனால் Android தொலைபேசிகளில் Automatic ஆக தினமும் இரவுவேளையில் Silent Mode இற்கு மாறிக்கொள்ளும் வகையில் Application ஒன்று வெளிவந்துள்ளது.
Silent Sleep எனப்படும் இந்த Application உங்கள் Android தொலைபேசிகளை Automatic ஆக Silent Mode இற்கு மாற்றுகிறது.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தொலைபேசி Silent Mode இல் இருக்கவேண்டிய நேரம், காலத்தை செட் செய்வது மாத்திரமே.

மேலே உள்ள படத்தின்படி Start Time, End Time என்பதில் தொலைபேசி Silent Mode இல் இருக்கவேண்டிய நேரத்தையும், Day of Week என்பதில் எந்தெந்த நாட்களில் என்பதையும் தெரிவு செய்யவேண்டும்
அடுத்து Silent Mode என்பதில் இரு ஆப்ஷன்கள் உள்ளன. Totally Silent, Vibrate Only என்பவற்றில் விரும்பியதை தெரிவு செய்யலாம்.

முக்கியமான விடயம் இதன்போது Alarm Clock Silent Mode இல் இருக்கவேண்டும். இதற்கு Alarm Clock > Settings சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.

Silent Sleep Application ஐ இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். இதற்கு உங்கள் தொலைபேசியில் Android Apps Laps இற்கு சென்று Silent Sleep என்று தேடி நேரடியாக தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

Silent Sleep தளத்திற்கு செல்ல Silent Sleep

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Android, Mobile tips

Post Comment

0 comments: