Thursday, January 12, 2012

உங்கள் கணினிகளை வைரசிடம் இருந்து பாதுகாக்க- Bitdefender 2012 Review


கணினி நுட்பம் வளர வளர கூடவே கணினிகளை பாதிக்கும் வைரஸ்களும் வளர்ந்து வளர்ந்து பெரும் சவாலை கொடுக்கின்றன. கணினிகளை பாவிப்பதை விட இந்த வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பதிலேயே அனைவரினதும் நேரம் கழிந்துவிடும்.

கணினியை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கவென ஏராளமான ஆன்ரிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. ஆனால் அவற்றில் சிறந்தவற்றை தேடிப்பிடித்து பாவித்தால்தான் வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பை பெறமுடியும். அந்தவகையில் முன்னனியில் இருக்கும் ஒரு அன்ரிவைரஸ் மென்பொருளான Bitdefender Antivirus தனது புதிய பதிப்பான Bitdefender Antivirus Plus 2012 ஐ அன்மையில் வெளியிட்டிருந்தது.

இந்த antivirus மென்பொருளானது பிரபலமான Romania-based software company யினால் வெளியிடப்பட்டு வருகிறது. antivirus, antispyware, personal firewall, privacy control, user control, backup for corporate போன்ற பல வசதிகள் வழமையான Bitdefender மென்பொருளுடன் இணைந்து வருகின்றன.

இவர்களுடைய புதிய வெளியீடான Bitdefender Antivirus Plus 2012 இல் பல புதிய வசதிகளையும் இணைத்துள்ளனர்.

antivirus, antispyware போன்றவற்றில் இருந்து கணினிகளை பாதுகாப்பதோடு Phishing attempts இலிருந்தும் பாதுகாப்பை கொடுக்கிறது. அதோடு பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக தளங்களின் ப்ரோபைலையும் ஸ்பாம் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் சில அடிப்படை வசதிகளையும் Bitdefender Antivirus Plus 2012 உள்ளடக்கியுள்ளது.
Personal Data Filter: இந்த வசதி முக்கியமான கடனட்டை இலக்கங்கள், வங்கி தகவல்கள், இரகசிய தகவல்கள், தனிப்பட்ட தகவல்கள், போன்றவற்றை திருடப்படாமல் பாதுகாக்கிறது.

Chat Encryption: இது உங்கள் தனிப்பட்ட சட்டிங் தொடர்பான பாதுகாப்பை வழங்குகிறது.

Vulnerability Scanner: இந்த வசதி உங்கள் கணினியில் இருக்கும் பாதுகாப்பற்ற, பழுதடைந்த மென்பொருட்களை சரிபார்க்கும். பாதுகாப்பற்ற மென்பொருட்களை நிறுவும்போது அது தொடர்பான எச்சரிக்கையை விடுக்கும். 

Virtualized Browser: இது இணைய பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த அன்ரிவைரஸ் மென்பொருளை தரவிறக்க: Bitdefender Antivirus Plus 2012

இந்த தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் தரவிறக்குவது தொடர்பான விபரங்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். இது ஒரு Trial மென்பொருளாகும்.  மென்பொருளின் விலை 39.95$

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
antivirus, Online Security, software review, Windows

Post Comment

1 comments:

காட்டான் on January 13, 2012 at 3:15 AM said...

எல்லோருக்கும் பயனுள்ள தகவல் ஆனா காசுகட்டிதான் இதை எல்லாம் வாங்கனுமா? ஏன் மாப்பிள இலவச மென் பொருட்கள் பற்றி சொல்லகூடாதா?