Friday, January 13, 2012

ப்ளாக்கரின் Comment Reply வசதியை முழுவதுமாக ஆக்டிவேட் செய்ய


அண்மையில் ப்ளாக்கரில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. Comments இற்கு அந்த Comments இற்கு கீழேயே Reply பண்ணும் வசதி. ஆனால் இந்த வசதி முழுவதுமாக அனைவருக்கும் கிடைக்கவில்லை. சிலருக்கே கிடைத்திருந்தது.

இப்போது அந்த வசதியை அனைவரும் அக்டிவேட் செய்து கொள்ளலாம்.

இதற்கு ப்ளாக்கர் செட்டிங்க்ஸில் சில மாற்றங்களை செய்யவேண்டும்

* Blogger Dashboard - settings- Site Feed என்ற வழியே சென்று Allow Blog Feeds ஐ Full ஆக மாற்றவேண்டும்
* கமெண்ட்ஸ் பொக்ஸை Embedded below post ஆக மாற்றி கொள்ளவேண்டும். Dashboard - Settings - Comments - Comment Form Placement- என்ற வழியே சென்று Embedded below post என்பதை தெரிவு செய்யுங்கள்.


மேற்குறிப்பிட்டவாறு செய்திவிட்டால் ஒரு சிலருக்கே Comments Reply வசதி வருகிறது. இதை எல்லோரும் முழுவதுமாக பெற்றுக்கொள்ள இன்னும் சில வேலைகளை செய்யவேண்டும்.


அதற்கு முதலில் உங்கள் டெம்ப்ளேட்டை முழுவதுமாக தரவிறக்கி கொள்ளுங்கள்
இதற்கு Dashboard - Design - Edit HTML என்றவழியே சென்று Download Full Template என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்ததாக உங்கள் ப்ளாக்கின் விட்ஜெட்ஸ்’ ஐ Default ஆக மாற்றவேண்டும். Dashboard - Design - Edit HTML என்ற வழியே செல்லுங்கள். அங்கு HTML Code இருக்கும் Box இற்கு கீழே இருக்கும் Revert widget templates to default என்பதை கிளிக் பண்ணுங்கள்.


இப்போது எல்லோருக்கும் இந்த வசதி எல்லோருக்கும் ஆக்டிவ் ஆகிவிடும்.


Revert widget templates to default என்பதன் மூலம் நீங்கள் Widget இல் செய்திருந்த மாற்றங்கள் இல்லாது போய்விடும். அதை நீங்கள் விரும்பாவிட்டால் manual ஆக செய்துகொள்ளுங்கள்.


Manual ஆக செய்வதற்கு

நீல வர்ணத்தால்  Highlight செய்யப்பட்ட படிமுறைகளை செய்யுங்கள் அதன் பின்னர்
*Dashboard - Design - Edit HTML என்ற வழியே செல்லுங்கள்...
*Expand Widget Templates ஐ கிளிக் பண்ணுங்கள்
*ctrl+F ஐ அழுத்தி கீழுள்ள வரிகளை கண்டுபிடியுங்கள்

<b:include data='post' name='comments'/> 
கண்டுபிடித்த பின்னர் கீழே தரப்பட்டுள்ள வரிகளை Replace பண்ணிவிடுங்கள்

<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
இப்போது எல்லோருக்கும் இந்த வசதி அக்டிவ் ஆகிவிடும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
blogger tips

Post Comment

0 comments: