Thursday, January 19, 2012

வீழ்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் பிளேக்பெரி


பிளக்பெரி என்ற பெயரை சாதாரணமாக ஒருவாரால் இலகுவில் மறந்து விடமுடியாது. அந்தளவுக்கு அப்பெயர் மக்களிடையே பிரபல்யம் பெற்று  மதிப்பு மிக்க நாமத்தை கையடக்க தொலைபேசி வரலாற்றில் பெற்றிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2003 ம் ஆண்டில் பிளக்பெரியின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்த நிலையில் இருந்தது. இதனால் பிளக்பெரியின் விற்பனையும் அக்காலத்தில் சூடுபிடித்திருந்தது. அதிலும் தொழில் முறை பயனாளர்களிடையே இது பெரும் வரவேற்ப்பு பெற்று காணப்பட்டது. பிளக்பெரி தாயாரிப்புக்கள் யாவும் ஆர்.ஐ.எம் ( R.I.M ) Research in Motion  நிறுவனமே தாயாரித்து வருகின்றது. இவ் நிறுவனம் கனடா நாட்டைச் சோ்ந்தது. இது தொலைத் தொடர்பு மற்றும் கம்பி இல்லாத சாதன தாயாரிப்பு நிறுவனமாகும்





இவ்வாறு பலவாறான பெயரும் புகழும் பெற்ற இந் நிறுவனம் இன்றைய காலகட்டத்தி்ல் தனது வளர்ச்சிப் பாதையில் வீழ்ச்சியை கண்டுகொண்டு இருக்கிறது.

பிளெக்பெரி கையடக்க தொலைபேசியில் பயன்படுத்தப்படும் பிளெக்பெரி மெசஞ்ஞர் சேவை வசதி, இச் சேவையின் மூலம் தகவல்களை அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்ப கூடியதாக உள்ளது. இந்த வசதியின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் தகவல்களை அனுப்பும் போது அவ் மென்பொருளின் குறியீட்டுச் சொற்களை ( என்கிறிப்ஷன்)  Encription செய்ய முடியாது. அதுமட்டுமின்றி பிளக்பெரி மெசஞ்ஞர் பாவானையாளர்கள் பின் (  PIN ) இரகசிய குறியீட்டு இலக்கமொன்றை அவர்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவர். இதனால் பகிரப்படும் தரவுகள் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புக்கள் உண்டாகின்றன.

ஆனால் இந்த செயன்முறைகள் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபிய வில் தடைசெய்ய முற்பட்டனர். இவ்வாறான செயன்முறை நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தால். இருந்தும் ஆர்.ஐ.எம் ( RIM )  நிறுவனம் அந்நாட்டுடன் மேற்கொண்ட சில உடன்படிக்கைகளை அடுத்து அம் முயற்சி சவுதி அரேபியாவில் கைவிடப்பட்டது. இவ்வாறான சில இடைஞ்சல்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்த நிறுவனத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஓரே நோக்கோடு அப்பிள் (APPLE ), அன்ரொயிட் ( Android) நிறுவனம் தமது தயாரிப்புக்களை சந்தையில் உலாவா விட்டது. இதனால் பிளக்பெரி நிறுவனம் தமது சந்தை வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிட்டது. இந்நிலையில் கடந்த வருடம் (2011) ம்ஆண்டில் விற்பனையான மொத்த கையடக்க தொலைபேசி சாதனங்களில் 3% மட்டுமே பிளெக்பெரிக்குரியது. பிளெக்பெரி 3% பெற்றிருப்பது. ஒரு கவலைக்கிடமான விடயமாக உள்ளது.

அதுமட்டுமின்றி பிளேபுக் என்னும் டெப்பிலட் கணனியை உருவாக்கி அதிலும் பிளக்பெரி நிறுவனம் தோல்வி கண்டது. மேலும் தொடர்ந்து முன்று நாட்கள் பிளேக்பெரி சேவர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பிளேக்பெரி பாவனையாளார்கள் பெரும் அசௌகரியத்தை அடைந்தனர். இதன் மூலமும் பிளேக்பெரி கையடக்க தொலைபேசிகளின் சந்தை பெறுமதி குறைவடைந்து காணப்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு 100 டொலார்கள் பெறுமதியான அப்பிளிகேசன்களை (  Application ) களை இலவசமாக வழங்கி அதிலும் தோல்வி கண்டது.


இவற்றை எல்லாம் ஈடுசெய்யும் பொருட்டு தற்போது பிளேக்பெரி நிறுவனம் பிளேக்பெரி 10 எனும் கையடக்க தொலைபேசியினை வெளியிடுவதற்கு முன் வந்துள்ளார்கள். இவை பிளேக்பெரி லண்டன், பிளேக்பெரி மிலன் ஆகிய மொடல்களில் வெளிவர உள்ளது. பிளேக்பரி லண்டன் எனும் கையடக்க தொலை பேசி Dual core 1.5 Ghz CPU , 1GB of RAM, 16 GB of Storage, and Front and rear Camaras. கொண்ட கையடக்க தொலைபேசியை வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் அப்பிள், அன்ரொயிட் மொபைல் சாதனங்களின் வளர்ச்சி மென்மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் பயனில்லை என்பது போல் பிளெக்பெரி நிறுவனம் இன்னும் பல நவீனரக மொபைல் சாதனங்களை அறிமுகப்படுத்தி சந்தையில் வெற்றி பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் .

2011 ஆண்டு பிளேக்பெரி நிறுவனத்துக்கு பயனளிக்காத ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டு ( 2012 ) ஆண்டு பிளேக்பெரி நிறுவனத்துக்கு வெற்றிகரமான ஆணடாக அமையுமா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Black Berry, Mobile tips

Post Comment

1 comments:

Unknown on January 20, 2012 at 5:30 PM said...

பாா்க்கலாம்