Tuesday, January 17, 2012

Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையும் அதற்கான தீர்வும்


Windows இயங்குதளத்தை பாவிப்பவர்கள் அடிக்கடி ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியிருப்பார்கள். புதிதாக வன்பொருள் (Hardware) ஏதாவது நிறுவும்போதோ அல்லது கணினியில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதோ திடீரென நீல ஸ்கிரீனில் irql_not_less_or_equal in Xp அல்லது irql_not_less_or_equal in Windows7 என்ற எச்சரிக்கையுடன் கணினி  Restart ஆகும். இதற்கு காரணம் கணினியில் நிறுவப்பட்ட Hardware இற்குரிய பொருத்தமான Driver நிறுவப்படாமையே ஆகும். சரியான Driver நிறுவப்படாதவிடத்து அது உங்கள் கணினியை கிராஷ் செய்கிறது. இதன்போதே Windows இந்த எச்சரிக்கையை காட்டுகிறது.

உண்மையில் இதற்குரிய காரணம் என்னவென்றால்,சில Driver கள் பாதுகாக்கப்பட்ட, மெமறி பகுதியில் நுழைய முயற்சிக்கின்றன. அதனாலேயே இந்த எச்சரிக்கை காட்டப்படுகிறது.

எச்சரிக்கை கீழ்க்கண்டவாறு இருக்கும்



IRQL_NOT_LESS_OR_EQUAL
**** STOP 0x0000000A (0x00000010, 0x00000002, 0x00000000, 0x8051AA58)



இந்த பிரச்சினையை தோற்றுவிக்கும் காரணிகள்
  • Hardware - RAM அல்லது Graphic Card பழுதடைந்திருக்கலாம்
  • Drivers - நிறுவப்பட்டுள்ள Driver கள் பொருத்தமற்றதாகவோ அல்லது காலாவதியானதாகவோ இருக்கலாம்.
  • Antivirus - ஒன்றுக்கு மேற்பட்ட அன்ரிவைரஸ் நிறுவப்பட்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்படலாம்
  • Windows அப்டேட்
  • CPU Over Heating
இந்த பிரச்சினைகளை எப்படி சரி செய்வது

Tip 1
இந்த பிரச்சினை ஏற்படுவதற்கு சமீப காலத்தில் புதிதாகா ஏதாவது Hardware இணைத்திருந்தால் (eg:- RAM, Graphic Card, Printer, sound card, Network interface card) அவற்றை நீக்கிவிட்டு கணினியை Restart பண்ணுங்கள்

Tip 2
கணினியை Restart செய்து SafeMode இல் Boot பண்ணுங்கள். (இதற்கு கணினி Boot ஆகும்போது F8 கீயை அழுத்துங்கள்). Safe Mode இல் குறைந்த அளவான Driver களே இயக்க நிலையில் இருக்கும்.

Windows SafeMode இல் Boot ஆகியதும் Desktop இல் MyComputer மீது Right Click செய்து Properties என்பதை தெரிவுசெய்யுங்கள். அடுத்துவரும் விண்டோவில் Hardware > Device Manager என்ற வழியே செல்லுங்கள். (Windows7 எனில் MyComputer இல் Right Click செய்து Manage > Device Manage என்றவழியே செல்லுங்கள் ) Device Manager இல் நிறுவப்பட்டுள்ள அத்தனை Driver களும் காணப்படும். அதில் பழுதடைந்த Driver கள் மஞ்சல் வர்ணத்தில் அடையாளமிட்டு காட்டப்பட்டிருக்கும். அவற்றை நீக்கிவிட்டு மறுபடியும் install பண்ணுங்கள். அல்லது Update பண்ணுங்கள்.

Tip 3
ஒன்றுக்கு மேற்பட்ட அன்ரிவைரஸ் மென்பொருட்களை நிறுவியிருந்தால் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அன்ரிவைரஸ் மென்பொருட்களை நீக்கிவிடுங்கள்.

Tip 4
சிலவேளைகளில் Windows ஐ அப்டேட் செய்யும்போது ஏற்படும் தவறுகளாலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகவே Start > All Programs > Accessories > System Tools  > System restore என்ற வழியே சென்று windows ஐ Restore பண்ணிக்கொள்ளுங்கள்.

Tip 5
CPU OverHeat ஆவதாலும் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. BIOS பகுதிக்கு சென்று கணினியின்  system temperature ஐ சரிபாருங்கள்.

Tip 6
இதன் மேலும் இந்த பிரச்சினை தொடருமானால் BIOS ஐ Flash செய்யவேண்டும். இதற்கு அனுபவம் மிக்க தொழில்நுட்பவியலாளரை நாடுங்கள்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Compuer Tips, Windows

Post Comment

1 comments:

நிரூபன் on January 17, 2012 at 2:30 PM said...

வணக்கம் மது,
வேலை செய்து கொண்டிருக்கும் போது எனது கணினியும், நீங்கள் இங்கே குறிப்பிட்டது போல Freeze ஆவது இயல்பு.
நல்லதோர் விளக்கப் பதிவு,
நானும் இதன் அடிப்படையில் என் கணினியைச் சீர்படுத்துகிறேன்.