Sunday, January 8, 2012

Facebook இல் புதிய பிரச்சினை.. தீர்ப்பது எப்படி


Facebook இல் அண்மைக்காலமாக ஒரு பிரச்சினை அனைத்து பாவனையாளர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. ஏதாவது இணைப்புக்களை Facebook இல் Share பண்ணும்போது Captcha Code கேட்டு கணக்கை Verify பண்ணும்படி கேட்கும். இப்படி அடிக்கடி கேட்பதால் பெரும் இடைஞ்சலாக இருக்கும்.

இதற்கு காரணம் தற்போது Facebook தன் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதே. சாதாரணமான பாவனையாளர்களைவிட Facebook அப்ளிகேஷன் வடிவில் வரும் Spam இணைப்புக்களை கிளிக் செய்தவர்களுக்கு இந்த பிரச்சினை தொடர்ந்து இருக்கும். அவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கும் ஸ்பாம் பரவுவதை தடுப்பதற்கான ஏற்பாடே இந்த Captcha Code.

இதை எப்படி நீக்குவது?

இதற்கு உங்கள் கணக்கு போலியானது அல்ல என்று நிரூபிக்கவேண்டும். phone verification ஐ உங்கள் கணக்கிற்கு கொடுத்துவிட்டால் உங்கள் கணக்கு Verify செய்யப்பட்டு Captcha Code நிறுத்தப்படும்.

உங்கள் Facebook கணக்கை திறந்துகொள்ளுங்கள்.

Acount Settings - Mobile என்ற வழியே சென்று Add a Phone என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பாஸ்வேர்டை கொடுங்கள்
அதன்பின்னர் வரும் விண்டோவில் உங்கள் நாட்டினையும் தொலைபேசி இலக்கத்தையும் கொடுங்கள்
  உங்கள் மொபைல் இலக்கத்தை கொடுத்து Next ஐ கிளிக் பண்ணியதும், நீங்கள் கொடுத்த மொபைல் இலக்கத்துக்கு ஒரு Verification Code வரும். அடுத்து வரும் விண்டோவில் அந்த  Verification Code ஐ கொடுத்து Next ஐ கொடுங்கள்

அவ்வளவுதான்.. இப்போது உங்கள் Facebook கணக்கு Verify செய்யப்பட்டுவிடும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook

Post Comment

0 comments: