Tuesday, January 31, 2012

Twitter இற்கான Firefox இன் 5 அட்டகாசமான அப்ளிக்கேஷன்


சமூக வலைத்தளங்களில் Facebook இற்கு அடுத்தபடியாக, நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துவரும் சமூக வலைத்தளம்தான் Twitter. உலகளாவிய ரீதியில் 9 ஆவது இடத்தையும், அமெரிக்காவில் 8 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த வருட கணிப்பீட்டின்படி Twitter சமூக வலைத்தளமானது 300 மில்லியன் பாவனையாளர்களை கடந்துவிட்டிருந்தது.

இந்த Twitter தளத்தை இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தவென Firfox உலாவியில் ஏராளமான Add-Ons, Plug-Ins, Toolbar போன்றன உள்ளன.
அவற்றில் சிறந்த 5 அப்ளிகேஷன்

Lu.ly
Lu.ly என்பது Firefox இற்கான Twitter இன் டூல்பார் ஆகும்.இது Firefox இல் மாத்திரமன்றி, Internet Explorer, Safari போன்றவற்றிலும் ஒத்துழைக்கக்கூடியது. Twitter மாத்திரமன்றி Facebook ஐயும் இதில் உபயோகிக்கலாம். Tweet, Retweet என்பவற்றை இதிலிருந்தே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. அத்தோடு Fecebook நண்பர்களுக்கு இதிலிருந்தே தகவல் அனுப்பலாம், Status Update பண்ணலாம்.

இந்த Toolbar ஐ பெற Click Here

Tweet Line
Tweet Line எனப்படும் இந்த Add-on Firefox இல் மாத்திரமே வேலை செய்யும். இது Twitter Updates ஐ headline போல் காண்பிக்கும். இதன்மூலம் எந்தவேளையிலும் Twitter Updates ஐ பெற்றுக்கொள்வதோடு அவற்றுக்கான Reply மற்றும் Retweets ஐயும் இதிலேயே மேற்கொள்ளலாம்.

இந்த Add-on ஐ பெற Click Here

GetGlue
இந்த Add-on உம் Firefox இல் மாத்திரமே வேலைசெய்யக்கூடியது. அதோடு இதை Twitter மற்றும் Facebook இரண்டிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், புத்தகங்கள், விமர்சனங்கள் போன்றவற்றையும் Twitter, Facebook இல்  பகிர்ந்துகொள்ளலாம். அதோடு பிரபல்யமான திரைப்படங்கள், விமர்சனங்கள் போன்றவற்றையும் இந்த Add onபரிந்துரை செய்கிறது.

இந்த Add- on ஐ பெற Click Here

Echofon For Firefox
இந்த Add on நீங்கள் பல்வேறு Device களில் ( Computer, iPad, iPhone, etc) இருந்து செய்யும் Tweet களை Automatic ஆக ஒருங்கிணைக்கிறது. இது Sidebar போன்று உலாவியின் பக்கத்தில் இருக்கும். அதை கிளிக் பண்ணுவதன் மூலம் Show/Hide பண்ணிக்கொள்ளலாம். இதன் மூலமும் Tweets, Retweets பண்ணிக்கொள்ளலாம்.

இந்த Add- on ஐ பெற Click Here

Power Twitter
இதன்மூலம் Twitter இல் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையும் சேர் பண்ணிக்கொள்ளலாம். அத்துடன் சேர் பண்ணும் இணைப்புக்களின் URL ஐ கூட Short பண்ணிக்கொள்ளலாம். மேலதிகமாக Facebook, Youtube, Filckr போன்றவற்றின் Updates ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த Add- on ஐ பெற்றுக்கொள்ள Click Here

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
Firefox, Firefox Application, Internet Tips, Twitter

Post Comment

1 comments:

Mahan.Thamesh on February 1, 2012 at 4:53 AM said...

அசத்தலான பதிவு பாஸ்