Wednesday, January 11, 2012

பதிவுகளை பிரபலமாக்க ஒரு அதிரடி ஐடியா- Use Hootsuite


எமது பதிவுகள் ஏனையவர்களை சென்றடைவதற்கும், பிரபலமடைவதற்கும் திரட்டிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் அந்த திரட்டிகளை விட சமூக வலைத்தளங்களே ஏராளமான வாசகர்களை எமது பதிவுகள் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மையாகும். எமது சமூக வலைத்தள கணக்குகளிலும், பேஸ்புக்கில் இருக்கும் குழுக்களிலும் இதுவரை நாம் பதிவுகளை பகிர்ந்து வந்திருப்போம்.


ஒவ்வொரு கணக்காக Login பண்ணி, பேஸ்புக்கில் ஒவ்வொரு குழுமமாக திறந்து பெரும்பாடு பட்டு எமது பதிவுகளை Share பண்ணியிருப்போம். இப்போது ஒரு இணையத்தளம் இந்த வேலைகளை இலகுவாக்குகிறது. 

HootSuite என்ற இணையத்தளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்து உங்கள் சமூக தள கணக்குகளை அதில் இணைத்துவிட்டால் உங்கள் பதிவுகளை எல்லா சமூகத்தளங்களுக்கும் (Facebook, Twitter, Orkut,Linkedin) அனைத்து பேஸ்புக் குழுமங்களுக்கும் ஒரே கிளிக்கில் Share பண்ணலாம்.

அது மட்டுமல்ல.. அனைத்து சமூக தளங்களையும் ஒரே தளத்தில் பார்வையிடலாம். tweets, Comments, Likes அனைத்தும் அதிலேயே மேற்கொள்ளலாம். 


கணக்கை ஆரம்பித்து உள்நுழைந்ததும் மேலே படத்தில் காட்டப்பட்டது போன்ற விண்டோ ஒன்று தோன்றும். அதில் Create a New Tab என்பதை தெரிவு செய்து அடுத்து வரும் விண்டோவில் Add a Stream என்பதை தெரிவு செய்யுங்கள்.

மேலே காட்டப்பட்டது போன்ற விண்டோ தோன்றும். அதில் Add Profile என்பதை தெரிவு செய்து உங்கள் சமூக வலைத்தள கணக்குகளை இணைத்துக்கொள்ளுங்கள். முக்கிய விடயம், இலவச பயனர்கள் ஆகக்கூடுதலாக ஐந்து கணக்குகளையே இணைக்கலாம். அதுவும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பின்னர் பணம் செலுத்து கணக்கை புதுப்பித்து கொள்ளவேண்டும் ($5.99/month)

எப்படி பதிவுகளை Share பண்ணுவது?
சமூக வலைத்தள கணக்குகளை இணைத்ததும் முகப்பு பக்கத்திற்கு வாருங்கள்

மேற்காட்டப்பட்ட படத்தில் இருப்பது போன்று வலதுபக்கத்தில் நீங்கள் இணைத்த சமூக வலைத்தள கணக்குகள், குழுக்கள் காணப்படும். அதன் கீழ் உள்ள All என்பதை கிளிக் பண்ணி அனைத்து குழுக்களையும் தெரிவு செய்துகொள்ளுங்கள். பின்னர் இடது பக்கத்தில் உள்ள Add a Link என்ற இடத்தில் உங்கள் பதிவின் இணைப்பை கொடுத்து Shrink பண்ணுங்கள். அதன்பின் Send Now என்பதை கிளிக் பண்ணினால் பதிவுகள் 5 நிமிடத்தில் அனைத்து தளங்களிலும், குழுக்களிலும் share பண்ணப்பட்டுவிடும்.

முக்கிய குறிப்பு : இப்படி Share பண்ணும்போது Facebook குழுக்களுக்கு ஒரு தடவையும் ஏனைய சமூக தளங்களுக்கு ஒரு தடவையும் என பிரித்து Share பண்ணலாம். காரணம் Facebook இல் Share பண்ணப்படும் லிங்கின் Preview காட்டப்படும். ஏனைய சமூக தளங்களோடு சேர்த்து Share பண்ணும்போது Preview இல்லாமல் போய்விடும்.

அத்தோடு இதில் உள்ள இன்னுமொரு விசேட அம்சம் Schedule Share ஆகும்.

மேற்குறிப்பிட்டவாறு Share பண்ணப்படவேண்டிய காலத்தை குறிப்பிட்டு விட்டால், குறிக்கப்பட்ட அந்த காலத்தில் Automatic ஆக Share பண்ணப்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
blogger tips, HootSuite

Post Comment

5 comments:

நிரூபன் on January 12, 2012 at 12:04 AM said...

வணக்கம் மது,
நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் on January 12, 2012 at 9:15 PM said...

பதிவை பகிர்தலுக்கான பதிவு.... பயனுள்ள தகவல்

Suresh Subramanian on January 12, 2012 at 10:03 PM said...

nice post.. Please read my tamil kavithaigal in www.rishvan.com

Suresh Subramanian on January 12, 2012 at 10:10 PM said...

Thanks to share... Please read my tamil kavithaigal in www.rishvan.com .

Thava on January 17, 2012 at 6:32 PM said...

நல்ல பயனுள்ள பதிவு.நன்றி.