Tuesday, January 10, 2012

Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிப்பதற்கான வழி


Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்கலாமா? ஆம் அழிக்கலாம். அதுவும் இலகுவாக அழிக்கலாம்.

பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். அல்லது சிலர் ஆரம்பத்தில் ஒரு கணக்கை வைத்திருந்துவிட்டு பின்னர் வேறு ஒரு கணக்கை உபயோகிக்கலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்ப்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.


நிரந்தரமாக அழிப்பது எப்படி?

இலகுவாக நிரந்தரமாக அகற்றிவிடலாம்

எச்சரிக்கை: நிரந்தரமாக அகற்றினால் உங்கள் புகைப்படங்கள், தரவுகள் யாவும் அழிக்கப்பட்டுவிடும். கணக்கை மீளப்பெறமுடியாது.

* உங்கள் Facebook கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள்
* இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
* அடுத்து வரும் விண்டோவில் Delete My Account என்பதை தெரிவு செய்யுங்கள்
* Delete My Account என்பதை தெரிவு செய்ததும் வரும் விண்டோவில் உங்கள் பாஸ்வேர்டையும், Captcha Code ஐயும் கொடுங்கள். கொடுத்தபின் okay என்பதை கொடுங்கள். உங்களுக்கு இரு எச்சரிக்கை செய்தி வரும். உங்கள் கணக்கு 14 நாட்களின் பின் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும். ஆனால் அடுத்த 14 நாட்களுக்குள் மீளவும் நீங்கள் login செய்தால் உங்கள் கணக்கு மீண்டும் Active ஆக்கப்படும். ஆகவே 14 நாட்கள் login பண்ணுவதை தவிர்த்தால் கணக்கு நிரந்தரமாகவே அழிக்கப்பட்டுவிடும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook, Online Security

Post Comment

3 comments:

sj van on January 10, 2012 at 9:14 PM said...

gmail கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்கலாமா?

Mathuran on January 12, 2012 at 12:28 AM said...

@ Thiru Arun

இந்த இணைப்பில் பாருங்கள்
http://www.sirakuhal.com/2011/07/how-to-delete-google-account.html

திண்டுக்கல் தனபாலன் on January 13, 2012 at 5:24 PM said...

எனக்கு பயனுள்ள தகவல்! நன்றி நண்பரே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"